• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • World Chocolate Day 2021 : அருமையான சந்தர்ப்பத்தை அன்புக்குரியவர்களுடன் கொண்டாடுவதற்கான யோசனைகள்!

World Chocolate Day 2021 : அருமையான சந்தர்ப்பத்தை அன்புக்குரியவர்களுடன் கொண்டாடுவதற்கான யோசனைகள்!

உலக சாக்லேட் தினம்

உலக சாக்லேட் தினம்

உலக சாக்லெட் தினம் 2009 முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 7 அன்று கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இன்று உலகம் முழுவதும் சாக்லெட் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

  • Share this:
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசம் இன்றி அனைவரையும் ஈர்க்கும் மிகவும் பிரபலமான தின்பண்டங்களில் சாக்லெட் ஒன்றாகும். சாக்லெட்டுகள் தனித்துவமானவை மற்றும் மேஜிக் திறன் கொண்டவை என்று சொன்னால் மிகையாகாது. சாக்லெட்களின் சுவை நாம் இருக்கும் சூழலை மறக்க செய்து மகிழ்ச்சியை தர கூடியவை. மில்க் சாக்லெட் மற்றும் டார்க் சாக்லெட் போன்ற சாக்லெட் வகைகள் பொதுவாக ஸ்நாக்ஸாக எடுத்துக் கொள்ளப்பட்டு வருகின்றன. இதை விரும்பாதவர்களே இருக்க முடியாது என்ற பெருமையை பெற்றுள்ளது சாக்லேட்.

உலக சாக்லெட் தினம் 2009 முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 7 அன்று கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இன்று உலகம் முழுவதும் சாக்லெட் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. எந்தவொரு முக்கியமான நிகழ்ச்சிகளும் சாக்லெட்டுகள் இல்லாமல் முழுமையடையாது. மகிழ்ச்சியின் அளவை உயர்த்தி அனைவர் முகத்திலும் புன்னகையை வரவழைக்கிறது சாக்லெட். எந்தவொரு சிறப்பு சந்தர்ப்பத்தையும் சாக்லெட்டுகளை கொண்டு நாம் தனித்துவமானதாக மற்றும் வாரஸ்யமானதாக ஆக்கி கொள்ளலாம். உலகம் முழுவதும் சாக்லெட் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், இந்த இனிமையான சந்தர்ப்பத்தை கொண்டாடி மகிழ விரும்பும் சாக்லெட் பிரியர்களாக நீங்கள் இருந்தால் அதற்கான சில வழிகளை பாருங்கள்.



சாக்கோலிசியஸ் பொக்கே (Chocolicious Bouquet):

உங்கள் அன்பானவர்களுக்கு மலர்களுடன் கூடிய பொக்கே தருவது என்பது பொதுவான ஒன்று. உலக சாக்லெட் தினமான இன்று உங்கள் அன்புக்குரியவர்களுக்கு பிடித்த சாக்லெட்களை வாங்கி அதை பொக்கேவாக தயார் செய்து ருசியான சாக்லெட்டுகளுடன் கூடிய ஒரு சாக்லெட் பொக்கேவை அவர்களுக்கு பரிசாக அளித்து அசத்தலாம்.

 

இனிப்பான சாக்லேட் அன்பான மெஸேஜ்:

சாக்லேட் பிரியர்களாக இருக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கு பிடித்த எண்ணற்ற சாக்லெட்கள் மற்றும் சாக்லெட் கப் கேக்களுடன் கூடிய ஒரு பர்சனலைஸ்டு பாக்ஸ் அல்லது Bag-ஐ தயார் செய்வதன் மூலம் இன்றைய தினத்தை மறக்க முடியாத நாளாக அவர்களுக்கு மாற்றலாம். அத்துடன் நீங்கள் அவர்கள் மீது வைத்திருக்கும் அன்பை வார்த்தைகளால் வெளிப்படுத்தி ஒரு கார்ட் அல்லது சிந்தனைமிக்க மெசேஜை சேர்த்து அவர்களுக்கு சர்ப்ரைஸாக கிப்ட் அளிக்கலாம்.

World Chocolate Day 2021 : டார்க் சாக்லெட் கோவிட் மன அழுத்ததை குறைக்க உதவுமா..?

ஹோம்மேட் சாக்லெட்ஸ் :

இந்த உலக சாக்லெட் தினத்தில் உங்கள் குடும்பத்தினரை மகிழ்விக்க ஆன்லைனில் உங்களுக்கு விருப்பமான ஹோம்மேட் சாக்லெட்ஸ் செய்முறையை பாருங்கள். பொதுவாக ஹோம்மேட் சாக்லெட்களை கோகோ பவுடர், மில்க் அல்லது வெள்ளை சாக்லெட், டார்க் சாக்லெட் ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கலாம். வீட்டிலேயே சாக்லெட் தயாரித்து மாலை வீடு திரும்பும் குடும்ப உறுப்பினர்களை ஆச்சரியப்படுத்துங்கள்.



சாக்லெட் ஸ்பா :

நீங்களும், உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் இன்றைய தினம் வீட்டிலேயே சாக்லெட் ஸ்பா சிகிச்சையை பெறுவது சாக்லெட் தினத்தை கொண்டாட மற்றொரு சிறந்த வழி. அடிப்படையில் சாக்லெட்டுகள் ஆக்ஸிஜனேற்றம் மிக்கவை. மேலும் செல்லுலைட்டை (cellulite)அகற்ற உதவும் தியோப்ரோமைனை (theobromine) கொண்டுள்ளன. சாக்லெட்களில் காணப்படும் கொலாஜன் மற்றும் எலாஸ்டின் ஆகியவை சருமத்திற்கு நன்மை அளித்து வயதான தோற்றம் ஏற்படுவதை தாமதப்படுத்துகிறது. எனவே சாக்லெட் ஸ்பா கிட் ஒன்றுடன் உங்களுக்கு விருப்பமான பாடல்களை கேட்டு சிறப்பான ஸ்பா அனுபவத்தை பெறுங்கள்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: