முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / World Breastfeeding Week 2022 : தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கும் குழந்தைக்கும் ஏற்படும் நன்மைகள் என்ன?

World Breastfeeding Week 2022 : தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கும் குழந்தைக்கும் ஏற்படும் நன்மைகள் என்ன?

உலக தாய்ப்பால் தினம்

உலக தாய்ப்பால் தினம்

தாய்ப்பால் என்பது தாய் சேய் இருவருக்கும் உடலளவிலும் மனதளவிலும் நன்மையளிக்கும்

  • 2-MIN READ
  • Last Updated :
  • India , India

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 7 ஆம் தேதி வரை தொடர்ந்து 7 நாள்களுக்கு உலக தாய்ப்பால் வாரம் கொண்டாடப்படுகிறது. தாய்ப்பால் குடிப்பதால் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிப்பதோடு, தாய்மார்களுக்கும் மார்பக புற்றுநோய் அபாயம் குறைகிறது.

என்ன தான் குழந்தைகள் விதவிதமான பெயர்களுடன் இருக்கும் உணவுகளைச் சாப்பிட்டாலும், தாய்ப்பாலுக்கு ஈடு எதுவும் இல்லை. 10 மாதம் தாயின் கருவறையிலிருந்து வெளியே வந்தவுடன்,தாயின் மார்பில் பால் குடிப்பதற்குத் தத்தளிக்கும் தருணத்தை வார்த்தைகளால் கூற முடியாது. இது தாய்க்கும், சேய்க்கும் இடையே உள்ள உறவின் பிணைப்பை நமக்கு எடுத்துரைக்கும்.

குழந்தைப்பிறந்தது முதல் தொடர்ந்து 6 மாதங்களுக்குத் தாய்ப்பால் குடிப்பது குழந்தைகளின் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிப்பதோடு ஒவ்வாமை, ஆஸ்துமா போன்ற பிரச்சனைகளின் அபாயத்தைக்குறைக்கிறது என்கின்றனர் மருத்துவர்கள். தாய்ப்பால் கிடைக்கவில்லை என்றால் குழந்தைகள் பல உடல் நலப்பிரச்சனைகளுக்கு ஆளாகிறார்கள்.

Also Read : வெளிநாடு பயணத்தில் ஆசையா? விசா இல்லாமல் பயணம் செய்யக் கூடிய 10 ஆசிய நாடுகளின் பட்டியல் இதோ !

இந்த சூழலில் தான் தாய்ப்பால் கொடுப்பதை ஆதரிப்பதற்காகவும், ஊக்குவிப்பதற்காகவும் உலக சுகாதார அமைப்பு மற்றும் ஐக்கிய சர்வதேச குழந்தைகள் நல அமைப்பு கடந்த 1990 ல் ஒரு ஆணையை உருவாக்கியது. அதன்படி கடந்த 1992 ஆம் ஆண்டு வாபா என்ற அமைப்பால் முதல் முறையாக ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 7 ஆம் தேதி வரை தாய்ப்பால் வாரத்தைக் கொண்டாடினர். இந்த வாரங்களில் தாய்ப்பாலின் முக்கியத்துவம் மற்றும் அதில் உள்ள நன்மைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. ஆரம்பத்தில் சுமார் 70 நாடுகள் இந்த வாரத்தை நினைவு கூர்ந்து வந்த நிலையில், தற்போது 170 நாடுகளால் தாய்ப்பால் கொண்டாடப்படுகிறது.

இவ்வாறு ஒவ்வொரு ஆண்டும் ஒரு கருப்பொருளை முன்வைத்து தாய்ப்பால் வாரம் கொண்டாடப்படும் நிலையில் இந்த ஆண்டு அதாவது உலக தாய்ப்பால் வாரம் 2022க்கு “ தாய்ப்பால் கொடுப்போம் வாருங்கள்“ என்ற தலைப்போடு கொண்டாட்டம் இன்று முதல் துவங்கியது. இப்படி உலக நாடுகள் முழுவதும் தாய்ப்பாலின் முக்கியத்துவத்தைப் பறைசாற்றிவரும் வேளையில் தாய்ப்பால் கொடுப்பதால் குழந்தைகள் மற்றும் தாய்மார்களுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்பது பற்றி தெரிந்துகொள்வோம்.

வெளிப்படையாக இருக்க வேண்டும் : முறையாக பாலூட்டுவது எப்படி என்பது குறித்து, உங்களை சுற்றியுள்ள அனுபவம் வாய்ந்த பெண்கள் பலர் அறிவுரை சொல்லக் கூடும். அவை சரியானவை என்றாலும் கூட, எடுத்த எடுப்பிலேயே அப்படியே பின்பற்றிவிட வேண்டும் என நினைக்காதீர்கள். அந்த உத்தி உங்களுக்கும், உங்கள் குழந்தைக்கும் பொருத்தமாக இருக்கிறதா என்பதை பொறுமையாக ஆராய்ந்து பார்த்து செயல்படுத்த வேண்டும். வாய்வழி தகவல்களைக் காட்டிலும், பாலூட்டுவது தொடர்பாக புத்தகங்கள் மற்றும் செய்திகளைப் படித்து தெரிந்து கொள்ளலாம்.

தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு ஏற்படும் நன்மைகள்:

கர்ப்பகாலத்தில் தாய்மார்களின் எடை அதிகரிக்கும். குழந்தைப் பிறந்து தாய்ப்பால் கொடுக்க ஆரம்பித்தவுடன் எடை விரைவாகக்குறைய ஆரம்பிக்கும்.

பிரசவத்திற்குப் பின் தாய்மார்களுக்கு அதிகப்படியான இரத்தபோக்கு மற்றும் சிறுநீர் பாதையில் நோய்த்தொற்று ஏற்படும். தாய்ப்பால் கொடுக்கும் போது இப்பிரச்சனைகளின் அபாயம் குறைகிறது.

தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு இரத்த சோகை, கருப்பை புற்றுநோய், மார்பக புற்றுநோய், முடக்கு வாதம், லூபஸ், எண்டோமெட்ரியோசிஸ், நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் இருதய நோய்களை உருவாக்கும் வாய்ப்புகள் குறையக்கூடும்.

தாய்மார்களுக்கு மன அழுத்தம் குறைவதோடு. தன்னம்பிக்கை மற்றும் சுய மரியாதையை அதிகரிக்கிறது. இதோடு தாய் மற்றும் குழந்தைக்கு இடையே உள்ள பிணைப்பை அதிகரிக்கிறது.

காட்சி படம்

தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு ஏற்படும் நன்மைகள்:

குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது. பிற தொற்றுநோய்களிலிருந்து பாதுகாக்கிறது.

மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, இரைப்பை குடல் அழற்சி, சளி ,நிமோனியா மற்றும் இருமல் போன்ற சுவாச நோய்கள் உள்படப் பல உடல் நலப்பிரச்சனைகளின் அபாயத்தைக்குறைக்கிறது.

குழந்தைகளின் மூளை வளர்ச்சியை அதிகரிக்கிறது. மேலும் ஒவ்வாமை, அழற்சி, ஆஸ்துமா ஆகியவற்றின் அபாயத்தைக்குறைக்கிறது.

குழந்தைகளுக்கு ஏற்படும் பார்வை குறைப்பாட்டை சரிசெய்ய உதவுகிறது. மேலும் தீடிரென குழந்தை இறப்பை ஏற்படுத்தும் (Sudden Infant Death Syndrome (SIDS) நோய்த்தொற்று அபாயத்தைக் குறைக்கிறது.

Also Read :சின்னம்மை மற்றும் குரங்கம்மைக்கு வித்தியாசம் தெரியாமல் குழம்பும் மக்கள்... இதுதான் அறிகுறி...

தாய், சேய்க்கான உறவை மேலும் வலுப்படுத்துகிறது. தாய் மற்றும் சேய் என்றாலே பாசத்தின் பிணைப்பு தான். அதிலும் ஆசையோடு தாய்ப்பால் கொடுக்கும் போது இத்தனை நன்மைகள் நமக்குக் கிடைக்கிறது என்றால் இனி தாய்ப்பால் கொடுப்பதை யாரும் நிறுத்திவிடாதீர்கள். குழந்தைகள் பெரியதாகி விட்டால் என்ன வேண்டுமானாலும் கொடுத்து வளர்க்கலாம். ஆனால் பிறந்தவுடன் அவர்களுக்குத் தாய்ப்பால் அவசியம் என்பதை நாம் புரிந்துகொண்டு இனி அனைவரும் செயல்படுவோம்.

First published:

Tags: Breastfeeding, Child Care, Mother Feed, New born baby, World breastfeeding week