உலக ஆஸ்துமா தினம் - அறிகுறிகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள்!

கோப்புப் படம்

மாா்பு கூட்டின் உட்பக்கமாக அமைந்த மூச்சுக் குழாய், நுரையீரல் ஆகிய சுவாச உறுப்புகளை ஆஸ்துமா நோய் பாதிக்கிறது.

  • News18
  • Last Updated :
  • Share this:
ஆஸ்துமா என்பது நுரையீரலின் நாள்பட்ட நோயாகும். உலகம் முழுவதிலும் 34 கோடி மக்கள் ஆஸ்துமா நோயால் அவதிப்படுகின்றனர். அதுமட்டுமின்றி ஆண்டுதோறும் நான்கு லட்சத்திற்கு அதிகமானோா் இந்த நோயால் உயிரிழப்பதாக உலக சுகாதார நிறுவனம் தகவல் தெரிவிக்கிறது. மாா்பு கூட்டின் உட்பக்கமாக அமைந்த மூச்சுக் குழாய், நுரையீரல் ஆகிய சுவாச உறுப்புகளை ஆஸ்துமா நோய் பாதிக்கிறது.

இதனால் மூச்சு விடுவதில் சிரமம், மூச்சுத் திணறல், இருமல், மாா்பு இறுக்கம் ஆகிய அறிகுறிகள் இரவு நேரங்களில் அல்லது அதிகாலை வேளையில் ஏற்படுத்தி துன்புறுத்தும். இந்த நோய் சுவாசப்பாதைகளை தூண்டுகிறது மற்றும் அவை குறுகியதாகிவிடுகிறது, இதனால் ஆஸ்துமா பாதித்த நபருக்கு சுவாசிக்க கடினமாகிறது. ஆஸ்துமாவால் கடுமையாக பாதித்த நபரால் சுறுசுறுப்பாக இருக்க முடியாது மற்றும் பேசுவது கடினம்.

ஆஸ்துமாவின் சில முக்கிய அறிகுறிகள் பின்வருமாறு :

ஆஸ்துமா நோய் ஒரு நபரின் நுரையீரல், மூச்சுக்குழாய்களில் வீக்கத்தை ஏற்படுத்துகிறது, இதனால் அவை கடுமையாக சேதமடைகின்றன.

சாதாரண சுவாசத்தின் போது, ​​உங்கள் சுவாசப்பாதைகளை சுற்றியுள்ள தசைகள் தளர்வாகிறது, இது சுவாசத்தின் சுலபமான இயக்கத்திற்கு வழிவகுக்கிறது, ஆனால் ஆஸ்துமா காரணமாக, தசைகள் கடினமடைந்து சுவாசத்தை கடினமாக்குகிறது.

நோயால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு மென்மையான காற்றுப்பாதைகளும் உள்ளன, அவை சிறிய அளவிலான தூண்டுதலின் போது அடிக்கடி அதிகமாகவும், குறுகலாகவும் இருக்கும்.

ஆஸ்துமாவின் அறிகுறிகள் :

ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு நபருக்கும் லேசானது முதல் கடுமையானது வரை அறிகுறிகள் வித்தியாசப்படும். எனினும் ஒரு சில பொதுவான அறிகுறிகள் குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.,

* வெளிர் அல்லது நீல விரல் நகங்கள், உதடுகள் அல்லது முகம்
அசாதாரண சுவாசம்.
* நீங்கள் சுவாசிக்கும்போது உங்கள் விலா எலும்புகளைச் சுற்றியுள்ள தோல் உள்நோக்கி இழுக்கும்.
*பேசுவதில், நடப்பதில் அல்லது சுவாசிப்பதில் சிக்கல்

மேற்கண்ட அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும்.

Also read... கொரோனவை தடுக்க ஆயுர்வேத மூலிகை உணவுகள்... மத்திய அரசு பரிந்துரை!

ஆஸ்துமா நோயாளிகளை பாதிக்கும் காரணிகள் :

* காற்று மாசுபடுத்திகள்
* புகையிலை
* ஒவ்வாமை
* காய்ச்சல், சளி, சைனஸ் போன்ற நோய்த்தொற்றுகள்
* திரவியங்கள் உள்ளிட்ட எரிச்சலூட்டும் வலுவான வாசனை
* வானிலை மாற்றங்கள் அல்லது குளிர்ந்த காற்று
* ஆஸ்பிரின் போன்ற சில மருந்துகள்
* சோகம், பதட்டம் அல்லது மன அழுத்தம்

ஆஸ்துமா நோய் ஏற்பட்ட சிலருக்கு நீண்ட நாட்கள் எவ்வித அறிகுறிகளும் தோன்றாது. சில நபர்கள் சளி போன்ற தொற்றுநோய்களின் போது அல்லது உடற்பயிற்சியின் போது ஆஸ்துமாவின் அறிகுறிகளை உணரக்கூடும்

ஆஸ்துமாவை தடுக்க சில பயனுள்ள குறிப்புகள்:

* உங்கள் மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகளை தவறாமல் எடுத்து கொள்ளுங்கள்.
* உங்கள் சுவாசத்தை தொடர்ந்து கண்காணிக்கவும்
* நிமோனியா மற்றும் காய்ச்சலுக்கான தடுப்பூசியை செலுத்தி கொள்ளுங்கள்.
* ஒவ்வாமை மற்றும் மாசுக்களில் இருந்து விலகி இருங்கள்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: