ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

உலக மூட்டுவலி தினம் 2022: ஆரம்ப அறிகுறிகளை தெரிந்து கொள்ளுங்கள்

உலக மூட்டுவலி தினம் 2022: ஆரம்ப அறிகுறிகளை தெரிந்து கொள்ளுங்கள்

World Arthritis Day 2022: மூட்டுவலிக்கு உரிய நேரத்தில் சிகிச்சை எடுக்காமல் இருந்தால்,  ஒருவரின் இயக்கத்தைக் குறைத்து, நேராக உட்காருவதைக் கூட கடினமாக்கும்.

World Arthritis Day 2022: மூட்டுவலிக்கு உரிய நேரத்தில் சிகிச்சை எடுக்காமல் இருந்தால், ஒருவரின் இயக்கத்தைக் குறைத்து, நேராக உட்காருவதைக் கூட கடினமாக்கும்.

World Arthritis Day 2022: மூட்டுவலிக்கு உரிய நேரத்தில் சிகிச்சை எடுக்காமல் இருந்தால், ஒருவரின் இயக்கத்தைக் குறைத்து, நேராக உட்காருவதைக் கூட கடினமாக்கும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India

40 வயதைக் கடந்து விட்டால் எல்லோருக்கும் வரும் பொதுவான ஒரு பிரச்சனை மூட்டு வலி. காலை மடக்கி உட்கார முடியவில்லை, நடக்க முடியவில்லை, நேராக நிற்க முடியவில்லை என்று பெரும் தொல்லையாக இருக்கும்.  இந்தப் பிரச்னைகளுக்கு சிகிச்சையளிக்கப்படாமல் விடப்பட்டால், மூட்டுவலி ஒருவரின் இயக்கத்தைக் குறைத்து, நேராக உட்காருவதைக் கூட கடினமாக்கும். இந்த எலும்பு தொடர்பான நிலையின் அறிகுறிகள் பொதுவாக வயது ஆக ஆக மோசமடைகிறது. இந்த மோசமான சுகாதார நிலையைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த, ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 12-ஆம் தேதி உலக மூட்டுவலி தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்த ஆண்டு உலக மூட்டுவலி தினத்தின் கருப்பொருள் 'உங்கள் கையில் தான் உள்ளது. உடனடியாக நடவடிக்கை எடுங்கள்' என்பதாகும். இந்த தீம் கீல்வாதம் உள்ளவர்கள், அவர்களது குடும்பங்கள், பராமரிப்பாளர்கள் மற்றும் மூட்டுவலி நோயாளிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

முதன்முறையாக தாய்ப்பாலில் மைக்ரோபிளாஸ்டிக் கண்டுபிடிப்பு!

கீல்வாதத்தின் ஆரம்ப அறிகுறிகளையும் அறிகுறிகளையும் புரிந்துகொள்வது, சரியான நேரத்தில் முக்கியமான தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க உதவும். இது மிகவும் தாமதமாகிவிடும் முன் தனிநபர்கள் மருத்துவ உதவியை நாட உதவும். 2022 உலக மூட்டுவலி தினத்தில், கீல்வாதத்தின் ஆரம்ப அறிகுறிகளைத் தெரிந்து கொள்வோம்.

கீல்வாதம் ஒருவரின் மூட்டுகளை பாதிக்கிறது. மூட்டுகள் என்றால் கால் மட்டும் இல்லை. எலும்புகள் சந்திக்கும் எல்லா இடங்களும் மூட்டுகள் தான். கை, கால் என்று எல்லா மூட்டுகளும் பாதிப்புக்குள்ளாகும். இவற்றில் சில:

1. மூட்டு வலி

மருத்துவத்தில் ஆர்த்ரால்ஜியா என்று அழைக்கப்படும், மூட்டு வலி என்பது எலும்பு மூட்டுகளில் ஏற்படும் வலியின் முதல் அறிகுறியாகும். பொதுவாக எரியும் உணர்வுடன் ஒரு மந்தமான வலி ஏற்படும். மூட்டுகளை தொடர்ந்து பயன்படுத்தும் போது வலி அதிகரிக்கும்.

2. வீக்கம்

மூட்டுவலி காரணமாக மூட்டுகள் வலிக்கும்போது, ​​அவை வீங்கக்கூடும். மூட்டுகளில் லூப்ரிகண்டான சினோவியல் எனும் திரவம், மற்றவர்களைக் காட்டிலும் மூட்டுவலி நோயாளிகளுக்கு அதிகமாக இருக்கும். இதன் விளைவாக மூட்டு வீக்கம் ஏற்படுகிறது. இந்த வீக்கத்தால் நோயாளியின் நடை பாதிக்கும். மாறுதல் பெரும்.

எப்போதுமே கூலா ஜாலியா இருக்கணுமா? இந்த 7 விஷயங்களை ஃபாலோ பண்ணுங்க!

3. சிவத்தல்

சில நோயாளிகள் மூட்டுகளை சுற்றியுள்ள சிவந்திருப்பதை கவனிக்கலாம். இது உடலில் உள்ள செல்கள் மூட்டின் வீக்கத்தினால் மாறுதல் அடைந்து சிவப்பாக மாறிவிடுகிறது.

4. விறைப்பு

பல நோயாளிகள் காலையில் எழுந்தவுடன் மூட்டுகள் விறைத்து விடும். மழை பெய்யும்போது அல்லது ஈரப்பதத்தில் மாற்றம் ஏற்பட்டால் இந்த விறைப்பும் வலியும் அதிகரிக்கும். இதுவும் ஒரு அறிகுறி தான்

Published by:Ilakkiya GP
First published:

Tags: Arthritis Pain, Joint pain