நைட் ஷிப்ட் வேலை பார்ப்பது கேன்சர் வருவதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறதா..? அதிர்ச்சி தரும் ஆய்வு

மாதிரி படம்

சிறுவயது முதலே காலை எழுந்து பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று விட்டு, 3 வேளையும் தவறாமல் சாப்பிட்டு விட்டு இரவு 10 மணிக்குள் படுக்கைக்கு செல்வதை தான் வழக்கமாக வைத்திருப்போம்.

  • Share this:
பொதுவாக பகல் நேரங்களில் வேலை பார்ப்பவர்களை விட இரவு நேரங்களில் வேலை பார்ப்பவர்களுக்கு வெகுவிரைவில் ஏராளமான உடல்நல கோளாறுகள் ஏற்படுவதை பார்க்கலாம். பெரும்பாலும் அலுவலக தொழிலாளர்கள் பகல் நேரங்களில் வேலை பார்த்தாலும் மருத்துவ துறையினர், கண்ட்ரோல் ரூம், விமானிகள் மற்றும் விமான ஊழியர்கள், பெரிய பெரிய ஆலைகள் என பல துறை தொழிலாளர்கள் பகல் மற்றும் இரவு நேர ஷிப்ட்டுகளில் வேலை பார்த்து வருகிறார்கள்.

ஆனால் காலப்போக்கில் இந்த பட்டியலில் ஐ.டி ஊழியர்கள் உட்பட பல்வேறு துறையினரும் சேர்ந்து தற்போது இரவு நேரப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு பெண்களும் விதிவிலக்கல்ல. நம் சிறுவயது முதலே காலை எழுந்து பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று விட்டு, 3 வேளையும் தவறாமல் சாப்பிட்டு விட்டு இரவு 10 மணிக்குள் படுக்கைக்கு செல்வதை தான் வழக்கமாக வைத்திருப்போம்.

ஆனால் குடும்ப பாரத்தை சுமக்கும் பொருட்டு இந்த நிலை அப்படியே தலைகீழாக மாறிவிடுகிறது. சிலர் மாலை வேலைக்கு சென்று அதிகாலை 4 மணிக்கு வீட்டுக்கு திரும்புவது அல்லது இரவு முழுவதும் கண்விழித்து வேலை செய்து விட்டு காலை 8 மணிக்கு மேல் வீடு திரும்புவது என்று. கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு மேலாக இரவில் தூங்கிய நம் பழக்கத்தை வேலைக்காக மாற்றி கொள்கின்றனர். இது உடலிற்கு மிக பெரிய ஆபத்துகளை ஏற்படுத்துகிறது.சமீபத்தில் வாஷிங்டன் ஸ்டேட் யுனிவர்சிட்டியின் ஆராய்ச்சியாளர்கள் குழு மேற்கொண்ட ஒரு ஆய்வில் வழக்கமாக பகல் நேரங்களில் வேலை செய்பவர்களுடன் ஒப்பிடும்`போது இரவு நேர தொழிலாளர்களுக்கு புற்றுநோய் வருவதற்கான அதிக வாய்ப்பு இருப்பது தெரிய வந்துள்ளது. அதன்படி இரவு கண்விழித்து வேலைபார்ப்பது நம் உடலில் உள்ள புற்றுநோய் தொடர்பான மரபணுக்களின் 24 மணிநேர இயற்கையான செயல்பாட்டை சீர்குலைப்பதாகவும், இதனால் இரவு நேரதொழிலாளர்களின் உடலில் உள்ள டி.என்.ஏ-க்கள் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகின்றன. அதே போல பாதிக்கபட்ட டி.என்.ஏ-வை தானே சரிசெய்து கொள்ளும் உடலின் இயற்கை வழிமுறையும் பாதிக்கப்படுகிறது என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறி உள்ளனர்.

இதய நோய்களின் அபாயத்தைத் தடுக்கவேண்டுமா? மீன் சாப்பிடலாம் என ஆய்வில் தகவல்!

இது தொடர்பான ஆய்விற்காக பகல் மற்றும் இரவு நேரங்களில் வேலை பார்க்க நன்கு ஆரோக்கியமான தன்னார்வலர்கள் பயன்படுத்தப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்னும் கூடுதலான ஆராய்ச்சிகள் செய்யப்பட வேண்டியிருந்தாலும், தற்போதைய இந்த கண்டுபிடிப்புகள் இரவு ஷிப்ட் தொழிலாளர்களில் புற்றுநோயைத் தடுக்கவும் சிகிச்சையளிக்கவும் உதவும் என்றும் கூறப்பட்டுள்ளது.இந்த ஆவின் மூலம் இரவு ஷிப்ட் தொழிலாளர்களில் புற்றுநோய் அதிகமாக உள்ளது என்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளது என்றும், இதன் மூலம் உலக சுகாதார அமைப்பின் புற்றுநோய்க்கான சர்வதேச ஆராய்ச்சி நிறுவனம், இரவு ஷிப்ட் வேலையை புற்றுநோயாக வகைப்படுத்த வழிவகுத்துள்ளதாகவும் கூறியுள்ளனர். உடலிலுள்ள ஒவ்வொரு உயிரணுவிற்க்கும் அதன் சொந்த உள்ளமைக்கப்பட்ட கடிகாரம் உள்ளது. இந்த செல்லுலார் கடிகாரம், கடிகார மரபணுக்கள்(clock genes) எனப்படும் மரபணுக்களை உள்ளடக்கியது, இவற்றின் செயல்பாட்டு நிலைகள் பகல் அல்லது இரவு நேரத்துடன் மாறுபடும். புற்றுநோயுடன் தொடர்புடைய மரபணுக்களின் வெளிப்பாடும் இது போல இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். ஆய்விற்காக பயன்படுத்தப்பட்டவர்களில் பாதி பேர் உருவகப்படுத்தப்பட்ட 3 நாள் இரவு ஷிப்ட் வேலையில் ஈடுபட்டனர்.

மற்ற பாதி பேர் உருவகப்படுத்தப்பட்ட 3 நாள் பகல் ஷிப்ட் வேலையில் ஈடுபடுத்தப்பட்டனர். பின் இரு தரப்பினருக்கும் ஒரே மாதிரியான உணவு வகைகள் வழங்கப்பட்டன. மேலும் ரத்த பரிசிசோதனை சில குறிப்பிட்ட இடைவெளியில் செய்யப்பட்டது. இந்த ரத்த மாதிரிகளிலிருந்து எடுக்கப்பட்ட வெள்ளை ரத்த அணுக்களின் பகுப்பாய்வுகள், புற்றுநோய் தொடர்பான பல மரபணுக்களின் செயல்பாடுகள் பகல் ஷிப்ட் நிலையுடன் ஒப்பிடும்போது இரவு ஷிப்ட் நிலையில் மோசமான அளவில் சேதமடைந்துள்ளதை காட்டியுள்ளது. நைட் ஷிப்ட் தொழிலாளர்கள் கணிசமான சுகாதார அபாயங்களை எதிர்கொள்கின்றனர்., வளர்சிதை மாற்றங்கள் மற்றும் இதய நோய்களின் அபாயங்கள் முதல் மனநல கோளாறுகள் மற்றும் புற்றுநோய் வரை என்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

 
Published by:Sivaranjani E
First published: