எப்போதும் வேலை வேலை என இருப்பவரா நீங்கள்..? உங்களுக்கான செய்திதான் இது..

மாதிரி படம்

பொதுவாக மற்ற பணியாளர்களோடு ஒப்பிடும்போது ஒர்க்கஹாலிக் பணியாளர்கள் வாரத்திற்கு, ஏழு மற்றும் அதற்கு மேற்பட்ட மணிநேரம் அதிகமாக வேலை செய்கிறார்கள்.

  • Share this:
பொதுவாக ஒரு நிறுவனத்தால் தங்களது பணியாளர்களுக்குப் படிப்பு மற்றும் அறிவு சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கு தேவையான பயிற்சியை வழங்க முடியும். ஆனால், மனப்பான்மையை வளர்ப்பதற்கான பயிற்சிகள் ஏதும் வழங்கப்படுவதில்லை. புத்திசாலித்தனம் மற்றும் திறமையைவிட தனிமனித மனப்பான்மையே தலைசிறந்த நிறுவனங்கள் உருவாவதற்கு வழிவகை செய்கிறது.

ஆனால், நிறுவனங்களோ துரதிர்ஷ்டவசமாக என்ன படித்தார்கள், எங்கே படித்தார்கள், எவ்வளவு புத்திசாலியாக இருக்கிறார்கள் என்ற அளவீட்டை வைத்து மட்டுமே பணியாளர்களைத் தேர்வு செய்கின்றன. அதனாலேயே இன்றைக்கு வெற்றிகரமாக செயல்படும் மற்றும் செயல்படாத நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் கடும் மன அழுத்தத்துக்கு உள்ளாகி இருக்கின்றனர். அந்தவகையில் பின்வரும் ஆய்வு கூறுவதை நாம் தெரிந்துகொள்வது அவசியம்.

செல்ஃபோனுக்கு அடிமையா நீங்கள்? விடுபட 5 சூப்பரான வழிமுறைகள்

நீங்கள் பணியே கதி என இருப்பவராக  (workaholic) இருந்தால், மனச்சோர்வு, பதட்டம் அல்லது தூக்கக் கோளாறு போன்ற எதிர்மறையான மன மற்றும் உடல் ஆரோக்கிய விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கிறது. International Journal of Environmental Research and Public Health-ல் வெளியிடப்பட்ட இந்த ஆய்வில், லோ ஒர்க் அடிக்க்ஷன் (Low work addiction) அபாயத்துடன் இருப்பவர்களோடு ஒப்பிடும்போது ஹையர் ஒர்க் அடிக்க்ஷன் (Higher work addiction) உள்ளவர்களுக்கு மனச்சோர்வு ஏற்படுவதற்கான ஆபத்து இரு மடங்கு அதிகரித்திருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல தங்களது வேலைக்கு அடிமையாகும் பணியாளர்களின் தூக்கத்தின் தரம் லோ ஒர்க் அடிக்க்ஷன் பணியாளர்களைவிட குறைவாக இருந்ததாக கூறப்படுகிறது.குறிப்பாக ஆண்களை விட பெண்களுக்கு கிட்டத்தட்ட இரண்டு மடங்கு ஒர்க் அடிக்க்ஷன் ஆபத்து இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். இது குறித்து ரஷ்யாவில் உள்ள உயர்நிலை பொருளாதாரப் பள்ளியைச் (Higher School of Economics in Russia) சேர்ந்த ஆராய்ச்சியாளர் மோர்டெசா சர்காபி (Morteza Charkhabi) கூறியதாவது, "ஒர்க் அடிக்க்ஷன் அபாயத்தை உருவாக்கக்கூடிய மிக முக்கியமான காரணியாக ஜாப் டிமாண்ட்கள் (job demands) இருக்கக்கூடும் என்பதை நாங்கள் கண்டறிந்தோம். எனவே இந்த காரணி கட்டுப்படுத்தப்பட வேண்டும் அல்லது எச்.ஆர். ஸ்டாப் மற்றும் சைக்காலஜிஸ்ட் ( (HR staff, psychologists) போன்ற ஆர்கனைசேஷன் மேனேஜரால் (organization's manager) இன்வெஸ்டிகேட் செய்யப்பட வேண்டும் " என்று கூறுகிறார்.

பொதுவாக மற்ற பணியாளர்களோடு ஒப்பிடும்போது ஒர்க்கஹாலிக் பணியாளர்கள் வாரத்திற்கு, ஏழு மற்றும் அதற்கு மேற்பட்ட மணிநேரம் அதிகமாக வேலை செய்கிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது. ஆய்வினை பொறுத்தவரை, ஜாப்-டிமாண்ட்-கண்ட்ரோல் -சப்போர்ட் மாதிரி (Job Demand-Control-Support model - JDCS) பரிந்துரைத்த நான்கு வேலை வகைகளின் அடிப்படையில் பணி மற்றும் மன ஆரோக்கியம் ஆகியவற்றுடன் ஜாப் அடிக்க்ஷன் ஆபத்து எந்த அளவிற்கு தொடர்புடையது என்பதை நிரூபிக்க ஆய்வு நடத்தப்பட்டது.JDCS மாடல் நான்கு வெவ்வேறு வேலை சூழல்களை (four quadrants) பரிந்துரைத்தது. இதில் பணியாளர்கள் வெவ்வேறு நிலை ஜாப் டிமாண்டுகள் மற்றும் ஜாப் கண்ட்ரோலை அனுபவித்தனர். அவை, passive, low-strain, active, and tense/job-strain ஆகும். ஜாப் கண்ட்ரோல் என்பது ஒரு ஊழியர் எந்த அளவுக்கு வேலை செய்வதை உணருகிறார் என்பதை பொறுத்தது. இது தொடர்பாக நடத்தப்பட்ட ஒரு கிராஸ்-செக்ஷனல் ஆய்வில் (cross-sectional study) பங்கேற்க ஒப்புக்கொண்ட 1,580 (11.8 சதவீதம்) பிரெஞ்சு பணியாளர்ககளில் 187 பேரிடமிருந்து ஆராய்ச்சியாளர்கள் தரவுகளை சேகரித்தனர்.

ஆய்வுக்கு பங்கேற்றவர்கள் அனைவரையும் அவர்கள் செய்யும் பணி குழுக்களின் அடிப்படையில் பிரித்து, ஜாப் அடிக்க்ஷன் ஆபத்து, மன மற்றும் உடல் ஆரோக்கிய விளைவுகளுக்கு இடையிலான தொடர்பை ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்தனர். மேலும், அவர்கள் செய்யும் வேலையில் அதிக ஜாப் டிமாண்டுகள், ஜாப் அடிக்க்ஷன் அபாயம் அதிகரித்திருப்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். ஆனால் ஜாப் கண்ட்ரோல் லெவலை பொறுத்தவரை அதிக அபாயம் ஏற்படவில்லை. passive மற்றும் low-strain பணியாளர்களைக் காட்டிலும் active மற்றும் high-strain பணியாளர்களுக்கு ஒர்க் அடிக்க்ஷன் ஆபத்து அதிகமாக உள்ளது என்பதையும் ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Sivaranjani E
First published: