• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • ஆபிஸ் போகாமல் WFH வேலை பார்க்க நாங்க தயார்... கருத்து கணிப்பில் 53% ஊழியர்கள் தகவல்!

ஆபிஸ் போகாமல் WFH வேலை பார்க்க நாங்க தயார்... கருத்து கணிப்பில் 53% ஊழியர்கள் தகவல்!

கோப்புப் படம்

கோப்புப் படம்

கருத்து கணிப்பில் பங்கேற்ற சுமார் 53.4% பேர் வீட்டிலிருந்து தொடர்ந்து பணியாற்ற தயாராக உள்ளதாக கூறினர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
கொரோனா தொற்று உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்களுடைய வாழ்வதாரமான வேலைகளை கடுமையாக பாதித்துள்ளது. ஒருபுறம் வேலையிழப்பு, ஊதிய குறைப்பு என்று பலரது வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மறுபுறம் வீட்டிலிருந்து வேலை பார்க்கும் "வொர்க் ஃப்ரம் ஹோம்" கலாச்சாரம் அதிகரித்து கொண்டே உள்ளது. கொரோனா தாக்கத்தால் பல்வேறு நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களுக்கு கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக வொர்க் ஃப்ரம் ஹோம் முறையில் வேலைகளை கொடுத்து வருகின்றன.

எனவே ஊழியர்கள் வேலைக்காக அலைந்து திரியாமல் தொற்று அச்சமின்றி வீட்டிலிருந்து வேலை செய்வதன் மூலம் பல்வேறு நன்மைகளை அனுபவித்து வருகின்றனர். எனினும் தனிமைப்படுத்தப்பட்ட 4 சுவர்களுக்குள்ளே. வொர்க் ஃப்ரம் ஹோம் பல நன்மைகளை கொண்டிருந்தாலும், அலுவலக தோழர்கள் இன்றி அவ்வப்போது சிரித்து பேசி ரிலாக்ஸ் செய்து விட்டு வேலையே தொடரும் பழக்கமின்றி, சரியான நேரத்தில் கிடைக்கும் பிரேக் இன்றி 8 மணி நேரத்தையும் தாண்டி பலரும் தொடர்ந்து பலமணி நேரங்கள் வேலை பார்க்கும் நிலையையும் கொண்டுள்ளது.

இருப்பினும் இதுபோன்ற குறைகளை களைய வீடியோ கான்பிரன்சிங் மற்றும் மெய்நிகர் வேடிக்கை நிகழ்வுகள் உள்ளிட்டவை அவ்வப்போது நடத்தப்படுகின்றன. எப்படியோ மெது மெதுவாக வொர்க் ஃப்ரம் ஹோம் முறையை பலரும் ஏற்றுக்கொண்டுள்ள நிலையில், தடுப்பூசியின் வருகை மீண்டும் அலுவலகங்களுக்கு நேரில் சென்று வேலை பார்க்கும் சூழலை மீண்டும் யதார்த்தமாக்க உள்ளது. ஆனால் ஊழியர்கள் இதற்கு தயாராக உள்ளார்களா என்ற கேள்வியுடன் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பின் முடிவுகள் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கருத்து கணிப்பில் பங்கேற்ற சுமார் 53.4% பேர் வீட்டிலிருந்து தொடர்ந்து பணியாற்ற தயாராக உள்ளதாக கூறினர். அதே சமயம் 46.6% பேர் அலுவலகம் சென்று வேலைகளை பார்ப்பதற்கு தயாராக உள்ளனர். கருத்து கணிப்பில் பங்கேற்ற பெண் மென்பொருள் பொறியாளர் ஒருவர் கூறுகையில், வீட்டிலிருந்தே வேலை செய்வதால் குழந்தைகளையும் பார்த்து கொள்ள முடிகிறது.இது எனக்கு திருப்தியை அளிக்கிறது. டேபிள், நாற்காலி போன்றவை இல்லாமல் மெத்தையில் உட்கார்ந்து கொண்டே எளிதாக வேலை செய்ய முடிகிறது என்றார். ஆனால் பிரதீப் என்பவர் கூறும் போது, வீட்டில் இயல்பாக எழும் சத்தங்கள் மற்றும் சில தொந்தரவுகள் வீட்டில் வேலை செய்வதை நாளுக்கு நாள் கடினமாக்கி வருகிறது. குறிப்பிட்ட அலுவலக இடத்தில் வேலை செய்வது எவ்வளவு முக்கியம் என்பது இதனால் புரிகிறது. எனவே அலுவலகம் சென்று வேலை பார்ப்பதேயே விரும்புவதாக கூறுகிறார்.

வேலைத்திறன் எப்படி?

வீட்டிலிருந்து வேலை பார்க்கும் போது பெரும்பாலும் அமைதியான பணிச்சூழல் இல்லாதிருப்பதால் வொர்க் அவுட்புட் தடைபடுவதாக கருதப்படுகிறது. இருப்பினும் 71.3% மக்கள் வொர்க் அவுட்புட் பாதிக்கப்படுகிறது என்ற கருத்தில் முழுமையாக உடன்படவில்லை. தொழில்நுட்ப வளர்ச்சி, புதியதாக கண்டறியப்பட்டுள்ள அப்ளிகேஷன்கள் மற்றும் டிவைஸ்கள் மூலம் அலுவலக சகாக்களை தொடருபு கொண்டு பணிகளை உடனுக்குடன் முடிப்பது எளிதாகி விட்டது. கொரோனா காலத்தில் வீடியோ கான்பரன்சிங் முறை வேளைகளில் மிகுந்த பலனளித்துள்ளது. எனவே வீட்டிலிருந்தபடி வேலை பார்ப்பதால் ஊழியர்களின் வேலைத்திறன் பாதிக்கப்படவில்லை என்று ஒருதரப்பு கூறுகிறது.

ஆனால் ஒரு தரப்பு எவ்வளவு நல்ல அப்ளிகேஷன்களை பயன்படுத்தி வேலை பார்த்தாலும், குழுக்களுடன் அலுவலகங்களில் தொடர்பு கொள்வதன் மூலம் பெறும் அறிவை வீட்டிலிருந்து வேலை செய்வதன் மூலம் பெற முடியாது என்று அடித்து கூறுகிறது. எனினும் அலுவலகத்தில் பணியாற்றுவது அவசியம் என்று நம்புபவர்களுக்கும், இந்த நம்பிக்கை இல்லாதவர்களுக்கும் இடையே 1.3% மட்டுமே வித்தியாசம் இருப்பதால், மக்கள் சிறந்ததாக கருதுவது எதை என்பது சொல்வது கடினம்.

எதிர்கால வாய்ப்பு..

தடுப்பூசி வந்து விட்டாலும் தொற்றின் தாக்கம் இன்னும் பல மாதங்கள் திடரும் என்று எதிர்பார்க்கப்படுவதால் சமூக இடைவெளி என்ற முன்னெச்சரிக்கையை கடைபிடிக்க வொர்க் ஃப்ரம் ஹோம் மற்றும் அலுவலகம் வந்து வேலை செய்வது என்ற இரண்டையும் கலந்து ஊழியர்கள் தங்கள் வேலைகளை தொடருமாறு கேட்டுக்கொள்ளப்படலாம். ஏனென்றால் உலகெங்கிலும் உள்ள சில நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை அல்லது 3 நாட்கள் அலுவலகத்திலும், மீதி நாட்கள் தங்கள் வீட்டிலிருந்தும் வேலைகளை செய்யச் சொல்லியுள்ளன.

Also read... WFH காரணமாக பத்தில் 4 இந்திய பெண்கள் கவலை தொடர்பான பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர்- ஆய்வு

64.2% பேர் வீட்டிலிருந்து வேலை செய்யும் திறனை சாதகமாக பதிவு செய்துள்ளனர். இன்சென்டிவ் தொகை அல்லது அலுவலக நடவடிக்கைகளில் ஈடுபடுவதை விட. மக்கள் வொர்க் ஃப்ரம் ஹோம் போன்ற ஒரு நெகிழ்வான வேலை மாதிரியை நோக்கி செல்கிறார்கள். அலுவலகங்களுக்கு தவறாமல் போவதை விட, வீட்டிலிருந்து வேலை செய்வது சிறந்த வழி என ஒரு பெரிய அளவிலான ஊழியர்கள் நினைக்கிறார்கள்.

தொழில்நுட்ப முன்னேற்றங்கள் துணையுடன் வேலை பார்ப்பதால் வேலை உற்பத்தித்திறன் கீழ்நோக்கி செல்லும் வாய்ப்பு மிகவும் குறைவு என்று ஊழியர்கள் கருதுகிறார்கள். அலுவலகம் செல்லாமல் தொலைதூரம் இருந்து பார்க்கும் வேலைகளின் எதிர்காலம் பிரகாசமாக உள்ளதால் எதிர்வரும் காலத்தில் ஊழியர்கள் வொர்க் ஃப்ரம் ஹோம் அல்லது புதிய கலப்பின வேலை மாதிரியை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்க வேண்டும்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: