அனைவரும் வீட்டில் ஒர்க் ஃபிரம் ஹோமியில் இயங்கிக் கொண்டிருக்கிறோம். வீட்டிலேயே இருப்பதால் உடல் உழைப்பு என்பதும் குறைந்துவிட்டது. குறிப்பாக ஒர்க் ஃபிரம் ஹோமில் பலர் அலுவலக நேரத்தைக் காட்டிலும் கூடுதலாகவே வேலை செய்கின்றனர். நீண்ட நேரம் அர்ந்து இருப்பது கூட அவர்களுக்கு தெரிவதில்லை. இதனால் பல நோய்கள் வரும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
குறிப்பாக உடல் பருமனுக்கு பலரும் ஆளாகக்கூடும். இதனை தவிர்க்க நீங்கள் நாற்காலியில் அமர்ந்தபடியேவும் சில பயிற்சிகளை செய்யலாம். இதனால் முதுகுவலி, தோல்பட்டை வலி, கழுத்து வலிகள் கூட இருக்காது. அதோடு உடலுக்கும் பயிற்சி கொடுத்ததாக இருக்கும்.
ஒர்க் ஃபிரம் ஹோமில் இருப்பவர்களுக்காகவே ருஜுடா திவேகர் பல உடற்பயிற்சிகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து பகிர்ந்து வருகிறார். இவர் பாலிவுட் பிரபலங்கள் பலருக்கும் ஊட்டச்சத்து நிபுணராக இருக்கிறார்.
எடை இழப்பு Vs கொழுப்பு இழப்பு : இரண்டிற்கும் என்ன வித்தியாசம்..? நீங்கள் எதை பின்பற்ற வேண்டும்..?
அந்த பதிவில் நாற்காலியில் அமர்ந்தவாறு முதுகு வலி, தோல்பட்டை வலிகளுக்கு நிவாரணியாக இந்தப் பயிற்சிகளி செய்து காட்டுகிறார். இதை அரை மணி நேரம் அல்லது ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறையேனும் செய்வது உடலுக்கு சுருசுருப்பைத் தரும்.
இதோ அந்த வீடியோ....
View this post on Instagram
மேலே பகிர்ந்துள்ள வீடியோவைத் தொடர்ந்து ஆரோக்கியமான உணவு வகைகளை சாப்பிடுங்கள். காய்கறிகள், பழங்கள், நட்ஸ் வகைகள், கீரை போன்ற ஊட்டச்சத்துமிக்க உணவுகளை சாப்பிடுங்கள். அதோடு அடிக்கடி தண்ணீர் குடியுங்கள். உடலை நீரேற்றத்துடன் வைத்துக்கொள்வது அவசியம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Exercise, Work From Home