ஊரடங்கால் பலரும் வீட்டில் இருந்தபடி அலுவலக வேலைகளை செய்து வருகிறனர். அலுவலகம் சென்றால்தான் குளிப்பது, தூய உடை என காலை எழுந்ததும் மும்முரமாகத் தயாராகிறார்கள். தற்போது வீட்டில் இருப்பதால் வீடு தானே என எழுந்ததும் முகத்தைக் கழுவிக்கொண்டு லேப்டாப் முன் அமர்ந்துகொள்கிறார்கள்.
உண்மையில் அலுவலகம் செல்வது போல் உங்களை நீங்கள் சுத்தமாகவும், நல்ல புது உடை அணிந்துகொண்டு வேலை செய்வதுதான் உங்களின் வேலைத்திறனை அதிகரிக்கும். அதோடு இன்னும் பல நன்மைகளும் உள்ளன அவை என்னென்ன பார்க்கலாம்.
நீங்கள் காலை எழுந்ததும் இரவு உடையோடு அல்லது வீட்டி அணியும் டி.ஷர்ட், பைஜாமா என அணிந்து வேலை செய்வது அலுவக வேலைக்கும் வீட்டில் இருக்கும் உணர்வுக்கும் வித்யாசம் இருக்காது. அந்த உடையில் இருக்கும்போது மூளை தூங்குவதற்கான எண்ணத்தில்தான் சோர்வுடன் இருக்கும். வேலையில் கவனம் செலுத்த முடியாது.
ஆனால் காலை எழுந்ததும் அலுவலகம் செல்வதுபோல் குளித்தல், நல்ல உடை அணிதல், மேக்அப் என செய்துகொள்வது உங்களை சுருசுருப்பாக இயங்க வைக்கும். இது உங்களின் பழக்கமாகவே மாறிப்போகும்.
அதோடு திடீரென அலுவலகத்தில் வீடியோகால் மீட்டிங் என்றாலும் பதறத் தேவையில்லை. வீடியோவில் வீட்டில் அணியும் உடை, தோய்ந்த முகம் என்று பேசினால் உங்களுக்கே பார்க்க சங்கடமாக இருக்குமல்லவா...!
தினமும் தாடியை ட்ரிம் செய்வதும், லிப்ஸ்டிக் , மேக்அப் என அப்ளை செய்து கொள்வதும் உங்களை நீங்களாக இருக்க உதவும்.இந்த செயல் உங்களுக்கு உத்வேகம் அளிக்கும். உற்சாகமூட்டும்.
உடல் சுத்தம், உடை சுத்தம் என்பது நம் மனதோடும் தொடர்பு கொண்டது என்பதை உணருங்கள்.
வீட்டில் அலுவலகப் பணி... உடனே களைப்பு வருகிறதா..? இப்படி வேலை செஞ்சு பாருங்க..!
எனவே காலையில் எழுந்ததும் லாப்டாப்பை திறந்துகொண்டு அமராமல் குளித்துவிட்டு அலுவலகம் செல்வதுபோல் நல்ல உடை அணிந்து வேலையைத் தொடங்குங்கள். இது உங்கள் வேலைத் திறனையும் அதிகரிக்கும், இதனால் உயர் அதிகாரிகளிடம் பாராட்டும் கிடைக்கும்.
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன்
இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow
News18Tamil.com @
Facebook,
Twitter,
Instagram,
Sharechat,
Helo,
WhatsApp,
Telegram,
TikTok,
YouTube
பார்க்க :
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.