மார்ச் 8ஆம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. பெண்களின் சாதனை மற்றும் வெற்றிகளை கொண்டாடும் வகையில் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது. உலகெங்கிலும் மகளிர் தினத்தன்று பொதுவிடுமுறை அளிக்கப்படுகிறது. மகளிர் தினம் ஏன், எப்படி தொடங்கியது..? இந்த நாளின் அவசியம் என்ன..? இந்த ஆண்டின் கருப்பொருள் என்ன என்பது குறித்து இந்தச் செய்தியில் பார்க்கலாம்.
வரலாறு :
கடந்த 1909ஆம் ஆண்டு பிப்ரவரி 28ஆம் தேதி, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமெரிக்க சோஷியலிச கட்சி சார்பில் தேசிய மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. தொழிலாளர் நல ஆர்வலர் தெரசா மல்கேயில் இந்த தினத்தை முன்வைத்தார். நகரெங்கிலும் ஆயத்த ஆடை பணியாளர்களுக்கு எதிராக இழைக்கப்படும் ஒடுக்குமுறைகளை கண்டித்து இந்த தினத்தை அவர் முன்னெடுத்தார்.
இதற்கு கிடைத்த முக்கியத்துவத்தை பார்த்து ஈர்க்கப்பட்ட அமெரிக்க சோஷலிச தலைவர்கள், மகளிர் தினம் கொண்டாடுவதன் அவசியம் குறித்து எடுத்துரைத்தனர். ஆனால், அந்த சமயத்தில் குறிப்பிட்ட தேதி எதுவும் வரையறை செய்யப்படவில்லை.
இந்தச் சூழலில் 1975 மற்றும் 1977ஆம் ஆண்டுகளில் சர்வதேச மகளிர் தினத்தை ஐ.நா. அமைப்பு கொண்டாட தொடங்கியது. இதையடுத்து மார்ச் 8ஆம் தேதியை சர்வதேச மகளிர் தினமாக ஐ.நா. பொதுச்சபை அறிவித்தது. இந்த நாளில் பெண்களின் உரிமைகளை நிலைநாட்டவும், உலகெங்கிலும் பெண்கள் அமைதியாக வாழுவதற்கு நடவடிக்கை எடுப்பது என்றும் உறுதியேற்கப்பட்டது.
இதற்குப் பிறகு ஒவ்வொரு ஆண்டும் மகளிர் தினத்தன்று புதிய கருப்பொருளை ஐ.நா. அவை அறிமுகம் செய்து வருகிறது. பெண்களின் சாதனைகள் குறித்து பேசப்படுவதோடு மட்டுமல்லாமல் பாலின அடிப்படையிலான வேறுபாடுகள், சமத்துவத்தின் நோக்கம், பெண்ணுரிமை உள்ளிட்டவை குறித்து இந்த நாளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. மகளிர் நலனை மையமாகக் கொண்ட பல்வேறு மகளிர் குழுக்களுக்கு இன்றைய நாளில் நிதி திரட்டும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
2023ஆம் ஆண்டின் கருப்பொருள் :
அனைவருக்கும் டிஜிட்டல் :
”பாலின சமத்துவத்திற்கான புத்தகங்கள் மற்றும் தொழில்நுட்பம்" என்ற பெயரில் இந்த ஆண்டின் கருப்பொருள் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
பெண்கள் மற்றும் சிறுமிகளின் வாழ்க்கை தரம் மேம்படுத்தப்பட வேண்டும் என்று இந்நாளில் உணர்த்தப்படுகிறது.
மகளிர் தினத்தின் இலக்கு :
பாலின சமத்துவத்தை நாம் காப்பாற்றுவதுடன், பெண்களின் சாதனைகள் மற்றும் வெற்றிகள் குறித்து இந்த நாளில் கொண்டாடுகின்றனர். சமூக, பொருளாதார, அரசியல் மற்றும் கலாச்சார நடவடிக்கைகளில் ஆணும், பெண்ணும் சமம் என்ற சிந்தனைகளை ஊக்குவிக்கின்றனர்.
மகளிர் தின வாழ்த்து :
மகளிர் தினத்தில் உங்களை பெற்ற அன்னையர், உடன் பிறந்த சகோதரிகள், வெளியிடங்களில் பழகக் கூடிய தோழிகள் உள்பட பலருக்கும் வாழ்த்துச் சொல்ல மறக்காதீர்கள். விரும்பினால் அவர்களுக்கு தேவையான பரிசு பொருட்களை வாங்கிக் கொடுக்கலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: International Women's Day, Women