முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / சைவ உணவுகளை மட்டுமே சாப்பிடும் பெண்களுக்கு இடுப்பு எலும்பு முறிவு ஏற்படும் அபாயம் அதிகம் - ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

சைவ உணவுகளை மட்டுமே சாப்பிடும் பெண்களுக்கு இடுப்பு எலும்பு முறிவு ஏற்படும் அபாயம் அதிகம் - ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

சைவ உணவால் ஏற்படும் அபாயம்

சைவ உணவால் ஏற்படும் அபாயம்

சைவ உணவு உண்பவர்களுக்கு எலும்பு ஆரோக்கியம் குறைவாக உள்ளது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

சைவ உணவுகளைச் சாப்பிடுவோருக்கு மோசமான எலும்பு ஆரோக்கியம் மற்றும் எலும்பு முறிவு ஆபத்து பற்றிய கவலைகள் அதிகரித்து வருகின்றன. இதனை உறுதிப்படுத்தும் விதமாக ஆய்வு முடிவு ஒன்று வெளிவந்துள்ளது. 26,000-க்கும் மேற்பட்ட நடுத்தர வயது பெண்களைக் கொண்டு நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் அசைவம் சாப்பிடுபவர்களை விடச் சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு இடுப்பு எலும்பு முறிவு ஏற்படும் அபாயம் 33% அதிகம் என்பது தெரிய வந்துள்ளது.

எப்போதுமே சைவ உணவுகள் சிறந்ததா அல்லது அசைவ உணவுகள் சிறந்ததா என்ற விவாதங்கள் நீடித்துக் கொண்டே இருக்கின்றன. பல பிரபலங்கள் அசைவ உணவைத் தவிர்த்து சைவ உணவை ஏற்றுக் கொண்டுள்ளார்கள். பல மக்கள் சைவ உணவுப் பழக்கத்தைப் பின்பற்றி வருகிறார்கள்.

இதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. உதாரணமாகச் சிலர் சுற்றுச்சூழல் மற்றும் நெறிமுறை காரணங்களுக்காகத் தாவர அடிப்படையிலான உணவு முறையைப் பின்பற்றுகிறார்கள். சிலர் பரம்பரை பரம்பரையாகச் சைவ உணவு பின்பற்றி வருபவர்களாக இருப்பார்கள். சைவ உணவுகள் நீரிழிவு, இருதய நோய் மற்றும் புற்றுநோய்க்கான குறைந்த அபாயம் கொண்டிருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

Also Read : வயதான தோற்றத்தை மறைக்க இந்த கிரீம் போதும்!

இது தொடர்பாக லீட்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சி நடத்திய ஆய்வு BMC மருத்துவ இதழில் வெளியானது. இந்த ஆய்வு வழக்கமாக அசைவம் சாப்பிடுபவர்களுக்கு மத்தியில் எப்போதாவது இறைச்சி உண்பவர்கள், இறைச்சி சாப்பிடாமல் மீன் மட்டும் சாப்பிடுபவர்கள் மற்றும் சைவ உணவு உண்பவர்கள் உள்ளிட்டோருக்கு இடுப்பு எலும்பு முறிவு ஏற்படும் அபாயத்தை ஆய்வு செய்தது. அதில் இந்த முடிவு வெளிவந்துள்ளது.

இந்த ஆராய்ச்சியில் 20 வயதுக்கு மேற்பட்ட சுமார் 26,318 பெண்களின் தரவுகள் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட நிலையில், சுமார் 822 இடுப்பு எலும்பு முறிவு பாதிப்புகள் கண்டறியப்பட்டன.

புகைபிடித்தல் மற்றும் வயது போன்ற காரணிகளைக் கணக்கில் எடுத்துக் கொண்டாலும், சைவ உணவு உண்பவர்கள் மட்டுமே இடுப்பு எலும்பு முறிவுகளின் அதிக ஆபத்தைக் கொண்ட உணவு குழுவாக இருந்தனர். கூடுதலாக இந்த ஆய்வு சைவ உணவு உண்பவர்கள் மற்றும் இறைச்சி உண்பவர்களின் இடுப்பு எலும்பு முறிவு அபாயத்தை ஒப்பிட்டது.

இறுதியில் தொடர்ந்து இறைச்சி உண்பவர்களுடன் ஒப்பிடுகையில், சைவ உணவைப் பின்பற்றும் பெண்களுக்கு இடுப்பு எலும்பு முறிவு ஏற்படும் அபாயம் 33% அதிகமாக இருப்பதைக் கண்டதாக ஆய்வின் ஆசிரியர்கள் குறிப்பிட்டு உள்ளனர். அதே போல வாரத்திற்கு 5 முறைக்கும் குறைவாக இறைச்சி உண்பவர்களுக்கு இடுப்பு எலும்பு முறிவு ஆபத்து அதிகம் இல்லை என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

நீங்கள் சைவமா?

சைவ உணவு உண்பவர்களுக்கு மோசமான எலும்பு ஆரோக்கியம் இருப்பதைக் காட்டும் ஆய்வு முடிவுகள் அதிகரித்து வரும் நிலையில், நீங்கள் சைவம் என்றால் இடுப்பு எலும்பு முறிவு அபாயத்தைக் குறைக்க நீங்கள் செய்ய வேண்டிய அடிப்படை விஷயங்கள் இங்கே.

ஆரோக்கியமான எடை:

சைவ உணவு உண்பவர்களுக்கு BMI குறைவாக இருப்பதைப் பல ஆய்வுகள் காட்டும் நிலையில், எடை குறைவாக இருப்பது மோசமான எலும்பு மற்றும் மோசமான தசை ஆரோக்கியத்திற்கும் வழிவகுக்கும். இவை இரண்டும் இடுப்பு எலும்பு முறிவு அபாயத்தை அதிகரிக்கும். எனவே ஆரோக்கியமான எடையைப் பராமரிப்பது முக்கியம்.

Also Read : கொஞ்ச தூரம் நடந்தாலும் கால் வலிக்குதா..? இந்த நோய்க்கான எச்சரிக்கையாக இருக்கலாம்..!

சரியான டயட்:

புரதம், வைட்டமின் பி12, வைட்டமின் டி, ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், பாஸ்பரஸ் மற்றும் துத்தநாகம் போன்ற எலும்பு ஆரோக்கியத்திற்கு முக்கியமான பல ஊட்டச்சத்துக்கள் சைவ உணவு உண்பவர்களுக்கு போதுமான அளவு இருப்பதில்லை. எனவே சைவ உணவு உண்பவர்கள் மேற்காணும் ஊட்டச்சத்துக்களைக் குறிப்பாகப் புரதத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

ஆரோக்கியமான வாழ்க்கை முறை:

புகை மற்றும் மதுப்பழக்கத்தை விடுத்து சீரான உணவை உட்கொள்வது, நல்ல பழக்கவழக்கங்களைப் பின்பற்றுவது, தினமும் தவறாமல் உடற்பயிற்சிகள் செய்வது உள்ளிட்ட ஆரோக்கியமான வாழ்க்கை முறை எலும்பு மற்றும் தசை வலிமையை அதிகரிக்கிறது.

First published:

Tags: Bone health, Pure veg, Vegetarian