ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

கற்றாழையில் ’ஹேண்ட் வாஷ்'...! மகளிர் சுய உதவிக்குழு பெண்களின் புதிய முயற்சி

கற்றாழையில் ’ஹேண்ட் வாஷ்'...! மகளிர் சுய உதவிக்குழு பெண்களின் புதிய முயற்சி

கற்றாழையில் ஹேண்ட் வாஷ்

கற்றாழையில் ஹேண்ட் வாஷ்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

கொரோனா தொற்று வரமால் தடுக்க கைகளை சுத்தம் செய்வதற்கான கற்றாழைச் சாறு ஹேண்ட் வாஷ் தயாரிப்பில் தேனியைச் சேர்ந்த மகளிர் சுய உதவிக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

கொரோனா தொற்றிலிருந்து தப்பிக்க நாள் ஒன்றுக்கு 20 முறை கைகளை சுத்தம் செய்ய வேண்டும், முக கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், அவற்றிற்கான தேவை அதிகரித்துள்ளது. இதனால் தேனி மாவட்ட நிர்வாகம், ஹேண்ட் வாஷ் தயாரிப்பு பணியை கொடுவிலார்பட்டியில் இயங்கும் புதுமை மகளிர் சுய உதவிக்குழுவுக்கு அளித்துள்ளது. சானிட்டரி நாப்கின் தயாரிப்பில் தமிழக அளவில் பல சாதனைகளை புரிந்துள்ள புதுமை மகளிர் சுய உதவிக்குழு, தற்போது ஹேண்ட் வாஷ் தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.

வைட்டமின் - இ திரவம் மற்றும் கற்றாழைச்சாறு கலந்து தயாரிக்கப்படும் கை கழுவும் திரவம், அரை லிட்டர் பாட்டிலில் அடைக்கப்பட்டு 45 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கற்றாழைச் சாறு சேர்ப்பதால் நமது தோலுக்கு எந்த பிரச்னையும், எரிச்சலும் வராது எனத் தெரிவிக்கும் மகளிர் சுய உதவிக்குழுவினர், கடைகளில் கிடைக்கும் ஹேண்ட் வாஷ் திரவத்திற்கும், நாங்கள் தயாரிக்கும் ஹேண்ட் வாஷ் திரவத்திற்கும் இதுதான் வித்தியாசம் எனக்கூறுகின்றனர்.

இதுவரை 500 லிட்டர் வீதம் மூன்று ஆர்டர்கள் பெற்றுள்ளதாகவும், தேனி அரசு மருத்துவக்கல்லூரியில் தாங்கள் தயாரித்த ஹேண்ட் வாஷ்தான் பயன்படுத்தப்படுகிறது என்றும் கூறுகின்றனர்.

தேனி மாவட்டத்தில் ஹேண்ட் வாஷ் தயாரிக்கும் ஒரே மகளிர் சுய உதவிக்குழுவினரான இவர்களுக்கு, பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

பார்க்க :

First published: