• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • ஒர்க் பிரம் ஹோம்மில் பெண்கள் குறைந்த உற்பத்தி திறன் கொண்டவர்களாக கருதப்படுகிறார்கள்: அறிக்கையில் தகவல்

ஒர்க் பிரம் ஹோம்மில் பெண்கள் குறைந்த உற்பத்தி திறன் கொண்டவர்களாக கருதப்படுகிறார்கள்: அறிக்கையில் தகவல்

கோப்புப் படம்

கோப்புப் படம்

வீட்டிலிருந்து வேலை செய்யும் போது, ​​பெண்கள் ஆண்களை விட நான்கு மடங்கு குறைவான உற்பத்தி திறன் கொண்டவர்களாக கருதப்படுகிறார்கள்.

  • News18
  • Last Updated :
  • Share this:
வீட்டில் இருந்தபடியே வேலை பார்க்கும் பெண்கள், ஆண் சகாக்களை விட குறைவான உற்பத்தி திறன் கொண்டவர்களாக உணரப்படுவதாக ஒரு புதிய ஆய்வறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது.

ஊரடங்கு காரணமாக பல நிறுவனங்கள் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் தொலைதூர அலுவலகங்களை அமைக்க விரைந்தபோது, வீட்டில் இருந்தபடியே நாம் எவ்வாறு வேலை செய்கிறோம் என்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பது தெளிவாகியது. குறிப்பாக அவர்களின் தொழில் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் உழைக்கும் பெண்களின் வெற்றி என்று வரும்போது இது முக்கிய கவனம் செலுத்துகிறது.

இது குறித்து, கியர்னி எழுதிய ‘தி டபிள்யூ.எஃப்.எச். இன்க்லூசிவிட்டி கன்ட்ரம்’ அறிக்கையின்படி, வீட்டிலிருந்து வேலை செய்யும் போது குடும்ப உறுப்பினர்களுடன் வசிக்கும் பெண்களுக்கு வீட்டு வேலைகளின் சுமை ஆண்களை விட ஐந்து மடங்கு அதிகரித்திருப்பதாக தெரிவித்துள்ளது. 40 சதவிகிதத்திற்கும் அதிகமான நிறுவனங்கள் இன்னமும் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்தபடியே வேலைகளை வாங்கி வருகின்றன. அவை பெரும்பாலும் ஆண் பணியாளர்கள் அதிகம் இருக்கும் ஒரே மாதிரியான குழுக்களை மேலும் பெரிதுபடுத்துகின்றன.

இது குறித்து அறிக்கையில் தெரிவிக்கப்பதாவது, "வீட்டிலிருந்து வேலை செய்யும் போது, ​​பெண்கள் ஆண்களை விட நான்கு மடங்கு குறைவான உற்பத்தி திறன் கொண்டவர்களாக கருதப்படுகிறார்கள். குறைவான உற்பத்தி திறன் கொண்டவர்கள் என்று புரிந்துக் கொள்ளப்படுவது பெண்கள் தங்கள் மனநல பிரச்சினைகள் பற்றி வெளிப்படையாக பேசுவதை மேலும் தடுக்கிறது, ”என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கண்டுபிடிப்புகள் குறித்து கியர்னி இந்தியாவின் பங்குதாரர் ஷிப்ரா பிஸ்வாஸ் பட்டாச்சார்யா கூறியதாவது,"உலகம் மிக விரைவாக தொலைதூர பணியிடங்களுக்கு நகர்ந்தது. எங்களால் உண்மையிலேயே ஒரு நல்ல பணியிடத்தை அவசரமாக வடிவமைக்க முடியவில்லை. ஊரடங்கு காரணமாக நாங்கள் தொடர்பு கொள்ளும் விதத்தில் இருந்து வேலை சம்பந்தமான தகவல்களை பரப்புதல் வரை எல்லாமே தலைகீழாக மாறிவிட்டன. இந்த வடிவமைப்புக் கொள்கைகள் பெண்கள் நிறுவனங்களுக்குள் எவ்வாறு முன்னேறுகின்றனர் என்பதைப் பாதிக்கும். ” என்று தெரிவித்தார்.

பணியிடங்கள் தொடர்பான இந்த மாற்றத்தால், பெண்களுக்கு அலுவலங்களில் இருப்பது போன்ற உணர்வை தரவில்லை என்றாலும், வேலை திறனை முறையாக வெளிப்படுத்த மூன்று முக்கிய விஷயங்களை பின்பற்ற அறிக்கை பரிந்துரைத்துள்ளது. அவை,

1. பணியிட நெகிழ்வுத்தன்மையை அதிகரித்தல்: வேலை நேரங்களைத் தேர்ந்தெடுக்கும் திறன், தனிப்பட்ட விஷயங்களுக்காக நேரம் ஒதுக்குதல் மற்றும் பகலில் இடைவேளையை எடுத்தல், அதே நேரத்தில் வீட்டு கடமைகளை நிர்வகித்தல் மற்றும் மன ஆரோக்கியத்தை பராமரிக்க நேரம் எடுப்பது ஆகியவை முக்கியம்.

Also read... கொரோனா வைரஸ் தடுப்பூசி: COVID-19 தடுப்பூசி ஆண்களை விட பெண்களுக்கு பக்கவிளைவுகளை ஏற்படுத்தும்... காரணம் இங்கே...!

2. முறையான மற்றும் முறைசாரா நெட்ஒர்க்கிற்கான வழிகள்: நெட்வொர்க்கிற்கான வாய்ப்புகளை ஜனநாயகமயமாக்குவது பணியிடக் குழுக்களை அகற்றுவதில் முக்கியமானது.

3. மன ஆரோக்கியம் மற்றும் ஆலோசனை: 44% பெண்கள் மற்றும் ஆண்கள் தங்களுக்கு மன ஆரோக்கியம் ஆலோசனை ஆகியவற்றில் அதிக கவனம் தேவைப்படுவதாக கூறுகிறார்கள். குறிப்பாக விர்ச்சுவல் உலகம் தலைமையில் இருக்கும்போது அவை அவசியம்.

மேலும் இது குறித்து கியர்னி இந்தியாவின் பங்குதாரர் சவுமியா கிருஷ்ணா கூறியதாவது, “பணியிடத்தை வீடுகளுக்கு மாற்றுவது எல்லாம் பெரிதாக வேலைக்காகாது. குறிப்பாக பெண்கள் விஷயத்தில். கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு பெண்கள், நெட்வொர்க்கிங் வாய்ப்புகள், உலகளாவிய தொடர்புகள், வழிகாட்டல் மற்றும் ஸ்பான்சர்ஷிப்பிற்கான வழிகள் போன்றவற்றை இழக்கின்றனர். எனவே பணியிடங்களை மறுவடிவமைப்பு செய்ய வேண்டும். தொடர்பு மற்றும் தகவல்தொடர்பு வடிவங்களை மறுசீரமைக்க வேண்டும். இல்லையெனில், நாம் வேலைக்காக ஒரு படி முன்னேறும் பொது, வேலை செய்யும் பெண்கள் விஷயத்தில் இரண்டு படிகள் பின்வாங்குகிறோம். ” என்று கூறியுள்ளார்.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: