Home /News /lifestyle /

ஆண்களை விட பெண்களே உடல் பருமனால் அதிகம் பாதிப்பு - தமிழகத்துக்கு ஷாக் கொடுக்கும் ரிப்போர்ட்

ஆண்களை விட பெண்களே உடல் பருமனால் அதிகம் பாதிப்பு - தமிழகத்துக்கு ஷாக் கொடுக்கும் ரிப்போர்ட்

உடல் பருமன்

உடல் பருமன்

Obesity | தேசிய அளவில் பெண்களில் நான்கில் ஒரு பங்கு உடல் பருமனாக (24%) உள்ளனர். இது ஆண்களின் எண்ணிக்கை (22.9%) விட சற்று அதிகமாக உள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai |
இந்தியாவின் தென் மாநிலங்களில் உள்ள பெண்களின் உடல் பருமன் குறித்த புதிய ஆய்வறிக்கை ஐதராபாத்தில் உள்ள சமூக மேம்பாட்டு கவுன்சில் வெளியிட்டுள்ளது. இதில் உடல் பருமன் உள்ள பெண்களின் அதிகரிப்பு தமிழ்நாட்டில் தான் அதிகம் என்று காட்டுகிறது.

உடல் பருமன்:
உலக சுகாதார அமைப்பின் (WHO) படி, உடல் நிறை குறியீட்டெண் (BMI) 25 ஐ விட அதிகமாகவோ அல்லது அதற்கு சமமாகவோ இருக்கும் பெரியவர்கள் அதிக எடை கொண்டவர்கள் (overweight) என்று அழைக்கப்படுகிறார்கள். உடல் பருமன்(Obesity) என்பது WHO இன் படி, பிஎம்ஐ 30 ஐ விட அதிகமாகவோ அல்லது சமமாகவோ இருந்தல் ஆகும்.

ஆய்வு:
தெலுங்கானாவில் 31 மாவட்டங்கள், கர்நாடகாவில் 30 மாவட்டங்கள், ஆந்திராவில் 13, கேரளாவில் 14 மற்றும் தமிழ்நாட்டில் 32 மாவட்டங்கள் உட்பட, இந்தியாவின் தென் மாநிலங்களில் 120 மாவட்டங்களில் 15-49 வயதுடைய பெண்களின் உடல் பருமனை ஆய்வு ஆய்வு செய்தது.

ஆய்வுக்கான தரவு தேசிய குடும்ப சுகாதார ஆய்வு NFHS-4 மற்றும் NFHS-5 (2019-2021) ஆகியவற்றிலிருந்து எடுக்கப்பட்டு ஒப்பிடப்பட்டது. தேசிய அளவில் பெண்களில் நான்கில் ஒரு பங்கு உடல் பருமனாக (24%) உள்ளனர். இது ஆண்களின் எண்ணிக்கை (22.9%) விட சற்று அதிகமாக உள்ளது.

முழுமையாக ESIM க்கு மாறிய ஆப்பிள் ஐபோன் 14... ESIM என்றால் என்ன...?

தென் இந்திய நிலவரம்:

மாநிலம், மதம், பால் வேறுபாடு, வயது வேறுபாடு, தங்குமிடம் சார்ந்த பகுப்பு  என பல்வேறு பிரிவுகளில் இந்த ஆய்வு செய்யப்பட்டது. அதன் தகவல்களின் அடிப்படையில்....

தமிழகத்தில் அதிகரிப்பு விகிதம் 9.5%ஆகும். கர்நாடகாவில்  6.9% மற்றும் கேரளாவில் 5.7% அதிகரித்துள்ளது. மொத்த எண்ணிக்கையில் பெண்களிடையே உடல் பருமன் அளவு அதிகரிப்பு குறைவாக இருந்தாலும், தெலுங்கானாவில் மட்டும் 2% ஆக உள்ளது.

கிராமப்புற பெண்களை விட நகர்ப்புற பெண்களுக்கு உடல் பருமன் அதிகமாக இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. தேசிய அளவில், பெண்களின் உடல் பருமன் அதிகமாக  கிறிஸ்தவர்களிடையே (31.2%) இருப்பதாக தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

ஆனால் தென் மாநிலங்களில், தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா மற்றும் தெலுங்கானாவில் உள்ள முஸ்லீம் பெண்களிடையே உடல் பருமன் அதிகமாக உள்ளது. அனைத்து தென் மாநிலங்களிலும் தேசிய சராசரியை விட உடல் பருமனின் அளவு அதிகமாக இருப்பதாக ஆய்வில் சித்தரிக்கப்பட்டதால், கவலைக்கு காரணம் இருப்பதாக ஆராய்ச்சி கவனித்தது.

உலக தற்கொலை தடுப்பு நாள் 2022: செயல் மூலம் நம்பிக்கையை உருவாக்கி தற்கொலைகளை தடுப்போம்

சமூகப் பிரிவில், இந்திய அளவில் பிறர் (29.6%), பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (24.6%), பட்டியலிடப்பட்ட சாதியினர் (21.6%) மற்றும் பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் (12.6%) ஆகியோரிடையே உடல் பருமன் அதிகமாக உள்ளது.

NHFS-4 மற்றும் 5 க்கு இடைப்பட்ட பெண்களின் உடல் பருமன் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகளையும் இந்த ஆராய்ச்சி எடுத்துக்காட்டுகிறது. சமீப காலத்தில் பருமனான பெண்களுக்கான தரவு தேசிய அளவில் 3.3% அதிகரித்துள்ளது.

இந்தியாவில் கவலைக்குரிய ஒரு முக்கிய காரணமாக சுகாதாரம் உள்ளது. உடல் பருமனின் பாதிப்பு உலக சராசரியை விட மிகவும் ஆபத்தான விகிதத்தில் அதிகரித்து வருகிறது.

உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, உலகில் 1975 முதல் உடல் பருமன் பாதிப்பு மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. 2016 ஆம் ஆண்டில், 1.9 பில்லியனுக்கும் அதிகமான பெரியவர்கள் அதிக எடை கொண்டவர்களாகக் கருதப்பட்டனர், அவர்களில் 650 மில்லியன் பேர் பருமனாக இருந்தனர்.
Published by:Ilakkiya GP
First published:

Tags: Analysis Report, Obesity

அடுத்த செய்தி