ஆண்களைவிட பெண்கள் அதிகமாக ’செக்ஸ் கனவு’ காண்கிறார்கள் : ஆய்வில் தகவல்

இதற்கு பெண்ணியம் மற்றும் செக்ஸ் குறித்த வெளிப்படைத் தன்மையே காரணம்

Web Desk | news18
Updated: July 25, 2019, 10:43 PM IST
ஆண்களைவிட பெண்கள் அதிகமாக ’செக்ஸ் கனவு’ காண்கிறார்கள் : ஆய்வில் தகவல்
பெண்கள் கனவு
Web Desk | news18
Updated: July 25, 2019, 10:43 PM IST
ஆழமான சிந்தனைகளும், எண்ண ஓட்டங்களும்தான் கனவாக வரும் என்பார்கள். சில கனவுகள் நிஜமாகாதா என்றும் சில நிஜங்கள் கனவாகக் கூடாதா என்றும் எல்லோருக்கும் ஏதாவது புள்ளியில் உதிக்கும்.

ஆனால் ஆய்வாளர்கள் சொல்லும் இந்தக் கனவை என்ன சொல்வது..

சைக்காலஜி மற்றும் செக்சுவலிட்டி நடத்திய ஆய்வில் ஆண்களை விடப் பெண்கள்தான் அடிக்கடி செக்ஸ் பற்றியக் கனவுகளைக் காண்பதாகக் கூறியுள்ளது. இந்த ஆய்வில் 3000 பேர் பங்கேற்றுள்ளனர். 16 முதல் 30 வயதிற்குள் இருக்கும் பெண்களுக்குதான் அதிகமாக இந்தக் கனவு வருவதாகவும் கூறியுள்ளது. இதை இன்றையப் பெண்கள் வெளிப்படையாகக் கூறுவதற்குத் தயங்குவதுமில்லை என்கிறது ஆய்வு.
இந்த செக்ஸ் கனவை 100 நாட்களில் 30 நாட்கள் காண்கிறார்கள் என்கிறது ஆய்வு. அதே வயது கொண்ட ஆண்களும் அவர்களுக்கு நிகராகவே செக்ஸ் கனவு காண்கின்றனர். இதேபோல் 1966 -ல் நடத்தப்பட்ட ஆய்வை ஒப்பிடும்போது அன்றையப் பெண்களுக்கு மிகக் குறைவாகவே இருந்துள்ளது.

”இந்த கனவுகள் முன்பை விட அதிகரித்துள்ளதற்கு பெண்ணியம் மற்றும் செக்ஸ் குறித்த வெளிப்படைத் தன்மையே காரணம்” என்கிறார் ஆய்வின் இயக்குநர்.

Loading...

மேலும் இன்றைய மாடர்ன் கலாசாரத்தில் பெண்கள் அனைத்தையும் கடந்துதான் செல்ல வேண்டியிருக்கிறது. இன்று அது மறைக்கும் விஷயமாக இல்லாமல் வெளிப்படையாக தினம் தினம் பேசப்படுவதால் இது ஆச்சரியத்திற்குரிய விஷயமல்ல என்றும் கூறுகிறார்.
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: July 25, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...