Home /News /lifestyle /

ஆண்களை விட பெண்கள் இந்த விஷயத்தில் கெட்டிக்காரங்களாம்.. ஆய்வில் சொல்றாங்க..

ஆண்களை விட பெண்கள் இந்த விஷயத்தில் கெட்டிக்காரங்களாம்.. ஆய்வில் சொல்றாங்க..

பெண்களுக்கு செக்ஸ் துணை அதிகம்

பெண்களுக்கு செக்ஸ் துணை அதிகம்

சராசரியாக 3.1 செக்ஸ் பார்ட்னர்களை கொண்ட பெண்களின் எண்ணிக்கை ராஜஸ்தானில் தான் அதிகம். ஆனால், கணக்கெடுப்புக்கு முந்தைய 1 வருடத்தில், தங்கள் வாழ்க்கைத் துணை அல்லது லைவ்-இன் பார்ட்னராக இல்லாத ஒருவருடன் உடலுறவு கொண்ட ஆண்களின் சதவீதம் 4% ஆக இருந்தது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
நாடு முழுவதும் சுமார் 707 மாவட்டங்களில் நடத்தப்பட்ட இந்த கணக்கெடுப்பில் 1.1 லட்சம் பெண்கள் மற்றும் 1 லட்சம் ஆண்கள் கலந்து கொண்டனர். இதில் சராசரியாக 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஆண்களை விட பெண்கள் அதிக செக்ஸ் பார்ட்னர்களை கொண்டுள்ளனர். மொத்தமாக 2.1 லட்சம் பெண்கள் மற்றும் ஆண்கள் மத்தியில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், பல மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஆண்களை விட பெண்களுக்கு சராசரியாக செக்ஸ் பார்ட்னர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பது தெரியவந்துள்ளது.

NFHS நடத்திய மாபெரும் சர்வேயில் கீழ்காணும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஆண்களை விட,பெண்களின் செக்ஸ் பார்ட்னர்கள் எண்ணிக்கை அதிகமாக இருப்பது தெரிய வந்துள்ளது. ராஜஸ்தான், ஹரியானா, சண்டிகர், ஜம்மு-காஷ்மீர், லடாக், மத்தியப் பிரதேசம், அசாம், கேரளா, லட்சத்தீவு, புதுச்சேரி மற்றும் தமிழ்நாடு.

சராசரியாக 3.1 செக்ஸ் பார்ட்னர்களை கொண்ட பெண்களின் எண்ணிக்கை ராஜஸ்தானில் தான் அதிகம். ஆனால், கணக்கெடுப்புக்கு முந்தைய 1 வருடத்தில், தங்கள் வாழ்க்கைத் துணை அல்லது லைவ்-இன் பார்ட்னராக இல்லாத ஒருவருடன் உடலுறவு கொண்ட ஆண்களின் சதவீதம் 4% ஆக இருந்தது. பெண்களைப் பொறுத்தவரை, இந்த எண்ணிக்கை 0.5 சதவீதமாக இருந்தது.



பெண்களில் இதுவரை திருமணம் செய்து கொள்ளாதவர்கள், விவாகரத்து செய்தவர்கள், விதவைகள் அல்லது பிரிந்து சென்றவர்கள் கணக்கெடுப்புக்கு முந்தைய 12 மாதங்களில் 2 அல்லது அதற்கு மேற்பட்ட பார்ட்னர்களுடன் உடலுறவு கொண்டதாக கூறியுள்ளனர். 2019-21 ஆம் ஆண்டு காலகட்டத்தில் நடத்தப்பட்ட NFHS-ன், National Family Health Survey-5 மொத்தம் 28 மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் பிரதேசங்களில் இருந்து 707 மாவட்டங்களை உள்ளடக்கியது.

உஷார்... விந்தணுக்களை பாதிக்கும் இந்த 5 உணவுகளை ஆண்கள் தொடவே கூடாதாம்...

அதே போல 15 வயதிற்கு முன் உடலுறவு கொண்ட 15-24 வயதுடையவர்களின் சதவீதம் NFHS-4 மற்றும் NFHS-5 ஆகியவற்றுக்கு இடையே பெண்கள் (3 சதவீதத்திலிருந்து 2 சதவீதம் வரை) மற்றும் ஆண்களுக்கு (0.9 சதவீதத்திலிருந்து 0.5 சதவீதம் வரை) குறைந்துள்ளது. இந்தியாவில் 25-49 வயதுடைய பெண்களின் முதல் உடலுறவின் சராசரி வயது 18.9 ஆகும். 25-49 வயதுடைய பெண்களில் 10% பேர் 15 வயதிற்கு முன்பும், 39% பேர் 18 வயதிற்கு முன்பும் உடலுறவு கொண்டுள்ளதாய் கணக்கெடுப்பு வெளிப்படுத்தி உள்ளது. 25-49 வயதிற்குட்பட்ட பெண்களில் 60 சதவீதம் பேர் 20 வயதிற்குள் உடலுறவு கொண்டுள்ளனர்.



இந்தியாவில் 25-49 வயதுடைய ஆண்களின் முதல் உடலுறவின் சராசரி வயது 24.8, பெண்களை விட ஆறு வயது அதிகம். 25-49 வயதுடைய ஆண்களில் 1 சதவீதம் பேர் 15 வயதிற்கு முன்பும், 6 சதவீதம் பேர் 18 வயதிற்கு முன்பும் உடலுறவு கொண்டனர். 25-49 வயதுடைய ஆண்களில் 52 சதவீதம் பேர் 25 வயதிற்குள் உடலுறவு கொண்டுள்ளனர்.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Sexual life

அடுத்த செய்தி