கலைக்கு மொழி அவசியம் இல்லை. எந்த மொழியாக இருந்தாலும் கலை அதன் உண்மையான தன்மைக்காக பாராட்டப்படும். அதன் உட்கருத்துகள் மக்களை சரியாக சென்று சேரும்.
பெண்கள் பூ போன்றவர்கள். மென்மையானவர்கள். அவர்களை பாதுகாப்பதே நம் கடமை என்று இந்த சமூகம் சொல்கிறது. ஆனால் இந்த சமூகத்தில் பெண்களுக்கு ஆபத்து என்று நிற்கும் போது ஒடிந்து, நொறுங்கி விடுகின்றனர். பெண்களில் சிலரே சமூகத்தை எதிர்கொள்ள முடியாமல் ஒளிந்து கொள்கின்றனர். சிலர் தான் அதை எதிர்த்து, மீண்டு, சாதனை படைக்கின்றனர். மற்ற பெண்களையும் ஊக்குவிக்க சில படங்கள் உதவுகின்றன. அதில் 5 படங்கள் இங்கே..
5 சுந்தரிகள்

ஆஷிக் அபு, ஷைஜு காலித், அமல் நீரத், அன்வர் ரஷீத், சமீர் தாஹிர் ஆகிய ஐந்து பிரபல இயக்குனர்களின் ஐந்து சிறுகதைகளை உள்ளடக்கிய திரைப்படம் 5 சுந்தரிகள். ஒவ்வொன்றும் ஐந்து பெண்களின் அழகான, ஆனால் உணர்ச்சிகரமான கதைகளைச் சொல்கிறது. பெண்களின் வாழ்க்கையில் அன்பின் வெவ்வேறு நிழல்களை ஆராய்கிறது - ஒரு தாய், ஒரு மகள், ஒரு காதலன், ஒரு மனைவி மற்றும் ஒரு நடிகை என்ன பலதரப்பட்ட பரிமாணங்களில் அவர்களின் பங்கை விளக்குகிறது. 5 சுந்தரிகள் படம் அமேஷான் ஒடிடியில் பார்க்கலாம்.
டேக் ஆஃப்

பார்வதி நடித்துள்ள இப்படம், ஈராக்கில் வேலைக்காக செல்லும் செவிலியர்கள் அங்குள்ள போராட்டத்தின் இடையில் சிக்கிக்கொள்கின்றனர். தன் கணவன் தொலைந்துவிட, மகனோடு சிக்கிக்கொள்ளும் ஒரு செவிலியர் தன் கணவனையும் மீட்டு, மற்ற செவிலியர்களோடு இந்தியா திரும்பினாரா என்பது தான் கதை. பெண்ணின் தைரியமும் தின்னமும் இதில் வெளிப்படும். Take Off jதிரைப்படத்தை Disney Hotstar ஓடிடியில் பார்க்கலாம்.
மிலி

அமலாபால் நடித்து ராஜேஷ் பிள்ளை இயக்கத்தில் வெளியான இப்படம் தன்னம்பிக்கை இல்லாமல் கூட்டத்திலும் தனியாக வாழ்பவள் கதை. மற்றவர்களால் வெறுத்து ஒதுக்கப்படும் ஒருத்தி தான் நாயகி. மற்றவர்களோடு சகஜமாக வாழ முடியாமல் தனி அறையில் முடங்கி தற்கொலை செய்து கொள்ள முயலும் அவளது வாழ்க்கை எப்படி சந்தோஷமானதாக மாறுகிறது என்பதே கதை. குப்பை தொட்டி கூட ஒருவனது தன்னம்பிக்கை உயர உதவும். மிலி திரைப்படத்தை அமேசான் ஒடிடியில் பார்க்கலாம்.
உயரே

விமானியாக நினைக்கும் பெண்ணிற்கு அதை விரும்பாத காதலன் ஆசிடால் பரிசு கொடுக்கிறான். முகசிதைவுகளை எல்லாம் பொருட்படுத்தாமல் மீண்டும் தன் இலக்கை நோக்கி ஓடுகிறாள். அவள் தன் வானத்தில் சிறகை விரித்து பறந்தாளா இல்லையா என்பதே கதை. காதலை விட தன் கனவை நோக்கி ஒடும் பெண்களுக்கு இது உந்து கோலாக இருக்கும். பார்வதியின் நடிப்பின் எதார்த்தம் பலரது வாழ்க்கையை மீட்டெடுக்கும். உயரே திரைப்படத்தை அமோஷசன் ப்ரைம் மற்றும் நெட்ப்ளிக்ஸ் ஒடிடியில் பார்க்கலாம்.
ஹவ் ஓல்ட் ஆர் யூ

கல்யாணமாகிவிட்டால் அவளுக்கென்று கனவுகள் இருக்கக் கூடாதா. கனவுகளுக்கு வயதில்லை. எந்த வயதிலும் தன் கனவுப் பாதையைத் தொடங்கலாம். வெற்றியும் பெறலாம் என்று அடித்துத் தூக்கும் படம். மஞ்சுவாரியர் நடிப்பில் வந்த இதன் தமிழாக்கம் தான் 36 வயதினிலே
பெண் என்பதால் இந்த உலகில் எந்த துறையிலும் எந்த செயலிலும் தடை இல்லை. உன்னை நீதான் மீட்டெடுத்து ஓட வேண்டும் என்று சொல்லும் படங்கள் இவை. இவை போக கேர் ஆப் சாய்ரா பானு,22 ஃபிமேள் கோட்டயம் போன்ற படங்களும் பாருங்கள். How Old are you திரைப்படத்தை அமேஷான் ஒடிடியில் பார்க்கலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.