ஏழை நாடுகளில் பெண்கள் "இப்போது உடலுறவு வேண்டாம்" என்று சொல்ல உரிமை இல்லை - அதிர்ச்சி தரும் ஆய்வு

ஏழை நாடுகளில் பெண்கள் "இப்போது உடலுறவு வேண்டாம்" என்று சொல்ல உரிமை இல்லை - அதிர்ச்சி தரும் ஆய்வு

பெண் உரிமை

கருத்தடை பயன்படுத்துவதையோ அல்லது சுகாதார சேவையை நாடவோ உரிமை மறுக்கப்பட்டுள்ள அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

  • Share this:
இந்த 21-ஆம் நூற்றாண்டில் கூட, பெண்கள் தங்கள் துணை உடலை தொட அனுமதிப்பது பற்றி சுயமாக முடிவுகளை எடுக்க முடியாத ஒரு சமூகத்தில் நாம் வாழ்கிறோம் என்பதை உங்களால் நம்ப முடிகிறதா.? ஆனால் உண்மை இது தான். உலகில் உள்ள சுமார் 57 ஏழை மற்றும் வளரும் நாடுகளில், பாதிக்கும் குறைவான பெண்களுக்கு தங்கள் பார்ட்னர்களிடம் இப்போது உடலுறவு கொள்ள வேண்டாம் என சொல்லவோ, கருத்தடை பயன்படுத்துவதையோ அல்லது சுகாதார சேவையை நாடவோ உரிமை மறுக்கப்பட்டுள்ள அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக ஐ.நா மக்கள் தொகை நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், உலக நாடுகளில் கால்வாசியும், ஆப்பிரிக்காவில் பாதிக்கும் மேலான தரவுகளை மட்டுமே உள்ளடக்கியது என்பது இங்கு கவனிக்க வேண்டியது. மேலும் 19 நாடுகளில் பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட நபரே பாதிக்கப்பட்ட பெண்ணை திருமணம் செய்து கொண்டால் அவருக்கு தண்டனை இல்லை என்று சட்டம் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அல்ஜீரியா, அங்கோலா, பொலிவியா,கேமரூன், டொமினிகன் குடியரசு, எக்குவடோரியல் கினியா, எரிட்ரியா, லிபியா, ரஷ்ய கூட்டமைப்பு, தஜிகிஸ்தான், டோங்கா உள்ளிட்ட நடுகல் இந்த பட்டியலில் அடங்கும். பயம் அல்லது வன்முறை இல்லாமல் தங்களின் உடல்கள் மற்றும் எதிர்காலங்களைப் பற்றி தேர்வு செய்ய மில்லியன் கணக்கான பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு அதிகாரம் இல்லை என்பதும் இந்த அறிக்கையில் சுட்டி காட்டப்பட்டுள்ளது.



ஐ.நா அறிக்கை சொல்வது என்ன.?

“எனது உடல் எனக்கு சொந்தமானது" என்ற தலைப்பின் கீழ் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் உலகில் சுமார் 57 நாடுகளில் 55% பெண்கள் மட்டுமே உடலுறவில் ஈடுபடுவது, கருத்தடை பயன்படுத்துவது, எப்போது பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதார சேவைகள் போன்ற சுகாதார சேவையை நாட வேண்டும் என்பது பற்றியெல்லாம் தாங்களே சுயமாக தீர்மானிக்க முடியும் என்று ஐ.நா அறிக்கை சொல்கிறது. ஆனால் அதே சமயம் கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியா மற்றும் லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் ஆகிய நாடுகளில் 76 சதவீதமும், துணை சஹாரா ஆப்பிரிக்கா மற்றும் மத்திய மற்றும் தெற்காசியாவில் 50 சதவீதத்திற்கும் குறைவான இளம் பெண்கள் மற்றும் பெண்கள் பாலியல், கருத்தடை மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு குறித்து சுயமாக முடிவுகளை எடுக்க முடியும் என்பதும் தெரிய வந்துள்ளது.

40 வயது கடந்த பெண்களை எச்சரிக்கும் மருத்துவர்கள்..! இதய பாதிப்புகள் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதாக தகவல்

இந்த அறிக்கை குறித்து கருத்து தெரிவித்துள்ள ஐ.நா மக்கள் தொகை நிதியத்தின் நிர்வாக இயக்குனர் டாக்டர் நடாலியா கனெம், "தங்கள் உடல் குறித்து முடிவெடுக்க பெண்களுக்கு அனுமதி மறுக்கப்படுவது என்பது பெண்கள் மற்றும் சிறுமிகளின் அடிப்படை மனித உரிமைகளை மீறும் செயல். இது ஏற்றத்தாழ்வுகளை வலுப்படுத்துகிறது மற்றும் பாலின பாகுபாடு காரணமாக நிகழும் வன்முறைகளை நிலை நிறுத்துகிறது. பெண்களைக் கீழ் படிய வைக்கும் ஒரு செயலாக இது இருக்கிறது" என்று கூறி உள்ளார்.



பல பெண்கள் தாங்கள் திருமணம் செய்யும் நபரைத் தேர்ந்தெடுக்கும் உரிமையோ அல்லது "இனம், பாலினம், பாலியல் நோக்குநிலை, வயது அல்லது திறன் காரணமாக குழந்தையைப் பெறுவதற்கான சரியான நேரமும் மறுக்கப்படுவதாக அறிக்கையை சுட்டிக்காட்டியுள்ளார் நடாலியா. பாலின சமத்துவமின்மை மற்றும் அனைத்து பாகுபாடுகளையும் நீக்குவதை பொறுத்தே உண்மையான முன்னேற்றத்தை காண முடியும். இதற்காக சமூக மற்றும் பொருளாதார கட்டமைப்புகளை மாற்ற ஆண்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 
Published by:Sivaranjani E
First published: