விண்டரை எதிர்க்க ஆர்கானிக் முறையிலான ஸ்கின் கேர் டிப்ஸ்!

அழகு சார்ந்த விஷயத்தில் மிகுந்த கவனமுடன் இருப்பது அவசியமாகிறது. கெமிக்கல் முறையிலான காஸ்மெடிக் பொருட்கள் தீங்கு விளைவிக்கின்றன.

விண்டரை எதிர்க்க ஆர்கானிக் முறையிலான ஸ்கின் கேர் டிப்ஸ்!
அழகு சார்ந்த விஷயத்தில் மிகுந்த கவனமுடன் இருப்பது அவசியமாகிறது. கெமிக்கல் முறையிலான காஸ்மெடிக் பொருட்கள் தீங்கு விளைவிக்கின்றன.
  • News18
  • Last Updated: January 18, 2019, 11:19 AM IST
  • Share this:
ஆர்கானிக் வாழ்க்கை முறையை பின்பற்றும் கலாச்சாரம் நாளுக்கு நாள் பெருகி வருகிறது. இப்படி, ஆர்கானிக்கை நோக்கி நகர்வதன் காரணம் கெமிக்கல் புழக்கத்தின் பெருக்கம்தான். ஆர்கானிக் உடலுக்கு ஆரோக்கியமானது என்பதுமட்டுமன்றி எந்தவித பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தாது.

குறிப்பாக அழகு சார்ந்த விஷயத்தில் மிகுந்த கவனமுடன் இருப்பது அவசியமாகிறது. பருவ மாற்றம் சருமத்தை பாதிப்பதோடு மட்டுமின்றி அதற்காக பயன்படுத்தும் கெமிக்கல் முறையிலான காஸ்மெடிக் பொருட்கள் தீங்கு விளைவிக்கின்றன. அதற்கான சிறந்த மாற்றாக பனிக்காலத்தில் உங்கள் சருமத்தை ஆர்கானிக் முறையில் பாதுகாக்க குறிப்புகளை அளிக்கிறோம்.
எண்ணெய் சருமம் கொண்டவர்கள்

எண்ணெய் சருமம் கொண்டவர்களின் முகம் எவ்வகையான  கிரீம்களை பயன்படுத்தினாலும் முகத்தை பொலிவிழக்கச் செய்துவிடும். அத்தகையோருக்கு பனிக்காலத்தில் வேப்பிலை, எலுமிச்சை, கிராம்பு, வெள்ளரி, டீ, ஸ்ராபெரி ஆகிய பொருட்களை பயன்படுத்தலாம். இவற்றைக் கொண்டு தயாரிக்கப்பட்ட ஆர்கானிக் காஸ்மெடிக் பொருட்களை வாங்கி பயன்படுத்துவது உங்கள் சருமத்தை பொலிவுடன் வைக்க உதவும்.

வேப்பிலையைப் பயன்படுத்துவதால் முகப்பருக்கள் கொண்ட சருமத்திற்கு எந்தவித பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது. குறிப்பாக அரிப்பு, வீக்கமடைதல் போன்றவை வராமல் தடுப்பதோடு முகத்தில் இருக்கும் கிருமிகளையும் அழித்துவிடும்.

வெள்ளரி சருமத்தின் உண்மையான நிறத்தை மீட்டெடுத்து புத்துணர்வோடு வைக்க உதவும். எலுமிச்சை அதிகப்படியான எண்ணெய் தன்மையைக் குறைத்து இழந்த பொலிவை மீட்டு புத்துணர்ச்சி அளிக்கும்.

நார்மல் சருமம் கொண்டவர்கள்

நார்மல் சருமம் கொண்டவர்களை பொதுவாக வரம் வாங்கியவர்கள் என வல்லுநர்கள் கூறுகின்றனர். ஏனெனில் இத்தகைய சருமம் எந்த பருவ காலத்தையும் ஏற்றுக் கொள்ளும் தன்மைக் கொண்டது. இவர்கள் போதுமான பாதுகாப்பை எடுத்துக் கொண்டாலே சிறப்பு.நார்மல் சருமம் கொண்டவர்கள் ரோஜா இதழின் சாற்றைப் பயனப்டுத்தினாலே போதும். இது பொலிவான சருமத்தை பாதுகாக்க உதவும் இயற்கை மூலிகை. கிருமிகளை அண்டவிடாத சிறந்த மருந்து. மேலும் ரோஜா இதழால் தயாரிக்கப்பட்ட எண்ணெய்யைப் பயண்டுத்துங்கள் . சிறந்த மாய்ஸ்சரைஸராக இருக்கும்.

அடுத்ததாக பீட்ரூட்டின் சாற்றையும் பயன்படுத்தலாம். ஏனெனில் இதில் இரும்பு சத்து, மினரல்ஸ் மற்றும் விட்டமின்களைக் கொண்டிருப்பதால் பளபளப்பான சருமத்தை அளிப்பதோடு இறந்த செல்களையும் நீக்குகிறது. கூடுதலாக மஞ்சள், தக்காளி சாறு, மல்பெரி சாறு, போன்றவற்றையும் பயன்படுத்தலாம்.

வறண்ட சருமம் கொண்டவர்கள்

வறண்ட சருமம் கொண்டவர்களுக்கு பனிக்காலம் எதிரி போன்றது. மற்ற சருமத்தை விட வறண்ட சருமத்திற்கு கூடுதல் சரும பாதுகாப்பு அவசியம். மருத்துவ மூலிகைகள் எடுத்துக் கொண்டாலும் அதை ஏற்றுக் கொள்ள காலம் நீட்டிக்கும்.இத்தகைய சருமம் கொண்டோர் டெய்சி பூ சாறு, ஐரிஸ் வேரின் சாறு, தேங்காய், ஆலிவ் ஆயில், ஓட்மீல், தேன் மற்றும் ஷீ பட்டர்ஆகியவற்றால் தயாரிக்கப்பட்ட ஆர்கானிக் ஸ்கின் கேர் தயாரிப்புகளை வாங்கி தினமும் உபயோகிக்கலாம். இது பனிப் பருவத்தைத் தாங்கக் கூடிய மூலிகைகளாகும். எனவே உங்கள் வறண்ட சருமத்திற்கு இவை சிறந்த தீர்வாக இருக்கும்.

குறிப்பு, தேங்காய் சாறு கொண்ட மாய்ஸ்சரைஸரை தேவைப்படும்போது உபயோகித்துக் கொள்ள எப்போதும் உடன்  வைத்திருப்பது நல்லது.

ஷீ பட்டர் தின பயன்பாடாக வைத்துக் கொள்வது நல்லது. ஏனெனில் அது சருமத்தின் வேர் வரைச் சென்று வழவழப்பான சருமத்தை அளித்து வறட்சியை நீக்குகிறது. இது சருமத்தை மறுமலர்ச்சி அடைய வைக்கிறது.

பாதிக்கப்பட்ட அல்லது அதிக வறட்சி கொண்ட சருமத்திற்கு ஐரிஸ் சாறு கொண்ட ஆர்கானிக் தயாரிப்பு சிறந்த மருந்தாகும்.

Also See..

First published: January 18, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்