குளிர்காலத்தில் சருமத்தையும், கூந்தலையும் பராமரிக்க சில எளிய டிப்ஸ்!

குளிர் காலத்தில் சருமமும், கூந்தலும் அதிகப்படியான பாதிப்புகளுக்கு உள்ளாகும் என்பது நம் அனைவருக்கும் நன்றாகவே தெரியும்.  அவற்றை எளிமையான முறையில் எப்படி பராமரிப்பது என்பது குறித்து பார்க்கலாம்.

குளிர் காலத்தில் சருமமும், கூந்தலும் அதிகப்படியான பாதிப்புகளுக்கு உள்ளாகும் என்பது நம் அனைவருக்கும் நன்றாகவே தெரியும்.  அவற்றை எளிமையான முறையில் எப்படி பராமரிப்பது என்பது குறித்து பார்க்கலாம்.

  • Last Updated :
  • Share this:
    குளிர் காலத்தில் சருமமும், கூந்தலும் அதிகப்படியான பாதிப்புகளுக்கு உள்ளாகும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. குளிர் காலத்தில் அதிகமாக தாகம் எடுக்காது என்பதால் நாம் குடிக்கும் தண்ணீரின் அளவு மிகவும் குறைந்துவிடும். ஆனால் அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியம். தண்ணீர் போதுமான அளவு குடித்தால் தான் சருமம் பொழிவாக இருக்கும். குளிரின் தாக்கத்தால் முடி உதிரும், பொடுகு அதிகமாகும். கண் மற்றும் பாத எரிச்சல் ஏற்படும். மலச்சிக்கல் ஏற்படும். வியர்வையே வெளியேறாது என்பதால், சருமத் துவாரங்கள் சுருங்கி, பொலிவிழக்கும். இவற்றை கட்டுபடுத்த சில அழகு குறிப்புகள்.

    1. உண்ணும் உணவில் கவனம்: குளிர் காலத்தில் முதலில் சருமம்தான் வரட்சியாகும். அவற்றை கட்டுபடுத்த நாம் உண்ணும் உணவில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம் . ஏனெனில் உடலில் உள்ள சருமத்தை புத்துணர்ச்சி பெறச் செய்ய, சரியான ஊட்டச்சத்துள்ள உணவுகளை உட்கொள்ளவது முக்கியம். ஒரு நாளைக்கு 3-4 லிட்டர் தண்ணீர் குடிப்பது அவசியம். இது உங்கள் தோலின் ஈரப்பதத்தைத் தொடர்ந்து பராமரிக்க உதவுகிறது. மேலும் நீர் காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிடுவது நல்லது.



    2. சருமத்தை ஈரபதமாக வைத்திருக்க வேண்டும்: குளிர் காலத்தில் சருமத்தை ஈரபதமாக வைத்திருக்க மாய்ஸ்ட்ரைசர் கிரீம்களை பயன்படுத்துவது நல்லது. உங்கள் தோலுக்கு ஏற்ற கிரீம்களை, சிறந்த தோல் மருத்துவரின் ஆலோசனை பெற்று பயன்படுத்துவது நல்லது. வீட்டில் எளிமையாகக் கிடைக்ககூடிய தயிர் அல்லது பால் கொண்டு சருமத்தை ஈரபதமாக வைத்திருக்கலாம்.



    3. உலர்ந்த பழமான பாதம் மற்றும் நெய் சேர்த்துக்கொள்ளவும்: குளிர் காலத்தில் பாதாம் மற்றும் நெய் அதிகளவில் சேர்த்துக்கொண்டால் உடல் ஆரோக்கியம் பெறுவதுடன் சருமம் பொழிவடையும். Flaxseeds என்ற ஆளி விதைகளை உண்பது உடலுக்கும் சருமத்துக்கும் நல்லது.



    4. நெல்லிகாய் நல்லது: தினம் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டால் `மலச்சிக்கல்’ நீங்கும், செரிமானம் சீராகும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். நெல்லிக்காயில் வைட்டமின் சி அதிகம் இருக்கிறது. பொதுவாகவே வைட்டமின் சி அமிலத்தன்மையை அதிகப்படுத்தும் என்பதால், சருமப் பிரச்னைகள், ஒவ்வாமை, முடி உதிர்வைத் தடுக்கும், முதிர்ச்சியான தோற்றம் வராது. குளிர்ச்சி அதிகமாக இருப்பதால் வரும் சிறு சிறு குளிர்கால நோய்கள் வராமல் தடுக்கும்.

    5.  உதடுகள் பத்திரம்: குளிர் காலத்தில் உதடுகள் வறட்சியடைந்து உலர்ந்து தோற்றமளிக்கும். உதடுகளில் வெடிப்புகள் உண்டாகும். அப்படி இருக்கும் போது உதட்டின் தோலைக் கடிக்காதீர்கள். அப்படிச் செய்வதால், உதட்டின் நிறம் கறுப்பாக மாற வாய்ப்பிருக்கிறது. இதைத்தடுக்க நெய் மற்றும் ஆலிவ் ஆயிலை உதட்டில் தடவினால் உதடுகள் மென்மையடையும்.



    6. முடி உதிர்வை தடுப்பது எப்படி? குளிர் காலத்தில் தலை குளித்தால் முடியை நன்றாக உலர வைக்க வேண்டும். முடியை உலர வைக்க டிரையர் உள்ளிட்டவைகள் பயன்படுத்துவதை தவிர்க்கவும் . வாரம் ஒருமுறை ஆயில் மசாஜ் செய்வது நல்லது. ஊட்டச்சத்து குறைபாட்டாலும் முடி உதிர்வு ஏற்படலாம்.



    ஆரோக்கியமான கூந்தலுக்கு புரதச்சத்து, இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் நிறைந்த உணவுகள் அவசியம். கேரட், பச்சைக் காய்கறிகள், மிளகு, எலுமிச்சை, திராட்சை, உலர் பழங்கள், மீன், முட்டை போன்ற உணவுகள் கூந்தலை அடர்த்தியாகவும் ஆரோக்கியமாகவும் பளபளப்பாகவும் வைத்திருக்க உதவுகின்றன்.

    Also See... 
    Published by:Vaijayanthi S
    First published: