முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / குளிர்காலத்தில் உங்கள் வாகனம் பழுதாகாமல் பாதுகாக்க உதவும் கார் கேர் டிப்ஸ்

குளிர்காலத்தில் உங்கள் வாகனம் பழுதாகாமல் பாதுகாக்க உதவும் கார் கேர் டிப்ஸ்

கார்

கார்

ஒரு காரின் பேட்டரியானது வெப்பமான காலநிலையில் இயங்குவதை விட குளிர் காலநிலையில் சரியாக இயங்குவதில் பிரச்சனைகளை சந்திக்கிறது. குளிர் கிளைமேட்டானது வாகனத்தின் பேட்டரியை அடிக்கடி பாதிக்கிறது. குளிர் சீசன் பேட்டரியின் செயல்பாட்டை பாதித்து, காரின் எஞ்சின் ஸ்டார்ட்டாவதில் பிரச்சனை ஏற்படுத்தலாம். எனவே எப்போதுமே குளிர்காலம் வருவதற்கு முன்பே காரின் பேட்டரியை நன்கு பரிசோதித்து தேவைப்பட்டால் உடனடியாக மாற்றுவது நல்லது. பேட்டரியோடு சேர்த்து அனைத்து வயர்கள் மற்றும்லீட்ஸ்களையும் செக் செய்து கொள்ள வேண்டும்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

தற்போது மழை பெய்து வந்தாலும் இன்னும் சில நாட்களில் குளிர் சீசன் தீவிரமடைய உள்ள நிலையில் பல வாகன ஓட்டுநர்கள் பனி பொழியும் சாலைகள், உறைபனி வெப்பநிலை போன்ற பல சவால்களை எதிர்கொள்ள நேரிடும்.

குளிர் சீசனில் குறிப்பாக கடும் குளிர் நிலவும் பகுதிகளில் விபத்துக்கள் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. இந்த விபத்துகளில் பெரும்பாலானவை கடும் மூடுபனி மற்றும் பனிப்பொழிவு காரணமாக ஓட்டுனர்களால் சாலைகளை சரிவர பார்க்க முடியாமல் போவதால் ஏற்படுகிறது. எனினும் பல்வேறு தனிநபர்கள் குளிர்காலத்தில் தங்களுடைய கார்களை பராமரித்து பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை உணருவதில்லை.

டிரைவிங் அனுபவத்தை எதிர்மறையாக பாதிக்கும் குளிர் சீசனில் கார் பராமரிப்பு மிகவும் முக்கியமானது. இல்லை என்றால் லோ டயர் பிரஷர், டெட் பேட்டரிஸ் அல்லது ஸ்டார்ட்டிங் ட்ரபிள் உள்ளிட்ட பல சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடலாம். உங்கள் கார் குளிர்காலம் முழுவதும் சிறந்த நிலையில் இருப்பதை உறுதிசெய்ய, கீழ்வரும் கார் பராமரிப்பு டிபஸ்களை பின்பற்றுங்கள்.

குளிர்காலத்தில் உங்கள் கார் நன்கு பராமரிக்கப்படுகிறதா என்பதை உறுதிப்படுத்தும் டிப்ஸ்கள்:

நீங்கள் மிகவும் குளிர்நிலவும் அல்லது பனி பொழியும் பகுதியில் வசிக்கிறீர்கள் என்றால், உங்கள் காரை எப்போதும் சரியான நேரத்திற்கு சர்விஸ் செய்து பராமரிப்பது மிக அடிப்படை மற்றும் முக்கிய நடவடிக்கைகளில் ஒன்றாகும். அதே போல குளிர் காலத்திற்கு முன்னதாகவே உங்கள் காரை ரெகுலர் சர்விஸ் செய்வதை வழக்கமாக்கி கொள்ளுங்கள். விரைவாக தேய்ந்து போகும் எந்த உதிரி பாகங்களையும் சரிசெய்வதையோ அல்லது மாற்றுவதையோ புறக்கணிக்காதீர்கள். அப்படி செய்தால் கார் பழுதடையும் மற்றும் பிரேக்டவுனாகி நடுவழியில் நிற்கும் அபாயம் அதிகம்.
கிளைமேட் அல்லது சாலைகளின் நிலை எதுவாக இருந்தாலும் விபத்தின்றி வாகனம் ஓட்ட பிரேக்கிங் சிஸ்டம் சரியாக வேலை செய்வது மிகவும் முக்கியம். எனவே பிரேக் பேட்ஸ்கள் முற்றிலும் தேய்ந்து போகும் முன் அவற்றை பரிசோதித்து மாற்றவும். தேவைப்பட்டால் பிரேக் காலிப்பர்ஸ்களுக்கு முறையாக க்ரீஸ் அப்ளை செய்யவும்.
வாரந்தோறும் டயர் பிரஷரை சரிபார்க்கவும். லோ பிரஷர் கொண்ட டயர்களை வைத்து காரை இயக்குவது தேவையற்ற விபத்துகளை ஏற்படுத்த கூடும். குறிப்பாக நீங்கள் அதிகம் பனிபொழியும் பகுதிகளில் வசிக்கிறீர்கள் என்றால் வழக்கமான டயர்களுக்கு மாற்றாக, குளிர்காலத்தில் உங்கள் வாகனத்தில் கட்டாயம் வின்டர்/ஸ்னோ டைப் டயர்களை பயன்படுத்துங்கள். இந்த வெரைட்டி டயர்கள் கடுமையான குளிரிலும், பனிக்கட்டி அல்லது பனி நிறைந்த சாலைகளிலும் சிறந்த ட்ராக்ஷனை பராமரிக்க உதவுகிறது.
ஒரு காரின் பேட்டரியானது வெப்பமான காலநிலையில் இயங்குவதை விட குளிர் காலநிலையில் சரியாக இயங்குவதில் பிரச்சனைகளை சந்திக்கிறது. குளிர் கிளைமேட்டானது வாகனத்தின் பேட்டரியை அடிக்கடி பாதிக்கிறது. குளிர் சீசன் பேட்டரியின் செயல்பாட்டை பாதித்து, காரின் எஞ்சின் ஸ்டார்ட்டாவதில் பிரச்சனை ஏற்படுத்தலாம். எனவே எப்போதுமே குளிர்காலம் வருவதற்கு முன்பே காரின் பேட்டரியை நன்கு பரிசோதித்து தேவைப்பட்டால் உடனடியாக மாற்றுவது நல்லது. பேட்டரியோடு சேர்த்து அனைத்து வயர்கள் மற்றும்லீட்ஸ்களையும் செக் செய்து கொள்ள வேண்டும்.
வெப்பநிலை குறைவது வாகனத்தில் உள்ள திரவங்களை பாதிக்கலாம் என்பதால் என்ஜின் ஆயில் மற்றும் கூலன்ட் ஆகியவற்றையும் செக் செய்து தேவைப்பட்டால் மாற்ற வேண்டும்.
பனி காலத்தில் வாகனம் ஓட்டும் போது ஏற்படும் இடையூறுகளைத் தவிர்க்க வாகனத்தின் உள்ளே மட்டுமல்ல வெளியேயும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். விண்ட்ஸ்கிரீன், சைட் மிர்ரர்ஸ் மற்றும் அனைத்து லேம்ப் அசெம்பிளிகளையும் கழுவ வெதுவெதுப்பான நீரை பயன்படுத்தவும். எனினும் நீங்கள் உயரமான பகுதியில் வசிப்பவர் என்றால் இவ்வாறு செய்யாதீர்கள். ஏனென்றால் நீங்கள் வாகனத்தை சுத்தம் செய்ய வெதுவெதுப்பான நீரை பயன்படுத்துவதால் விண்ட்ஸ்கிரீன் அல்லது பிற கண்ணாடிகள் விரிசல் விட கூடும்.
First published:

Tags: Automobile, Car, Winter