வண்ணங்களின் திருவிழாவான ஹோலி பண்டிகை நெருங்கி விட்டது. ஹோலியை கொண்டாட ஒவ்வொருவருக்கும் வித்தியாசமான வழி உள்ளது. ஹோலியின் போது ஒரு சிலர் பல வண்ணங்களுடன் கூடிய கலர் பவுடரை கொண்டு விளையாடுவதை விரும்புவார்கள்.அதே போல நிச்சயமாக தண்ணீர் சார்ந்த அல்லது தண்ணீர் கலக்கப்பட்ட( watercolours ) வண்ணங்களுடன் விளையாடுவதை ரசிக்கும் சிலரும் இருக்கிறார்கள். ஆனால் இது நம் உடலுக்கு ஏற்ற மோசமான நடைமுறையாக மாறிவிடும் ஆபத்து இருப்பதாக நிபுணர்கள் எச்சரிகின்றனர்.
மலிவான தரமற்ற கலர் பொடிகள் சருமத்திற்கும், கூந்தலுக்கும் எவ்வாறு தீங்கு விளைவிக்கும் என்பதை அறிவோம். எனவே தான் ஹோலி கொண்டாட்டங்களின் போது ஆர்கானிக் மற்றும் இயற்கையாக தயாரிக்கப்பட்ட வண்ணங்களை பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறது. ஆனால் செயற்கையாக தயாரிக்கப்பட்ட கலர்களை விட நீர் சார்ந்த வண்ணங்கள் உடலுக்கு இன்னும் மிகவும் தீங்கு விளைவிக்கும் என்பது தெரியுமா.? ஹோலிக்கு நீர் சார்ந்த வண்ணங்களை ஏன் பயன்படுத்தக்கூடாது என்பதற்கான சில விரிவான காரணங்களை பார்க்கலாம்.
தோல் மற்றும் கூந்தலுக்கு அதிக தீங்கு..
நீர் சார்ந்த வண்ணங்கள் உடலில் அரிப்பு, வீக்கம், தலைமுடி சேதம் உள்ளிட்ட பல விளைவுகளை ஏற்படுத்தும். இதற்கு காரணம் நாம் வழக்கமாக கடைகளில் வாங்கும் நீர் சார்ந்த வண்ணங்கள் ரசாயனங்களால் நிரம்பியுள்ளது தான். இவற்றை பயன்படுத்தி ஹோலி கொண்டாடுவதால் தோல் மற்றும் முடிக்கு பாதிப்புகளே மிஞ்சும். அதுவே ஹோலிக்காக நீங்கள் இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட வண்ணங்களை பயன்படுத்தினால், அனைத்து தோல் ஆபத்துகள் மற்றும் முடி அபாயங்களிலிருந்து உங்களையும், உங்களை சுற்றி உள்ளவர்களையும் பாதுகாப்பாக வைத்திருக்க முடியும்.
சீக்கிரம் போகாது
நீர் சார்ந்த வண்ணங்களை பயன்படுத்தி ஹோலி விளையாடிய பிறகு, அந்த வண்ணங்களை உடலில் இருந்து முழுவதும் போக்க சில மணிநேரங்கள் ஆகும். ரசாயனம் கலந்திருப்பதால் சருமத்தில் நன்றாக ஒட்டியிருக்கும் கலர்களை உரித்தெடுக்கும் முயற்சியில் சரும செல்கள் பாதிப்படையும். ஆனால் வண்ண நிறங்களை அகற்ற பலமணிநேரம் செலவழித்த பிறகும், முழுவதும் மறையாமல் இந்த நிறங்கள் சில நாட்கள் சருமத்திலேயே இருக்கும்.
தீங்கு தரும் கெமிக்கல்கள்..
நீர் சார்ந்த வண்ணங்கள் பெரும்பாலும் செயற்கை மற்றும் இயந்திர எண்ணெய், உலோக ஆக்சைடுகள், தொழில்துறை சாயங்கள், அமிலங்கள், மைக்கா, கண்ணாடி ஆகியவை கொண்டே தயாரிக்கப்படுகின்றன. இவை உடல் மற்றும் சருமத்திற்கு தீங்கு தரும் நச்சுத்தன்மை வாய்ந்தவை. இது சிவப்பு திட்டுகள், தீவிர ஒவ்வாமை, வீக்கம், முகப்பரு மற்றும் அரிக்கும் தோலழற்சி உள்ளிட்ட கோளாறுகளை ஏற்படுத்தும். அதோடு, பச்சை, சிவப்பு மற்றும் கருப்பு நிறம் கொண்ட நீர் சார்ந்த வண்ணங்களில் முறையே காப்பர் சல்பேட், மெர்குரி சல்பேட் மற்றும் லீட் ஆக்சைடு உள்ளன. இது குருட்டுத்தன்மை, மனநல கோளாறுகள், புற்றுநோய்கள், ஆஸ்துமா உள்ளிட்டவற்றை ஏற்படுத்த கூடும்.
கொரோனா நேரத்தில்..
ஏற்கனவே இதில் இவ்வளவு தீமைகள் உள்ள நிலையில் நாடு முழுவதும் மீண்டும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் வேளையில், நீரில் கலந்திருக்கும் கலர்களை கொண்டு ஹோலி விளையாடுவது தொற்று எளிதாக பரவ வழி வகுக்கும். உலர்ந்த வண்ணங்களைப் பொறுத்தவரை அவை பாக்கெட்டுகளில் உள்ளன, எனவே அதை கொஞ்சம் பாதுகாப்பாகக் கருதலாம், ஆனால் வாட்டர் கலர்களைக் கலக்க நாம் பயன்படுத்தும் நீர் கூட பாதுகாப்பானதா என்று அஞ்சும் சூழல் உள்ள நிலையில் நீர் சார்ந்த வண்ணங்களை ஹோலிக்கு பயன்படுத்தாமல் தவிர்ப்பதே நல்லது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Holi, Holi Celebration