உங்கள் குழந்தைக்கு ஏன் தடுப்பூசி அட்டை மிக அவசியம் என்று தெரியுமா?

உங்கள் குழந்தைக்கு ஏன் தடுப்பூசி அட்டை மிக அவசியம் என்று தெரியுமா?

தடுப்பூசி அட்டை

உங்கள் குழந்தையின் தடுப்பூசி அட்டையில் என்னென்ன பயன்கள் இருக்கிறது என்பதை இதன் மூலம் தெரிந்துக்கொள்ளுங்கள்..

  • Share this:
    குழந்தை வளர்ப்பது எவ்வளவு வரமோ அதுபோல் உங்கள் குழந்தை, ஒரு வேலை சரியாக கவனிக்காவிடில் சிரமமும் ஆகலாம். உங்கள் சிறு சந்தோச பெட்டகத்தின் முடிவுகளை எடுக்கும் பொழுது நீங்கள் பதற்றம் அடையலாம்.. நீங்கள் விரும்புவதெல்லாம் உங்கள் குழந்தைக்கு சிறந்ததை கொடுத்து ஒவ்வொரு நாளும் நலமாக வளர வைப்பதே.  

    குழந்தையின் முன் பருவ காலங்களில், ஒரு குழந்தையின் நோய் எதிர்ப்பு திறன் வளர்ந்து கொண்டுதான் இருக்கும். இது அவர்களை தொற்று மற்றும் நோய்களுக்கு உள்ளாகும் அபாயம் ஏற்படுகிறது. அதனால் குழந்தைகளுக்கு தடுப்பூசியுடன் சிறந்த சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்தையும் சரியான நேரத்தில் கொடுத்தால் இவற்றை தடுக்கலாம். சரியான நேரத்தில் தடுப்பூசி போட்டால் உங்கள் குழந்தையை இறப்பு மட்டுமல்ல தடுக்கக்கூடிய போலியோ, டெட்டனஸ், தட்டம்மை, வறட்டு இருமல் மற்றும் மூளைக்காய்ச்சல் போன்ற நோயில் இருந்து காப்பாற்றலாம். இந்த தடுப்பூசிகள் அந்த நோயின் ஆன்டிஜென்களில் இருந்து செய்யப்பட்டவை இவை உங்கள் குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தியினை தூண்டி அந்த நோயிற்கு எதிராக வேலை செய்யும். தொடர்ச்சியாக, உங்கள் குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தியினை தூண்டி உங்கள் குழந்தையை உயிர் கொல்லி  நோய்களிடமிருந்து பாதுகாக்கும்.

    மேலும், பச்சிளங் குழந்தைக்கு தடுப்பூசிபோடுவது மூலம் அவர்களை மட்டும் கொடிய நோய்களிலிருந்து பாதுகாப்பது மட்டுமில்லாமல் உங்கள் குடும்பத்தினர் மற்றும் உங்களை சுற்றி உள்ள  நண்பர்களையும் பாதுகாக்கிறது. இது உங்கள் எதிர்கால தலைமுறையினரையும் பாதுகாக்கும் - முறையான தடுப்பூசிகள் மூலம், நாம் கணிசமாக பெரும் கஷ்டங்களை குறைக்கலாம். நாம் இதை பல நூறு வருடங்களுக்கு முன்பு பெரும் ஆபத்து என கருதிய பெரியம்மை நோயில் பார்த்து உள்ளோம்.

    இருப்பினும், உங்கள் குழந்தைகளுக்கு வெறும் தடுப்பூசி  கொடுப்பவர்களாக மட்டும் இருக்க கூடாது. மிக முக்கியமானது, வல்லுநர்கள் குறித்த நேரத்தில் சரியாக இதனை உங்கள் குழந்தைகளுக்கு தருவது. தடுப்பூசி  அட்டை இதனை செய்ய  சரியாக உதவும். இது உங்கள் குழந்தையின் தடுப்பூசி அட்டவணையை தொடர்ந்து கண்காணித்து, உங்கள் குழந்தைகளுக்கு அடுத்து எப்பொழுது தடுப்பூசி என்பதை சரியாக தெரிந்துகொள்ளலாம் . பொதுவாக, தடுப்பூசி அட்டை உங்கள் குழந்தை நல மருத்துவர் மூலம் தரப்படும். இதில் 18 வயது வரை பரிந்துரைக்கப்படும் அனைத்து முக்கிய தடுப்பூசிகளின் விவரமும் இருக்கும்.

    உங்கள் குழந்தைக்கு ஏன் தடுப்பூசி அட்டை மிக அவசியம் என சில காரணங்கள்:

    • பாதுகாப்பான மற்றும் பயனுள்ள அட்டவணை


    சீரான முறையான ஆராய்ச்சிக்கு பின்னர் உருவாக்கப்பட்ட, குழந்தைகளுக்கான தடுப்பூசி அட்டவணை தடுப்பூசி அட்டையில் இருக்கும். உங்கள் குழந்தையின் வளர்ச்சிக்கு ஏற்ப ஒவ்வொரு தடுப்பூசியும் பட்டியலிடப்படும். ஒவ்வொரு தடுப்பூசிக்கும் இடையில் உள்ள இடைவெளி  அந்தந்த வயது அல்லது நேரத்திற்கு ஏற்ப குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தியின் தேவைக்கு தகுந்தவாறு இடைவெளி அமைக்கப்பட்டுள்ளது. மருத்துவ ஆணையம் பரிந்துரைக்கப்பட்ட தடுப்பூசி அட்டவணை பச்சிளங் குழந்தைகளுக்கு மிகவும் பாதுகாப்பானது மற்றும் பயனுள்ளது.

    • உங்கள் குழந்தையின் மருத்துவ பதிவு


    உங்கள் குழந்தையின் தடுப்பூசி அட்டையில் உங்கள் குழந்தையின் முழு மருத்தவ பதிவுகளும் இருக்கும். நீங்கள் வேறு மருத்துவமனையோ, நகரமோ அல்லது மாநிலமே மாறினால் கூட, உங்கள் குழந்தையின் தடுப்பூசிகளை தற்போது வரை தடுப்பூசி அட்டையை பயன்படுத்தி புதுப்பித்துக் கொள்ளலாம். எந்த ஒரு எலக்ட்ரானிக் தரவுகளும் மாற்றப்பட்டு ஒருங்கிணைக்கப்பட வேண்டியது இல்லை. உங்கள் கைகளில் முழு விவரமும் உள்ளது!

    • பெற்றோர்களாக உங்களுக்கு நன்மைகள்


    தடுப்பூசி பதிவு வைத்துக்கொள்வது பகல்நேர பராமரிப்பாளர்கள், பள்ளிகள், மருத்துவ நிபுணர்கள் அல்லது இம்மிகிரேஷன் அதிகாரிகள் போன்ற நிறுவனங்களுக்கு குழந்தை அந்த தேதி வரை தடுப்பூசிகள் போடப்பட்டு மற்ற குழந்தைகளுக்கும் பாதுகாப்பாக இருக்கிறது என்பதை உறுதி செய்ய உதவும். கூடுதலாக, பெற்றோர்களுக்கு குழந்தையின் தடுப்பூசி அட்டை குழந்தையின் தடுப்பூசி பட்டியலை சரியாக தொடர உதவுகிறது.

    • தடுப்பூசி கொடுப்பவர்களுக்கான பயன்கள்


    தடுப்பூசி அட்டை உங்கள் குழந்தையின் மருத்துவ வரலாற்றை தெளிவாக கொண்டுள்ளது. ஒரு மருத்துவ துறையினருக்கு இது எந்த நேரத்திலும் தேவைப்படும் ஒரு தகவல். தடுப்பூசி அட்டை, அவர்களுக்கு அந்த குழந்தை எந்த எந்த ஊசி போடப்பட்டுள்ளது எதாவது தடுப்பூசிக்கு ஒவ்வாமை உள்ளதா என்பது போன்ற தகவல்கள் கிடைக்கும்.

    சரியான நேரத்தில் போட வேண்டிய தடுப்பூசிகளின் நன்மைகள் இங்கு விவரிக்கப்பட்டுள்ளன மற்றும் அதனை பதிவு செய்வது மிக சிறப்பு. உங்கள் குழந்தையின் தடுப்பூசிகளை சரிவர தடுப்பூசி அட்டவணையின் உதவியுடன் தொடருங்கள்.

    பொறுப்பு துறப்பு: இது GlaxoSmithKline Pharmaceuticals Limited. டாக்டர். அன்னி பெசன்ட் ரோடு, வர்லி, மும்பை 400 030 -ஆல் பொதுநலம் கருதி வெளியிடப்பட்டது. இங்கு உள்ள கருத்துக்கள்  பொது விழிப்புணர்வுக்கு மட்டுமே. இதில் உள்ள  எதுவும் மருத்துவ பரிந்துரைகள் அல்ல. உங்கள் நிலை சார்ந்து ஏதேனும் கேள்வி அல்லது கருத்து இருந்தால் அருகில் உள்ள மருத்துவரை அணுகவும். ஒவ்வொரு நோயின் தடுப்பூசி மற்றும் தடுப்பூசிகளின் முழு பட்டியலிற்கு உங்கள் குழந்தைகள் நிபுணரை அணுகவும். எந்தவொரு GSK தயாரிப்புடனும் பாதகமான நிகழ்வை india.pharmacovigilance@gsk.com இல் நிறுவனத்திற்கு புகாரளிக்கவும்.

    NP-IN-MLV-OGM-200049, DOP Dec 2020

    Published by:Tamilmalar Natarajan
    First published: