Home /News /lifestyle /

New year Resolution | 4,000 ஆண்டுகளாக தொடரும் 'நியூ இயர் ரெசல்யூஷன்' - இது எதற்காக என்று தெரியுமா?

New year Resolution | 4,000 ஆண்டுகளாக தொடரும் 'நியூ இயர் ரெசல்யூஷன்' - இது எதற்காக என்று தெரியுமா?

மாதிரி படம்

மாதிரி படம்

புத்தாண்டில் உடல் எடையை குறைப்பது அல்லது ஆரோக்கியமான உணவை சாப்பிடுவது என்று மக்கள் தங்களுக்கு வாக்குறுதிகள் அளிக்கும் தற்போதைய நடைமுறையைப் போலல்லாமல், பாபிலோனியர்கள் தங்கள் கடன்களையும் கடன் வாங்கிய பொருட்களையும் திருப்பித் தருவதாக உறுதியளிப்பார்கள்

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
நியூ இயர்னு சொன்னா நமக்கு முதல்ல ஞாபகம் வர்றது "ஹாப்பி நியூ இயர்..." என்ற பாட்டும், 'நமக்கு நாமே' என்கிற பிளானும் தாங்க. நமக்கு நாமேனு சொன்னதும் வேறு எதையோ நினைச்சுக்காதீங்க. இதுக்கு அர்த்தம், இந்த வருஷமாவது உருப்படியா? ஏதாவது செய்யணும் மனசுக்குள்ள பிளான் பண்ணும் புது வருட தீர்மானம் தான். அதாவது நியூஇயர் ரெசல்யூஷன். அந்தவகையில் ஏன் நியூஇயர் ரெசல்யூஷன் எடுக்கிறோம் என்பதை இங்கு தெரிந்துகொள்வோம்.

புத்தாண்டு 2021க்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், கோவிட் -19 (Covid-19)ஐ எதிர்கொண்ட இந்தாண்டு 2020 ஒரு பேரழிவு ஆண்டாக பலரால் பார்க்கப்படுகிறது. வருகிற புத்தாண்டு தங்கள் வாழ்க்கையை மாற்றும் நிகழ்வாக கருதுபவர்களும் நியூ இயர்க்கான ரெசல்யூஷன்களை (resolutions) எடுப்பதில் உறுதியாக நம்புகிறார்கள். ஆனால் இந்த பாரம்பரியம் எப்படி, ஏன் தொடங்கியது என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?

ஜனவரி 1-ஐ புத்தாண்டாக அறிவிக்கும் முடிவு கிமு 153ல் ரோமன் செனட் (Roman Senate) எடுத்தது, ஆனால் கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்குப் பிறகு ஜூலியஸ் சீசரால் (Julius Caesar) கிமு 44ல் இது அதிகாரப்பூர்வமாக்கப்பட்டது. ஆனால் புத்தாண்டு கொண்டாட்டம் (New Year celebration) மற்றும் ரெசல்யூஷன் (resolutions) நடைமுறை 4,000 ஆண்டுகளுக்கு முன்னரே எடுக்கப்பட்டது என்று கூறப்படுகிறது, இது பாபிலோனிய நாகரிகத்தால் (Babylonian civilisation) தொடங்கப்பட்டது என்று சிலர் தெரிவிக்கின்றனர். அவர்களின் நியூ இயர் கொண்டாட்டங்கள் நாம் இப்போது நியூ இயரை கொண்டாடுவதிலிருந்து முற்றிலும் மாறுபட்டது என்றும் கூறப்படுகிறது.அகிட்டு திருவிழாவின்போது (Festival of Akitu), அந்த பாபிலோனிய நாகரிகத்தில் வாழும் மக்கள் தங்கள் கடவுளிடம் ஜெபிக்கவும், பயிர்களை நடவு செய்யவும், ராஜாவுக்கு விசுவாசத்தை மீண்டும் உறுதிப்படுத்துவதாகவும் அறியப்பட்டனர். கடவுளுக்கு முன் வாக்குறுதிகளை அளித்தால் அது நியூ இயரின்போது நிறைவேறும் என்றும் அது மக்களுக்கு நன்மை பயக்கும் என்பதும் பாபிலோனியர்களின் நம்பிக்கையாக இருந்தது.

இருப்பினும், புத்தாண்டில் உடல் எடையை குறைப்பது அல்லது ஆரோக்கியமான உணவை சாப்பிடுவது என்று மக்கள் தங்களுக்கு வாக்குறுதிகள் அளிக்கும் தற்போதைய நடைமுறையைப் போலல்லாமல், பாபிலோனியர்கள் தங்கள் கடன்களையும் கடன் வாங்கிய பொருட்களையும் திருப்பித் தருவதாக உறுதியளிப்பார்கள். ஜனவரி 1ம் தேதி மட்டுமே கொண்டாடப்படும் நம் புத்தாண்டு போலல்லாமல், அவர்களின் திருவிழா 12 நாள் நீடித்தது.

சீசரின் ஆட்சிக் காலத்தில் கூட, நியூ இயர் ரெசல்யூஷன்களுக்கு மக்கள் தங்களை பற்றி மட்டுமே யோசிக்காமலும் ஏதாவது உருப்படியாகத் செய்யத் தீர்மானிப்பதை விடவும் கடவுளுக்கு வாக்குறுதியளிப்பதைப் பற்றியது. இடைக்காலத்தில், ஒவ்வொரு ஆண்டின் இறுதியில், மாவீரர்கள் நைட்ஹூட்டின் மதிப்புகளை நிலைநிறுத்த உறுதிமொழி எடுப்பார்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது.அந்த மரபுகளிலிருந்து விலகி, தற்போதைய காலங்களில், ரெசல்யூஷன்கள் பெரும்பாலும் ஒரு நபர் தனக்கோ / தனக்கு அளிக்கும் வாக்குறுதிகளாகவே உள்ளது. கிறிஸ்தவர்களிடையே பாரம்பரியமாக இந்த நடைமுறை தொடங்கியது. இருப்பினும், உலகெங்கிலும் கிரிகோரியன் புத்தாண்டு (Gregorian New Year) கொண்டாடப்படுவதால், ரெசல்யூஷன்களை எடுக்கும் நடைமுறையும் உலகெங்கிலும் உள்ள பலரது நம்பிக்கையை பொருட்படுத்தாமல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எது எப்படியோ நீங்கலும் வரும் வருடத்திற்கான ரெசல்யூஷனை எடுக்க இப்போதே தயாராகுங்கள்!.

 

 
Published by:Sivaranjani E
First published:

Tags: New Year Celebration, Newyear resolution

அடுத்த செய்தி