• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • உலக சம ஊதிய நாள்.. பெண்களுக்கான ஊதிய இடைவெளி குறைவது எப்போது?

உலக சம ஊதிய நாள்.. பெண்களுக்கான ஊதிய இடைவெளி குறைவது எப்போது?

காட்சி படம்

காட்சி படம்

ஆண்டுதோறும் செப்டம்பர் 18 ஆம் தேதி ‘சர்வதேச சம ஊதிய நாள்’ கடைபிடிக்கப்படுகிறது.

  • Share this:
பெண்களுக்கான சம உரிமை, மதிப்பு என்பது பல நூற்றாண்டுகளைக் கடந்து இன்றளவும் தொடர்ந்து மறுக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. திறமை இருந்தும் அவர்களுக்கான மதிப்பும், மரியாதையும் சமூகத்தின் அனைத்து நிலைகளிலும் கிடைப்பதில்லை. உரிய பிரதிநிதித்துவமும் கொடுக்கப்படுவதில்லை. அடக்குமுறை, ஏற்றத்தாழ்வு, ஒதுக்கி வைத்தல் உள்ளிட்ட மனித சமூகத்துக்கு எதிரான மனநிலையோடு பெண்கள் நடத்தப்படுகிறார்கள்.

பாலின சமத்துவம் குறித்து பல நூற்றாண்டுகளாக தொடர்ந்து குரல் எழுப்பப்பட்டு வந்தாலும், 20ம் நூற்றாண்டான இன்றும், அவர்களுக்கான போராட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. பொருளாதார அளவுகோலில் ஆண்களுடன் ஒப்பிடும்போது இன்றும் இரண்டாம் தர நிலையிலேயே வைக்கப்படுகிறார்கள். இது குறித்து பேசிய ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரஸ், உலகளவில் பல தசாப்தங்களாக ஆண்களுக்கு நிகரான ஊதியம் பெண்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தப்பட்டுக் கொண்டே இருந்தாலும், பல சட்டங்கள் நடைமுறையில் இருந்தாலும் ஆண்களுடன் ஒப்பிடும்போது குறைவான ஊதியத்தை மட்டுமே பெறுகிறார்கள் எனத் தெரிவித்துள்ளார்.

ஒரே வேலைக்கு ஆண்கள் ஒரு டாலர் ஊதியமாக பெற்றால், பெண்கள் 0.80 டாலருக்கும் குறைவாகவே ஊதியம் பெறுகிறார்கள் என கூறும் அன்டோனியோ குட்டரஸ், இந்த இடைவெளியைப் போக்க இன்னும் தீர்க்கமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இதுவே, குழந்தைகளை உடைய பெண்கள், நிறவெறியை எதிர்கொள்ளும் சமூகத்தில் உள்ள பெண்கள், புலம்பெயர்ந்த பெண்கள், அகதிகள், குறைபாடு உடைய பெண்களாக இருந்தால், ஊதிய விகிதத்தில் மிகப்பெரிய ஏற்றத் தாழ்வுகளை சந்திப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Also read : தினமும் வெந்நீர் குடிப்பதை பழக்கமாக்கிக் கொண்டால் கிடைக்கும் நன்மைகள்..!

திறமை, மதிப்பு, சம ஊதியம் ஆகியவை பெண்களுக்கு கிடைப்பதை உறுதி செய்வதை வலியுறுத்தி ஆண்டுதோறும் செப்டம்பர் 18 ஆம் தேதி ‘சர்வதேச சம ஊதிய நாள்’ கடைபிடிக்கப்படுகிறது. இந்த தினம் முதன்முதலாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இதே நாளில் அறிவிக்கப்பட்டது. இந்த ஆண்டு 2வது ஆண்டாகும். ஐ.நாவின் அறிக்கையின்படி, உலகளவில் ஒரே வேலை மற்றும் மதிப்புள்ள பணிகளை இருவரும் செய்யும்போது ஆண்களைக் காட்டிலும் பெண்கள் 23% குறைவான ஊதியத்தை பெறுவதாக தெரிவித்துள்ளது.

2021ம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ள உலகளாவிய பாலின இடைவெளி அறிக்கையில், பெண்களுக்கான பொருளாதார பங்கேற்பு மற்றும் வாய்ப்பிற்கான உலகளாவிய பாலின இடைவெளியில் இடம்பெற்றுள்ள 156 நாடுகளின் பட்டியலில் இந்தியா 151வது இடத்தில் உள்ளது. ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானைத் தவிர மற்ற தெற்காசிய நாடுகள் அனைத்தும் பாலின இடைவெளியில் இந்தியாவைவிட மேம்பட்டவையாக இருப்பதாக அந்த பட்டியல் குறிப்பிட்டுள்ளது.

சர்வதேச சம ஊதிய நாளின் முக்கிய நோக்கமே, உலகளவில் பெண்கள் பொருளாதார அடிப்படையில் ஆண்களுக்கு நிகரான மதிப்பையும், ஊதியத்தையும் பெறவேண்டும் என்பதை வலியுறுத்துவதாகும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Tamilmalar Natarajan
First published: