ரக்‌ஷா பந்தன் பண்டிகை எப்போது ? ஏன் கொண்டாடப்படுகிறது?

ரக்‌ஷா பந்தன்

ரக்‌ஷா பந்தன் பண்டிகை இந்த வருடம் ஆகஸ்ட் 22ம் தேதி அன்று கொண்டாடப்பட உள்ளது.

  • Share this:
உடன்பிறப்புகளுக்கிடையேயான பாச பிணைப்பைக் குறிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ரக்ஷா பந்தன் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த தினம் பெரும்பாலும் வடமாநிலங்களில் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. நாளடைவில் இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் இந்த தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தினத்தில் சகோதரிகள் தங்கள் சகோதரர்களுக்கு ராக்கி என்று அழைக்கப்படும் புனிதமாக நூலை கையின் மணிக்கட்டில் கட்டி விடுவார்கள். இது உடன்பிறப்புகளுக்கிடையே இருக்கும் அன்பு மற்றும் பாதுகாப்பைக் குறிக்கும் ஒரு செயல் ஆகும். இந்த பண்டிகை இந்த வருடம் ஆகஸ்ட் 22ம் (ஞாயிற்றுக்கிழமை) தேதி அன்று கொண்டாடப்பட உள்ளது.

இந்த நாள் கொண்டாடப்படுவதற்கான வரலாறு:

புராணங்களின் படி, பகவான் கிருஷ்ணர் காத்தாடி விட்டுக்கொண்டிருக்கும் போது, அந்த கயிறு அவரது விரலை வெட்டி விடுகிறது. கிருஷ்ணாவின் கையில் வெட்டுக்காயத்தை கண்ட திரௌபதி மிகவும் வேதனை அடைகிறார். கிருஷ்ணரின் கையில் இருந்து ரத்தம் வழிவதை கண்ட அவர் தனது சேலைத் துணியை கிழித்து அவரது விரலில் கட்டிவிடுகிறார். திரௌபதியின் இந்த சைகையால் உத்வேகமடைந்த கிருஷ்ணர், அவரை தனது தங்கையாக ஏற்றுக்கொண்டு எப்போதும் பாதுகாப்பதாகவும், கவனித்துக்கொள்வதாகவும் உறுதியளித்தார்.Also Read : ஓணம் பண்டிகைக்கு கசவு புடவை கட்டப்போறீங்களா..? அதை எப்படி கட்ட வேண்டும் தெரியுமா..? டிப்ஸ் இதோ...

இறுதியில் கவுரவர்களிடமிருந்து திரௌபதியை பாதுகாத்ததன் மூலம் தனது வாக்குறுதியை நிறைவேற்றினார். இதனை மையமாக கொண்டே இந்த தினம் கொண்டாடப்படுவதாக கூறப்பட்டது. இருப்பினும் மற்றொரு கதையின்படி, மூன்று முறை தோற்கடிக்கப்பட்ட பிறகு மகாவிஷ்ணு, மன்னர் பாலியால் வீட்டில் சிறைபிடிக்கப்பட்டார். இந்த நிலையில் தனது கணவரை விடுவிக்க, லட்சுமி மன்னரின் மணிக்கட்டில் ஒரு கயிற்றை கட்டி விடுகிறார். இந்த செயலால், லட்சுமியின் வேண்டுகோளை மறுக்க முடியாமல் இறுதியில் விஷ்ணுவை விடுவித்தார். இதுவே ரக்ஷா பந்தன் பண்டிகை கொண்டாடுவதற்கு காரணமாக இருந்தது என்றும் சில புராண கதைகள் கூறுகின்றன.மற்றொரு வரலாற்று நிகழ்வாக, ராஜஸ்தான் மாநிலத்தின் சித்தூர் நாட்டை ஆண்டு வந்தவர் கர்ணாவதி என்ற ராணி. சித்தூர் நாட்டைக் கைப்பற்றும் விதமாக குஜராத்தை ஆண்ட சுல்தான் பகதூர் ஷா சித்தூர் மீது போர் தொடுத்தார். இதை அறிந்து கொண்ட கர்ணாவதி, முகலாய பேரரசர் ஹுமாயுனுக்கு ‘ராக்கி’ எனும் புனித நூலை அனுப்பினார். தனக்கு உதவுமாறு கேட்டுக் கொண்டார். இதனால் பாச உணர்வு கொண்ட ஹுமாயுன், கர்ணாவதி ராஜ்ஜியத்தைக் காக்க முற்பட்டான். ஆனால் அதற்குள் ராணியை வென்று, பகதூர் ஷா வெற்றிக்கொடி நாட்டினார்.Also Read : வரலட்சுமி நோன்பு: நடிகை உமா ரியாஸ் வீட்டு பெஸ்ட் மெதுவடை சீக்ரெட் இதுதான்!

எவ்வாறாயினும், பல ஆண்டுகளாக, இந்த திருவிழாவின் முக்கியத்துவம் உடன்பிறப்பு உறவின் கொண்டாட்டமாக பல இடங்களில் விரிவடைந்துள்ளது. ஒற்றுமை மற்றும் பாதுகாப்பு பற்றிய கருத்து பல்வேறு கலாச்சாரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, பல சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், மரங்களைப் பாதுகாக்கும் முயற்சியில், அவற்றைச் சுற்றி ராக்கியைக் கட்டுகிறார்கள். 1905 வங்கப் பிரிவினையைத் தடுக்க கவிஞர் ரவீந்திரநாத் தாகூரும் இந்த நாளையும் அதன் முக்கியத்துவத்தையும் பயன்படுத்தினார். அவரது அழைப்பின் பேரில், சில்ஹெட் மற்றும் டாக்காவைச் சேர்ந்த பல இந்துக்களும் முஸ்லிம்களும் ஒன்று சேர்ந்த வரலாறும் இருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Tamilmalar Natarajan
First published: