முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / Pongal 2022 : ‘போகி பண்டிகை’ அன்று செய்ய வேண்டியதும், செய்யக் கூடாததும்..

Pongal 2022 : ‘போகி பண்டிகை’ அன்று செய்ய வேண்டியதும், செய்யக் கூடாததும்..

போகி பண்டிகை

போகி பண்டிகை

Happy Pongal 2022 | போகி பண்டிகையை கொண்டாடுவதால் இன்பம் மற்றும் போகம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

  • Last Updated :

தமிழர் திருநாள் என்றால் பொங்கல் திருநாளை முதன்மைப்படுத்தி கூறுவோம். அந்த அளவிற்கு தமிழர்களின் பண்பாட்டில் பொங்கல் திருநாள் பெரும் பங்கு வகிக்கிறது. பொங்கலுக்கு முந்தைய நாளான போகி பண்டிகையில் இருந்து தான் இத்திருநாள் தொடங்குகிறது. போகி பண்டிகையை எதற்காக கொண்டாடுகிறோம் என்று கேட்டால், 'பழையன கழிதலும், புதியன புகுதலும்' என்று குறிப்பிடுவோம். அதாவது வீட்டில் உள்ள பழைய பொருட்களை தீயிட்டு எரித்து புதியவற்றை கொண்டு இனி வரும் நாட்களை நல்லபடியாக கொண்டு செல்ல வேண்டும் என்று குறிப்பிடுவார்கள்.

ஆனால், உண்மையில் போகி பண்டிகை என்றால் நமது மனதில் உள்ள கெட்ட எண்ணங்கள், அழுக்கு, தீய குணங்கள் போன்றவற்றை முற்றிலுமாக நீக்கி, புதிய நல்ல எண்ணங்களை கொண்டு வர வேண்டும் என்பதை உணர்த்துகிறது. இதை உணர்த்தும் வகையில் தான் வீடுகளில் உள்ள பழைய பொருட்களை எரித்து வருகிறோம். தீய எண்ணங்களை எரிப்பதற்கு இது சமமாகும் என்று நம்பப்படுகிறது.

தற்போது பெருகி வரும் காற்று மாசுவின் காரணத்தால் பழைய பொருட்களை எரித்து போகியை கொண்டாடுவது சரியானது அல்ல. எனவே இதற்கு மாறாக தீய எண்ணங்களை மட்டும் நமது மனதில் இருந்து நீக்கி இறைவனை வழிபடலாம். குறிப்பாக போகியை கொண்டாடுவதற்கு முக்கிய காரணம் இந்திர பகவான் தான்.

ஆம், தேவர்களின் அரசன் மற்றும் மழையின் கடவுளான இந்திர பகவானுக்காக தான் பாரம்பரியமாக போகி பண்டிகையை கொண்டாடி வருகிறோம். இது மார்கழி (மார்கசிர்ஷா) மாதத்தின் கடைசி நாளில் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், மக்கள் தங்கள் வீடுகளை சுத்தம் செய்து அல்லது புது வண்ணம் பூசி கொண்டாடுவார்கள். இவற்றுடன் பழைய ஆடைகள் மற்றும் பிற தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்தப்படுதி விடுவார்கள்.

also read : உறவினர்களுடன் வீட்டிலேயே பொங்கலை எப்படி பாதுகாப்பாக கொண்டாடுவது..?

இந்த நன்நாளில், தங்களில் வீட்டின் முற்றத்தில் மக்கள் பாரம்பரிய முறையில் கோலங்களை (ரங்கோலி / அல்பனா) அரிசி மாவு பயன்படுத்தி போடுவது வழக்கம். அடுத்தாக, விவசாயிகள் தங்கள் உபகரணங்களை வணங்குவார்கள். மேலும் இந்திரனை வணங்கி இந்த வருடம் நல்ல விளைச்சலை தர வேண்டும் என்று வணங்கி மகிழ்வார்கள். ஆங்கில ஆண்டின் தேதியில் ஜனவரி 13ஆம் தேதியில் போகியை கொண்டாடி வருவது வழக்கமாக உள்ளது.

போகி பண்டிகையை கொண்டாடுவதால் இன்பம் மற்றும் போகம் கிடைக்கும் என்பது ஐதீகம். இந்திர பகவான் மட்டுமல்லாது சுக்கிர பகவானும் போகத்திற்கு அதிபதியாக விளங்குகிறார். சுக போக வாழ்க்கையை பெறுவதற்கு சுக்கிர பகவானின் அருள் நமக்கு தேவை. சுக்கிரன் பார்வை வலுவாக இருக்கும் பொழுது ஒருவர் பணக்காரராக முடியும் என்று நம்பப்படுகிறது. இதனால் தான் போகி பாண்டியை முதன்மையானதாக கருதுகின்றனர்.

எது எப்படியோ, இந்த 2022 ஆம் ஆண்டு சிறப்பான முறையில் அமைந்திட எல்லோரும் இறை வழிபழிபாட்டை மேற்கொள்வோம்.

First published:

Tags: Bhogi, Pongal