Home /News /lifestyle /

நீங்கள் எப்படிப்பட்டவர்? இந்த ஓவியத்தில் முதலில் பார்ப்பதை வைத்து தெரிந்து கொள்ளுங்கள்!

நீங்கள் எப்படிப்பட்டவர்? இந்த ஓவியத்தில் முதலில் பார்ப்பதை வைத்து தெரிந்து கொள்ளுங்கள்!

காட்சி படம்

காட்சி படம்

நீங்கள் கூச்ச சுபாவமுடையவரா? அல்லது தன்னம்பிக்கை உடையவரா? என்பதை இந்த ஓவியத்தை வைத்தே கூறி விடலாம்.

ஆப்டிக்கல் இல்யூஷன் ஆர்ட் என்பது அழகியல் பாணி ஆகும். இந்த வகை ஓவியங்கள் மனித உணர்வின் வினோதத்தை பயன்படுத்தி கொண்டு நம் மூளையை ஏமாற்றும் திறனை நம் கண்களுக்கு அளிக்கிறது.

ஒரு ஆப்டிக்கல் இல்யூஷன் ஓவியத்தை புரிந்து கொள்ள முயற்சிக்கும் ஒருவர் இயக்கம், ஓவியத்தில் மறைந்திருக்கும் மற்றொன்றின் படம், முப்பரிமாண வடிவங்கள் மற்றும் பிற உருவகப்படுத்துதலை கவனிக்க வேண்டும். எளிமையாக சொல்வதென்றால் நீங்கள் ஆப்டிக்கல் இல்யூஷன் ஓவியத்தை மேலோட்டமாக பார்த்தால் ஒரு உருவமும் கூர்ந்து கவனித்தால் அதிலேயே வேறு ஒன்றின் உருவமும் ஒருசேர இருக்கும்.

சோஷியல் மீடியாக்களில் இது போன்ற மாய ஓவியத்தை நீங்கள் நிறைய பார்த்திருப்பீர்கள். இதனிடையே ஆப்டிக்கல் இல்யூஷன் ஆர்ட்டை ஒரு எளிய உளவியல் தந்திரமாகவும் பயன்படுத்தலாம். ஆம், நீங்கள் ஒரு ஆப்டிக்கல் இல்யூஷன் ஓவியத்தை பார்க்கும் விதத்தை வைத்து நீங்கள் எப்படிப்பட்டவர், உங்கள் குணம் என்ன என்பதை கூட தெரிந்து கொள்ளலாம் என்கிறார்கள் நிபுணர்கள். தற்போது அப்படிப்பட்ட ஒரு ஆப்டிக்கல் இல்யூஷன் ஆர்ட்டை கீழே பார்க்கலாம்..

இந்த ஆர்ட்டை நீங்கள் இப்போது பார்த்து விட்டீர்களா.? இப்போது இந்த ஆர்ட்டில் 2 விஷயங்கள் அடங்கி இருக்கின்றன என்பதை நீங்கள் கண்டு கொண்டீர்களா.! இல்லை என்றால் மீண்டும் ஒருமுறை கூர்ந்து கவனியுங்கள்.. இப்போது உங்கள் கண்களுக்கு இந்த ஆர்ட்டில் முதலில் தெரிந்த உருவத்தை வைத்து நீங்கள் கூச்ச சுபாவமுடையவரா? அல்லது தன்னம்பிக்கை உடையவரா? என்பதை சில நொடிகளில் தெரிந்து கொள்ள முடியும்.

நீங்கள் மேலே பார்த்த ஆப்டிக்கல் இல்யூஷன் ஆர்ட்டில் மொத்தம் 2 படங்கள் ஒரு சேர உள்ளன. ஒன்று ஒரு கோழியின் உருவம் மற்றொன்று ஒரு ஜோடி உதடுகள். உங்களில் பெரும்பாலானோர் இந்த ஆர்ட்டை பார்த்தவுடன் ஒரு பெண் வாயை திறந்திருப்பதை மட்டுமே கவனித்திருப்பீர்கள். அதென்ன திறந்திருக்கும் உதடுகளுக்கு நடுவே ஒரு கரும்புள்ளி இருக்கிறதே என்று உன்னிப்பாக கவனித்திருக்க மாட்டீர்கள். ஆனால் சிறிய கண் போன்ற அந்த கரும்புள்ளியை கவனித்திருந்தால் உதடுகளோடு சேர்த்து இந்த ஆர்ட்டை பார்க்கும் போது ஒரு கோழியின் உருவம் உங்கள் கண்களுக்கு தெரிந்திருக்கும்.



also read : இதில் மறைந்திருக்கும் குதிரை முகம் தெரிகிறதா? கண்டுபிடித்துவிட்டால் நீங்கள் கில்லாடி தான்..

சரி இப்போது விஷயத்திற்கு வருவோம். இந்த ஆப்டிக்கல் இல்யூஷன் ஆர்ட்டின் கூற்றுப்படி, நீங்கள் முதலில் பார்ப்பது உங்கள் ஆளுமை பற்றிய ரகசிய உண்மையை வெளிப்படுத்துகிறது. அந்த வகையில் இந்த ஆர்ட்டில் முதலில் நீங்கள் ஒரு கோழியின் உருவத்தை பார்த்தீர்கள் என்றால் நீங்கள் மிகவும் கூச்ச சுபாவம் உடையவர் மற்றும் அமைதியானவர் என்று அர்த்தம். அதுவே ஒரு ஜோடி உதடுகளைப் பார்த்தவர்கள் மிகவும் வித்தியாசமான ஆளுமை கொண்டவர்கள்.

அதாவது இந்த ஆர்ட்டில் முதலில் வாயை பார்த்துள்ளீர்கள் என்றால், நீங்கள் நம்பிக்கை மற்றும் வலிமையுடன் சுதந்திரமாக இருக்கும் நபர் என்று அர்த்தம் என்று இந்த ஆர்ட்டை இன்ஸ்டாவில் ஷேர் செய்த மெரியட் என்பவர் விளக்கி உள்ளார். சார்லஸ் மெரியட் என்பவர் டிக்டாக் நட்சத்திரம் ஆவார். தனது பேஜில் இந்த ஆப்டிகல் இல்யூஷன் மற்றும் பெர்சனாலிட்டி டெஸ்ட்டை ஷேர் செய்து உள்ளார்.

இதனிடையே இந்த ஆர்ட்டில் முதலில் உதடுகளை பார்த்தவர்கள் அவர்கள் விரும்பும் வழியில் விஷயங்கள் நடக்காத போது கொஞ்சம் பிடிவாதமாக மற்றும் ஆக்ரோஷமாக இருக்கலாம் என்றும் மெரியட் குறிப்பிட்டுள்ளார். இதை பார்த்த பலர் மெரியட் கூறுவது போல தான் தங்களது கேரக்டர் இருப்பதாக கமெண்ட்ஸ் செய்து உள்ளனர்.
Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: Trending, Viral

அடுத்த செய்தி