பொழுதுபோக்கு அம்சமாகவும், சிந்தனைத் திறனை தூண்டும் விதமாகவும் அமைகின்ற ஆப்டிக்கல் இல்யூஷன் என்னும் மாயத்தோற்ற படங்களை கொண்டு உங்கள் பலம் மற்றும் பலவீனத்தை அறிய முடியும் என கூறுகின்றனர். அதாவது பல தோற்றங்களை உள்ளடக்கிய அந்த ஒற்றைப் படத்தை பார்த்த உடனேயே உங்கள் மனதில் எந்த தோற்றம் பதிவானதோ, அதைப் பொறுத்தே உங்கள் குணாதிசயமும் இருக்கும் எனத் தெரிவிக்கின்றனர்.
முதலில் இந்த செய்தியில் உள்ள படத்தைப் பாருங்கள். உங்கள் கண்களுக்கு முதலில் தெரிவது எது? ஒரு ஆணின் முகம், புத்தகத்தை வாசிக்கும் பெண், கப் ஒன்றை பிடித்துள்ள பெண், ஒரு மலர் ஜாடி அல்லது ஒரு நாற்காலி என இதில் எது வேண்டுமானாலும் உங்களுக்கு முதலில் தோன்றியிருக்கலாம். அதைப் பொருத்து உங்கள் குணாதிசயம் எப்படி அமைகிறது என்பதைப் பார்க்கலாம்.
ஒரு மனிதரின் முகம் :
பார்த்த உடன் ஒரு மனிதனின் முகம் உங்களுக்கு தென்பட்டது என்றால் மன ரீதியாகவும், உணர்வுப் பூர்வமாகவும் சீரான நிலையை கொண்டவர்கள் நீங்கள். வாழ்க்கையில் சவால்களை நீங்கள் நிதானத்தோடு எதிர்கொள்வீர்கள். எந்தவித தடுமாற்றமும் இருக்காது. உங்களை சுற்றியுள்ள மக்களுக்கு ஊக்கம் தரும் நபராகவும் இருப்பீர்கள். எனினும், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு முன்னிலையில் உணர்வுகளை வெளிப்படுத்த தயக்கம் காட்டுவீர்கள்.
புத்தகத்தை வாசிக்கும் பெண் :
புத்தகம் வாசிக்கும் பெண் ஒருவர் உங்களுக்கு தென்பட்டார் என்றால் நீங்கள் அறிவிப்பூர்வமான நபராக இருப்பீர்கள். ஏதேனும் ஒன்றை புதிதாக கற்றுக் கொள்ள, புதியவற்றை தெரிந்து கொள்ள மிகுந்த ஆர்வம் கொண்டவராக இருப்பீர்கள். அதே சமயம், உங்களுக்கு பிடிக்காத விஷயங்களில் இருந்து ஒதுங்கி இருப்பதை விரும்புவீர்கள். இதனால், உங்கள் குணத்திற்கு ஒத்துவராத நபர்களை நீங்கள் புறக்கணிக்கும் நிகழ்வுகளும் நடக்கும்.
also read : இந்த படத்தில் என்ன தெரிகிறது? நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதை நொடியில் கண்டுபிடித்துவிடலாம்...
கப் பிடித்துக் கொண்டிருக்கும் பெண் :
எதையுமே நீங்கள் உன்னிப்பாக கவனிப்பவர் என்பதை இது உணர்த்துகிறது. உங்கள் கவனித்தல் திறனைப் பார்த்து உங்களை சுற்றியுள்ள அனைவரும் திறந்த மனதுடன் பேசுவார்கள். அதே சமயம், முடிவெடுக்கும் உங்கள் திறன் அவ்வளவு சிறப்பாக இல்லை. எந்த ஒரு விஷயத்திலும் அதன் சாதக, பாதகங்களை ஆராய்ந்து முடிவு செய்ய உங்களைச் சுற்றியிருப்பவர்களை ஊக்குவிப்பீர்கள் என்றாலும், தனக்கென்று வரும்போது நீங்கள் கோட்டை விடுவீர்கள்.
மலர் ஜாடி :
அன்பு தான் உங்களுடைய மிகப் பெரிய பலமே. நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு நபரிடத்திலும் ஒரு அழகான விஷயத்தை கண்டறிவீர்கள். தேவையற்ற வதந்திகளை நீங்கள் ஒதுக்கி தள்ளூவீர்கள். உங்களால் முடிந்த நன்மையை செய்பவராக இருப்பீர்கள். எனினும், ஆபத்தை உணராமல் சிக்கலில் மாட்டிக் கொள்வது உங்கள் வழக்கமாக இருக்கும்.
ஒரு சேர் :
உங்கள் கண்களுக்கு சேர் தெரிந்தது என்றால் நீங்கள் தனித்தன்மை வாய்ந்த நபர் என்று அர்த்தம். ஒவ்வொரு சூழலிலும் வெவ்வேறு விதமான விஷயங்களை நீங்கள் கையாளுவீர்கள். எனினும், ஒற்றை விஷயத்தின் மீது நீண்ட நேரம் உங்களால் கவனம் செலுத்த முடியாமல், கவனச்சிதறல் ஏற்படும்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.