Home /News /lifestyle /

உங்களுடைய முந்தைய காதல் குறித்து உங்கள் பார்ட்னர் ஓயாமல் பேசிக் கொண்டிருந்தால் என்ன செய்வது?

உங்களுடைய முந்தைய காதல் குறித்து உங்கள் பார்ட்னர் ஓயாமல் பேசிக் கொண்டிருந்தால் என்ன செய்வது?

பார்டனுரடனான பிரச்சினைகளுக்கான தீர்வு.

பார்டனுரடனான பிரச்சினைகளுக்கான தீர்வு.

கணவன் மனைவி, காதலன் காதலி உறவுகளில் சண்டை விரிசல் வருவது சாதாரணமானது. அதற்கு பல நேரங்களில் முந்தைய காதல் ஒரு காரணமாக அமைந்துவிடுகிறது.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India
    திருமண உறவின் மீது ஏற்படும் நம்பிக்கையின்மை தான் உங்கள் பார்ட்னர் உடனான சண்டைகளுக்கும், பிரச்சனைகளுக்கும் காரணமாக அமைகிறது. நமது பார்ட்னர் இன்னமும் தன்னுடைய எக்ஸ் லவ்வர் குறித்து நினைப்பிலேயே இருக்கிறார்களா என்ற சந்தேகம் தான் நம்பிக்கையின்மை பிரச்சனைகளில் மிகவும் பெரியது.

    உங்கள் கணவருக்கு அல்லது மனைவிக்கு எக்ஸ் லவ்வர் இருந்திருக்கலாம் என்பதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால், திருமண வாழ்க்கைக்குப் பிறகு அவர் உங்களின் முழுமையான நம்பிக்கைக்கு உரியவராக மாற வேண்டும். அப்படி மாறிய பிறகும் கூட அவர்கள் மீது நீங்கள் நம்பிக்கை வைக்காமல் எப்போதும் பழைய காதல் குறித்து குத்திக் காண்பித்துக் கொண்டே இருந்தால் பிரச்சனை ஏற்படும்.

    முடிந்து போன கதை

    என் எக்ஸ் லவ்வர் உடனான சகாப்தம் என்பது இப்போது முற்றிலுமாக முடிந்து போன ஒன்று என உங்கள் பார்ட்னரிடம் அழுத்தம், திருத்தமாக சொல்லுங்கள். உங்கள் நடவடிக்கைகளும், பேச்சுகளும் முந்தைய காதலை மையப்படுத்தி இல்லை என்பதை பார்ட்னருக்கு புரிய வைக்கவும்.

    உங்கள் பார்ட்னருக்கு காதலை புரிய வைக்கவும்

    உங்கள் மனதில் முந்தைய காதலர் / காதலி இன்னமும் இடம்பிடித்துக் கொண்டிருக்கிறார் என்று உங்கள் பார்ட்னர் கருதும் பட்சத்தில், அதை இல்லை என்று நிரூபிக்கும் கடமை உங்களுக்கு இருக்கிறது. குறிப்பாக, இப்போது நான் உன்னை மட்டுமே முழுமையாக காதலிக்கிறேன் என்பதை எடுத்து சொல்லவும்.

    பழைய காதல் பந்தத்தை குறைக்கவும்

    உங்களின் முன்னாள் லவ்வர் உங்களின் நெருங்கிய உறவினராக அல்லது சக அலுவலக ஊழியர்களாக இருக்கும்பட்சத்தில் நீங்கள் அவர்களிடம் பேசுவதை தவிர்க்க முடியாது. ஆனால், அடிக்கடி பேசினீர்கள் என்றால் உங்கள் மீது உங்கள் பார்ட்னர் நம்பிக்கை இழக்கக் கூடும். ஆகவே, பேச்சை குறைக்கவும்.

    உங்கள் உணர்வுகளை புரிய வைக்கவும்

    உங்கள் பார்ட்னர் எப்போதுமே உங்களுடைய முந்தைய காதலை குத்திக் காண்பித்து பேசி கொண்டிருப்பதால் உங்கள் மனம் புண்பட்டுவிட்டது என்றால், அதை அவர்களிடம் புரிய வைக்கவும். மாறாக, பேசினால் பேசட்டும் என விட்டுவிட்டீர்கள் என்றால் அதிகப்படியாக காயப்படுத்துவார்கள்.

    உங்கள் எதிர்பார்ப்புகளை பகிர்ந்து கொள்ளவும்

    முன்னாள் காதலை சுட்டிக் காட்டி உங்களை குற்றம் சொல்லக் கூடாது என்று நீங்கள் நினைத்தால், எல்லை மீறி பேசக் கூடாது என்பதை பார்ட்னரிடம் தெளிவாக சொல்லி விடவும். அப்படி பேசுவது மிகுந்த ஆத்திரத்தை ஏற்படுத்துகிறது என கூறவும்.

    இறுதியான தீர்வு

    நீங்கள் எவ்வளவு முயன்றும், உங்களின் முந்தைய காதல் குறித்தே பார்ட்னர் பேசிக் கொண்டிருக்கிறார் என்றால், இருவரும் நல்ல மனநல மருத்துவரை அணுகி இதற்கான தீர்வை கேட்கலாம்.
    Published by:Saravana Siddharth
    First published:

    Tags: Relationship, Relationship Counselling

    அடுத்த செய்தி