கிறிஸ்துமஸ் தினம் நெருங்கி வருவதையொ உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் கலை கட்டி வருகின்றன. வருடத்தின் கடைசி மாதமாகவும் உலகமெங்கும் கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாட கூடிய மாதமாகவும் இருப்பதால் எங்கே பார்த்தாலும் திருவிழாக்களும் கலை கொண்டாட்டங்களையும் காண முடிகிறது. கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடுவதற்காக உலகம் முழுவதும் மக்கள் உற்சாகமாக தயாராகி வருகின்றனர்.
இப்படிப்பட்ட நன்னாளில் கிறிஸ்துமஸ் விழாவையொட்டி அனைவரும் ஒருவருக்கொருவர் ஹாப்பி கிறிஸ்மஸ் மற்றும் மெர்ரி அல்லது மேரி கிறிஸ்மஸ் என மாற்றி மாற்றி வாழ்த்துக்கள் கூறிக் கொள்வதை அனைவரும் பார்த்திருப்பீர்கள். ஆனால் இந்த ஹேப்பி கிறிஸ்மஸ் என்பதற்கும் மேரி கிறிஸ்மஸ் என்பதற்கும் என்ன வித்தியாசம் என்று எப்போதாவது யோசித்ததுண்டா? அதை பற்றி தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.
மேரி (Mary) அல்லது மெர்ரி (Merry) கிறிஸ்மஸ்:
ஆங்கில வார்த்தையான மேரி (Mary) என்பது பண்டைய ஆங்கில மற்றும் ஜெர்மானிய வார்த்தைகளின் தொகுப்பாகும். மேரி என்பதற்கு ஆசிர்வதிக்கப்பட்ட அல்லது மகிழ்ச்சியான என்பது பொருளாகும். இதனாலேயே பல மக்கள் ஹாப்பி கிறிஸ்மஸ் என்பதற்கு பதிலாக மெர்ரி (Merry) கிறிஸ்மஸ் என்று வாழ்த்து கூறுகின்றனர்..
பெயர் காரணம்:
பதினோராம் நூற்றாண்டில் தான் மேரி என்ற இந்த வார்த்தை நடைமுறைக்கு வந்தது ஆங்கில மொழியின் ஆரம்ப காலகட்டமாக அது இருந்தது. 18 மற்றும் 19 ஆம் நூற்றாண்டுகளில் இந்த வார்த்தை உலகம் எங்கும் மிகவும் பிரபலமாகிவிட்டது. இதன் காரணத்தினால் அப்போதிருந்து தான் பல மக்கள் ஹேப்பி கிறிஸ்மஸ் என்று கூறுவதற்கு பதிலாக மேரி கிறிஸ்மஸ் என்று வாழ்த்துக்களை கூற துவங்கி விட்டனர்.
கிறிஸ்துமஸ் தினத்தன்று இந்த வார்த்தை உபயோகபடுத்தபடுவதின் காரணம்:
முக்கியமாக மேரி என்று இந்த வார்த்தையானது பிரபல எழுத்தாளரான சார்லஸ் டிக்கன்ஸ் என்பவரால் பிரபலப்படுத்தப்பட்டது. தன்னுடைய “எ கிறிஸ்மஸ் கேரல்” என்ற புத்தகத்தில் இந்த வார்த்தையை அவர் உபயோகப்படுத்தினார். அதன் பிறகு உலகம் முழுவதும் பெரும்பாலான மக்கள் ஹாப்பி கிறிஸ்மஸ் என்பதற்கு பதிலாக கிறிஸ்துமஸ் என்றுவது வழக்கமாகிவிட்டது..
Also Read : கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் ரம் கேக்...15 நிமிடதிலேயே செய்ய டிப்ஸ்..!
எந்தெந்த நாடுகளில் மேரி கிறிஸ்மஸ் வார்த்தை பயன்படுத்தப்படுவதில்லை:
எது எப்படியோ, மேரி கிறிஸ்மஸ் என்ற வார்த்தையானது பல்வேறு நாடுகளில் பிரபலமாக இருந்தாலும், இங்கிலாந்தில் வாழும் மக்கள் இன்றளவும் ஹாப்பி கிறிஸ்மஸ் என்று தான் வாழ்த்துக்களை கூறுகின்றனர். ஹாப்பி கிறிஸ்மஸ் மற்றும் மேரி கிறிஸ்மஸ் என்ற இரண்டு வாக்கியங்களுக்கான பொருளுக்கும் ஒரே அர்த்தம் தான். இந்த இரண்டு வார்த்தைகளுமே சரி என்றாலும், இங்கிலாந்து மக்களில் பலர் ஹாப்பி கிறிஸ்மஸ் என்று வாழ்த்து கூறுவதற்கு விரும்புகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Christmas, Christmas eve