உடலையும் மனதையும் ரிலாக்ஸ் செய்யும் கப்பிங் தெரபியில் என்ன ஸ்பெஷல் ?

பெண்கள் மற்றும் ஆண்கள் அதிகமாக பேசியல் கப்பிங் எடுத்துக் கொள்கின்றனர். இதனால் முகப்பருக்கள் முற்றிலுமாக அகற்றப்பட்டு முகம் தெளிவாகவும் பளபளப்புத் தோற்றமும் கிடைக்கும். 

news18
Updated: July 13, 2019, 8:40 PM IST
உடலையும் மனதையும் ரிலாக்ஸ் செய்யும் கப்பிங் தெரபியில் என்ன ஸ்பெஷல் ?
கப்பிங் தெரபி
news18
Updated: July 13, 2019, 8:40 PM IST
ஓய்வும் நிம்மதியும் உடலுக்கு இன்றியமையாதவை. அதனால்தான் மனமும் உடலும் பரபரப்பான வாழ்க்கைச் சூழலிலிருந்து விலக, ஓய்வைத் தேடி அலைகின்றன. அந்தத் தேடலில் வளர்ந்ததுதான் மசாஜ் சென்டர்கள். மசாஜ் சென்டர்களை விட அதன் வகைகள்தான் மாறிக் கொண்டே வருகின்றன. அப்படி தற்போது பலராலும் தேடப்படும் இடம்தான் கப்பிங் தெரபி மசாஜ் சென்டர்கள். அப்படி என்ன ஸ்பெஷல் இதில்?

வரலாறு:

கப்பிங் தெரபி, பண்டைய கிரேக்கர்களுக்கு எகிப்திய மக்கள் கற்றுக் கொடுத்த மூன்றாயிரம் ஆண்டுகள் பழமையானது. இதன் நன்மைகள் அறிந்த சீனர்கள்தான் இந்தத் தெரபியை அதிகமாகப் பயன்படுத்துகிறார்கள். அதுமட்டுமன்றி, மற்ற நாடுகளுக்கும் இதனைக் கொண்டு சேர்த்துள்ளனர். அப்படித்தான் இந்தியாவிற்கும் இந்த கப்பிங் தெரபி வந்தது. இந்தோனேசிய மொழியில் ’ஹிஜாமா’ என்பதுதான் இதன் உண்மையான பெயர்.

கப்பிங் தெரபி என்றால் என்ன?

கப்பிங் தெரபி என்பது இரத்தத்தில் உள்ள நச்சுத் தன்மைகளை நீக்கி , நல்ல இரத்தத்தை உடம்பில் பரவச் செய்ய உதவுகிறது. இதனால் உடலில் ஏற்படக்கூடிய நோய்களைப் போக்கி ஆரோக்கியத்தைக் கொடுக்கிறது. தெரபி செய்வதற்கு, கப்புகளை உடம்பில் குறிப்பிட்ட பகுதியில் பொருத்தி அழுத்துகின்றனர். கப்பின் உட்பகுதில் இருக்கும் காற்று வெளியேற்றப்படுகிறது. இதனால் அந்த இடத்தில் அழுத்தம் அதிகரித்து அந்தப் பகுதியைச் சுற்றியுள்ள இரத்தம், கப்பின் அடியில் குவிகிறது. பின் அதனை ஊசிகளைக் கொண்டு நீக்கி விடுகின்றனர். இதனால் குவிந்த கெட்ட இரத்தம் நீக்கப்பட்டு அந்தப் பகுதியில் நல்ல இரத்தம் உற்பத்தியாகிறது.கப்பிங் தெரபியில் வெட் கப்பிங், டிரை கப்பிங், ஃபையர் கப்பிங், மேக்னட்டிக் கப்பிங், வாட்டர் கப்பிங், கிளைடிங் கப்பிங் என பல வகைகள் இருக்கின்றன. இருப்பினும் சென்னையில் வெட் கப்பிங், டிரை கப்பிங் ஆகிய இரண்டுதான் அதிகமாக செய்யப்படுகிறது. கப்பிங் தெரபிகள் செய்யப் பயன்படுத்தப்படும் கப்புகள் பிளாஸ்டிக், கிளாஸ் மற்றும் மூங்கில் போன்றவற்றிலிருந்து தயாரிக்கின்றனர். பயன்படுத்தப்படும் கப்புகளுக்கேற்ப தெரபியும் இருக்கும்.
Loading...
டிரை கப்பிங்:

டிரை கப்பிங் என்பது வெற்றிடமான கப்பில் நெருப்பை உட்செலுத்தி அதன் வெப்பம் வெளிவருவதற்குள் உடனே உடம்பில் பொருத்திவிடுவார்கள். பின் அதன் வெப்பம் குறையக் குறைய அதனைச் சுற்றியுள்ள கெட்ட இரத்தம் உறிஞ்சப்பட்டு குவியும். இப்படி அந்தக் கப்புகள் 3-5 நிமிடங்கள் வைக்கப்படும். அதனை நீக்கி நல்ல இரத்த ஓட்டத்திற்கு வழிவகைச் செய்வார்கள். இவ்வாறு செய்வதால் அந்த இடத்தில் கப்பின் தடம் சிவப்பு நிறத்தில் மாறும். ஆனால் அந்த தடம் அதிகப்பட்சமாக மூன்று நாட்கள் இருக்கும். டிரை கப்பிங் செய்வதால் முதுகுவலி, கீழ் முதுகு வலி , உடல் வலி, உடல் சோர்வு என எல்லாவிதமான பிரச்னைகளும் சரிசெய்யப்படும்.வெட் கப்பிங்

வெட் கப்பிங் என்பது கப்புகளை குறிப்பிட்ட பகுதியில் வைத்து அதற்குள் காற்றை பம்ப் செய்வதுதான் இந்த தெரபியின் சிறப்பு. அப்போது சருமம் இறுகி சுற்றியுள்ள கெட்ட இரத்தம் குவிகிறது. பின் கப்புகளை நீக்கி அதன்மேல் நீடில் வைத்து லேசாக குத்துகின்றனர். மீண்டும் அதே பகுதியில் கப்புகளை வைத்து காற்றை மீண்டும் ஏற்றுகின்றனர். பின் நீடில் வைத்துக் குத்தியப் பகுதியிலிருந்து கெட்ட இரத்தம் உறிஞ்சப்பட்டு வெளியேறி கப்புக்குள்ளேயே தேங்குகிறது. பின் அதை அப்படியே இலாவகமாக துணியால் துடைத்துவிடுகின்றனர். இப்படி செய்வதால் இரத்தம் சுத்தப்படுத்தப்படுகிறது.

கப்பிங் செய்வதால் ஏற்படும் நன்மைகள்

கப்பிங் தெரப்பியில் ஆஸ்துமா, ஒவ்வாமை, இரத்த அழுத்தம், மன அழுத்தம், உடல் சோர்வு, சருமத் தொற்றுகள், முதுகு வலி, கழுத்து வலி, அஜீரணக் கோளாறு, இரத்த சோகை, நச்சு நீக்கம், நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். குறிப்பாக அதிக உடல் பருமன் கொண்டவர்கள் கப்பிங் தெரபி மூலம் எடையைக் குறைக்கின்றனர்.

தலைவலிக்கும் தீர்வு

மைக்ரைன் தலை வலியிலிருந்தும் நிவாரணம் கிடைக்கும். உலக சுகாதார மையம் செய்த ஆய்வில் மைக்ரைன் பிரச்சனை இருப்போருக்கு இந்த கப்பிங் தெரபி நல்லத் தீர்வு என்கின்றனர். அதன் அறிகுறிகள் கூட வருவதில்லை என்கின்றனர்.சருமப் பாதுகாப்பு

சருமத்தைப் பாதுகாக்க வேண்டுமெனில் சிறந்த தெரபியும் இது எனலாம். குறிப்பாக ஃபேசியல் கப்பிங் தெரபி அதிகமாக எடுத்துக் கொள்கின்றனர். ஃபேசியல் கப்பிங் செய்வதால் முகத்தில் உள்ள நச்சுகள் நீக்கப்பட்டு முகம் தெளிவாகிறது. குறிப்பாக முகப்பருக்கள் இருக்கும் பெண்கள் மற்றும் ஆண்கள் அதிகமாக பேசியல் கப்பிங் எடுத்துக் கொள்கின்றனர். இதனால் முகப்பருக்கள் முற்றிலுமாக அகற்றப்பட்டு முகம் தெளிவாகவும் பளபளப்புத் தோற்றமும் கிடைக்கும்.

வயது குறைவான தோற்றம்

கப்பிங் தெரபியில் இரத்த ஓட்டம் சீராகி சுத்தமான இரத்தம் உற்பத்தியாவதால் உங்கள் தோற்றம் எப்போதும் இளமையாகவே இருக்கும். மேலும் உங்கள் உடலுக்கு ஏற்ற ஆற்றலும் அதிகரிக்கும்.
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: July 13, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...