எந்த பிளாஸ்டிக் பாதுகாப்பானது...? கண்டுபிடிப்பது எப்படி?

குளிர்பானம் மற்றும் குடிநீருக்காக பயன்படுத்தும் பிளாஸ்டிக் பாட்டில்களை உபயோகிக்கும் முன்பு பிளாஸ்டிக்கின் தர வகைகளை அறிந்து கொள்ள வேண்டும்.

Web Desk
Updated: January 2, 2019, 2:17 PM IST
எந்த பிளாஸ்டிக் பாதுகாப்பானது...? கண்டுபிடிப்பது எப்படி?
பிளாஸ்டிக் பாட்டில்
Web Desk
Updated: January 2, 2019, 2:17 PM IST
நம் அன்றாட வாழ்வில் பிளாஸ்டிக் இன்றியமையாத ஒன்றாகி விட்டது. ஆனால், அவை மண்ணுக்கு எத்தகைய கேடு என்பதை நாம் அறியாமல் இல்லை. இன்றைய காலகட்டத்தில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரிப்பால் சுற்றுச்சூழல் கடுமையாக பாதித்துள்ளது.
இதை குறைக்கவே , ஒருமுறைமட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கை தமிழக அரசு முற்றிலுமாக தடை செய்துள்ளது.

சரி. இந்த பிளாஸ்டிக் எப்படி உருவானது? அதிகம் தீங்கை ஏற்படுத்தும் பிளாஸ்டிக் எது? மறுபயன்பாடு செய்யப்படும் பிளாஸ்டிக்கை எப்படி வாங்குவது?

இதே கேள்வி உங்களுக்குள் தோன்றினால், இதனை தொடர்ந்து படியுங்கள்..

பிளாஸ்டிக் இந்தியாவுக்குள் எப்படி வந்தது?
குளோரொனைட் பிளாஸ்டிக் எனப்படும் பாலித்தின் ரசாயன பொருளால் பிளாஸ்டிக் தயாரிக்கப்படுகிறது.
இந்த பிளாஸ்டிக், நியூசிலாந்தில் 1907 ஆம் ஆண்டில் தான் முதன்முறையாக பயன்படுத்தப்பட்டது. சில வருடங்களில் படிப் படியாக உலகம் முழுவதும் பிளாஸ்டிக் பயன்பாடானது பரவ தொடங்கியது. அதன்படி, 1957 ஆம் ஆண்டில் இந்தியாவிற்குள் பிளாஸ்டிக் நுழைந்தது.
Loading...
குளிர்பான பிளாஸ்டிக் மற்றும் பிளாஸ்டிக் பாட்டில்களை குடிநீருக்காக பயன்படுத்துவதற்கு முன்பு அறியவேண்டியவை..

குளிர்பானம் மற்றும் குடிநீருக்காக பயன்படுத்தும் பிளாஸ்டிக் பாட்டில்களை உபயோகிக்கும் முன்பு பிளாஸ்டிக்கின் தர வகைகளை அறிந்து கொள்ள வேண்டும்.RIC (Resin Identification Code) எனப்படும் குறியீடுகள் மூலம் நாம் அதனை கண்டறியலாம். பிளாஸ்டிக் பாட்டில்களில் முக்கோண வடிவிலான எண்கள் கொண்ட குறியீடுகள் பொறிக்கப் பட்டிருக்கும். அந்த குறியீடுகள் ஒன்று முதல் ஏழு வரை அமைந்திருக்கும்.
#1,#3,#6,#7 இதுபோன்ற எண்கள் பொறிக்கப்பட்டிருந்தால் அதனை மறுபயன்பாட்டிற்கு உட்படுத்தக்கூடாது என்பதை குறிக்கும். இதுபோன்ற பிளாஸ்டிக் பாட்டில்களை பயன்படுத்துவதன் மூலமாக கேன்சர் போன்ற கொடிய நோய் நமக்கு வரும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

#2,#4,#5 போன்ற எண்கள் பொறிக்கப்பட்டிருந்தால் அதனை நாம் குடிநீர் உட்பட அன்றாட தேவைகளுக்கு பயன்படுத்தலாம்.

- இரா. மணிபாரதி
First published: January 2, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...