பட்டாசு வெடிக்கும்போது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்..?

பட்டாசு வெடிக்கும்போது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்..?
பட்டாசு
  • News18
  • Last Updated: October 23, 2019, 9:55 PM IST
  • Share this:
தீபாவளி சமயத்தில் வெடிக்கும் பட்டாசுகள்  சில நேரங்களில் எதிர்பாராத விதமாக விபத்துகள் நடக்கலாம். அந்த சமயத்தில் எப்படி கையாள்வது என்று பார்க்கலாம். 

சிறு காயங்கள் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் ?

முதலில் அந்த நபரை அங்கிருந்து தூக்கி காற்றோட்டமுள்ள பகுதிக்கு கொண்டு வாருங்கள். உடனே காயம் பட்ட இடத்திலிருந்து துணியை அகற்றுங்கள்.


நெருப்பு சுட்ட இடத்தில் குளிர்ந்த நீரை ஊற்றுங்கள். ஐஸ் கட்டி, மிகவும் குளுர்ச்சியான நீர் ஆகியவற்றைப் பயன்படுத்த வேண்டாம். குளிர்ந்த நீரில் பருத்தி துணியை நனைத்து 3 முதல் 5 நிமிடங்களுக்கு வையுங்கள்.

காயம் பட்ட இடத்தில் பவுடர், வெண்ணெய் , க்ரீஸ் என உடனே எதையும் தடவாதீர்கள். சிறு காயமாக இருக்கும் பட்சத்தில் அந்த இடத்தில் பேண்டேஜ் ஒட்டலாம். சற்று பெரிய காயமாக இருந்தால் அந்த இடத்தில் துணிகள் உரசாதவாறு உடை அணிந்துகொள்ளுங்கள்.

பெரிய அளவிலான காயங்கள் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் ?

அடிபட்ட நபரின் உடலில் துணிகளை கழற்றிவிட்டு பருத்தி துணியை உடலில் மூடி விடுங்கள்.

உடனே ஆம்புலன்ஸை வரவழைத்து மருத்துமனைக்கு அழைத்துச் செல்லுங்கள். உங்களால் முடிந்தால் நீங்களே விரைவில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுங்கள்.

அதுவரை காயத்திற்கு எந்த மருந்தும் தாங்களாகவே கொடுக்காதீர்கள். அது விளைவை மேலும் மோசமாக்கலாம்.
First published: October 23, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading