மனைவி அதிக சம்பளம் வாங்கினால் கணவருக்கு காண்டு ஆகுமா...?

இதனால் பலரும் விவாகரத்து வரை செல்வதாகவும் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மனைவி அதிக சம்பளம் வாங்கினால் கணவருக்கு காண்டு ஆகுமா...?
மனைவி அதிக சம்பளம் வாங்கினால் கணவருக்கு காண்டு ஆகுமா...?
  • News18
  • Last Updated: November 19, 2019, 10:30 PM IST
  • Share this:
மனைவி அதிக சம்பளம் வாங்கினால் கணவர் மன உளைச்சலுக்கு உள்ளாவதாக ஆய்வு ஒன்று வெளியிட்டுள்ளது.

இன்றைய காலகட்டத்தில் குடும்பத்தை நிர்வகிக்க கணவர், மனைவி இருவரும் வேலைக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் இருக்கிறது. இந்நிலையில் ஆண்களைக் காட்டிலும் பெண்கள் குடும்பத்தை நிர்வகிக்க 40 சதவீதம் வருமானத்தைக் கொண்டிருந்தால் எந்த பாதிப்பும் இல்லை. அதுவே 40 சதவீதத்தை தாண்டினால் கணவர்கள் கடுமையான மன உளைச்சலுக்கு உள்ளாவதாக பாத் பல்கலைக்கழகம் (University of Bath) நடத்திய ஆய்வில் தெரிவித்துள்ளது.
திருமணத்திற்கு முன்பு வரை பெண்கள் அதிகமாக சம்பாதித்திருந்தால் அது அவர்களுக்கு பெரிய வருத்தமில்லை. அதுவே திருமணத்திற்கு பின் குடும்பத்தை வணிக ரீதியாக அதிகம் நிர்வகிப்பது பெண்கள் எனில் அது அவர்களை கடுமையாக பாதிப்பதாக ஆய்வு தெரிவித்துள்ளது. அந்த மன உளைச்சல் அவர்களின் உடல் நலத்தையும் பாதிப்பதாக தெரிவித்துள்ளது.

இந்த ஆய்வில் 6000-க்கும் மேற்பட்ட அமெரிக்க ஜோடிகள் பங்கேற்றுள்ளனர். மனைவியை சார்ந்து வாழும் கணவர்கள் தங்களுக்குள் மன அழுத்தம் இருந்தாலும் அதை வெளிப்படுத்துவதில்லை என்கிறது. இதனால் குடும்பத்திற்குள் சாதமான சூழல் குறைகிறது. இதனால் பலரும் விவாகரத்து வரை செல்வதாகவும் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: November 19, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading