நீங்கள் டயட் இருக்கிறீர்களா? உங்கள் பசியை கட்டுப்படுத்த உதவும் உணவுகள் இதோ!

மாதிரி படம்

டையை குறைக்கும் முயற்சியில் உள்ளோர் உடற்பயிற்சிகள், டயட் முறைகள், நடைபயிற்சி என பலவற்றை முயற்சி செய்து பார்ப்பார்கள்.

 • News18
 • Last Updated :
 • Share this:
  உடல் பருமனால் அவதிப்படும் பலரும் எடையை குறைக்க ஏராளமான வழிமுறைகளை பின்பற்றி வருகின்றனர். எடையை குறைக்கும் முயற்சியில் உள்ளோர் உடற்பயிற்சிகள், டயட் முறைகள், நடைபயிற்சி என பலவற்றை முயற்சி செய்து பார்ப்பார்கள். எந்த வழியில் எடையை குறைப்பதாக இருந்தாலும் அந்த முயற்சியை பலனுள்ளதாக்குவது வழக்கம் போல சாப்பிடாமல் மிதமாக சாப்பிடுவதே.

  எடை குறைப்பு முயற்சியில் உள்ளோர் வழக்கம் போல அனைத்தையும் சாப்பிடாமல் எடையை குறைக்க உதவும் பொருட்களை சாப்பிடுவதே நன்மை. டயட் கன்ட்ரோலில் உள்ளவர்களுக்கு துவக்கத்தில் மிக பெரிய சவாலாக இருப்பது பசி தான். ஏனென்றால் வழக்கமான நேரங்களில் வயிற்று பசியை அடக்கும் அளவிற்கோ அல்லது அதிகமாகவோ சாப்பிட்டு பழக்கப்பட்டவர்கள் எடையை குறைக்க திடீரென்று டயட் இருக்கும் போது பசியை அடக்க முடியாது.

  பெரும்பாலானோர் இந்த டயட் எல்லாம் நமக்கு சரிப்பட்டு வராது என்றெண்ணி அந்த முயற்சியை பாதியிலேயே கைவிட்டு உடல் பருமனால் தொடர்ந்து அவதிப்படுவார்கள். இதை தடுப்பதற்கான சரியான வழி, பசியை அடக்கும் சில உணவுப் பொருட்களை டயட்டின் போதோ அல்லது வேறு வழியில் எடை குறைப்பு முயற்சியில் ஈடுபட்டிருக்கும் போதோ சேர்த்து கொள்வதே.

  பாதாம்:

  பிற்பகலில் ஏற்படும் பசியை போக்க ஒரு சில பாதம்கள் பயனுள்ளதாக இருக்கும். பாதாம் பருப்பில் வைட்டமின் ஈ, மெக்னீசியம், ஆக்ஸிஜனேற்றிகள் போன்ற ஊட்டச்சத்துக்கள் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. எனவே இது பசியை அடக்க உதவுகிறது. பசியுடன் இருக்கும்போது பாதாம் சாப்பிடுவது வயிறு முழுமையானது போன்ற உணர்வை ஏற்படுத்தும் என்றாலும் அதிகம் சாப்பிடாமல் 3 அல்லது 4 பாதாம்கள் அல்லது தேவைக்கு ஏற்ப சாப்பிட்டு கொள்ளலாம்.

  டார்க் சாக்லேட் :

  சாக்லேட்டுகளை சாப்பிடுவது ஆரோக்கியமற்றது என்பது பொதுவான கருத்து. எடை குறைப்பு முயற்சியில் இருப்பின் அதிக கலோரிகளை உட்கொள்ளாமல், வழக்கமான மில்க் சாக்லேட்டுக்கு மாற்றாக டார்க் சாக்லேட் சாப்பிடலாம். 70% கோகோவைக் கொண்ட டார்க் சாக்லேட் பசியை அடக்கும் தன்மை உடையது. டார்க் சாக்லேட்டில் இருக்கும் ஸ்டியரிக் அமிலம் (stearic acid ) கூட மெதுவான செரிமானத்திற்கு உதவுகிறது மற்றும் நீண்ட நேரம் பசி இல்லாமல் வைத்திருக்க உதவுகிறது. ஆனால் ஒரே நேரத்தில் 2 துண்டுகளுக்கு மேல் டார்க் சாக்லேட் சாப்பிடுவதை தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  லவங்கப்பட்டை:

  இனிப்பு சுவை கொண்ட லவங்கப்பட்டை பசியை அடக்கும் பொருட்களில் சிறந்தது. பெரும்பாலும் பேக்கிங்கில் பயன்படுத்தப்படும் இது, ரத்த சர்க்கரை அளவை உறுதிப்படுத்துவதன் மூலமும், இரைப்பை காலியாவதை தாமதப்படுத்துவதன் மூலமும் பசியை அடக்க உதவுகிறது. 6 கிராம் லவங்கப்பட்டை பொடியை உணவில் சேர்த்து சாப்பிடுவது, வயிறு காலியாகி பசி எடுக்க செய்வதை தாமதப்படுத்தும் என்பது ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.

  Also read... உங்கள் சருமத்தில் வளரும் தேவையற்ற முடிகளை நீக்க சில ஈஸியான ஹேக்ஸ்!

  வெந்தயம் :

  பருப்பு குடும்பத்தை சேர்ந்த வெந்தயம் இந்திய உணவுகளில் கூடுதல் சுவை தர பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. 45% நார்ச்சத்து கொண்ட வெந்தயம் ஆயுர்வேத மருத்துவ முறையில் சிகிச்சைக்கும் பயன்படுகிறது. வெந்தயத்தை சாப்பிடும் போது அதில் உள்ள ஃபைபர் செரிமான அமைப்பில் நுழையும் போது அது கார்ப் மற்றும் கொழுப்பு உறிஞ்சும் செயல்முறையை குறைப்பதால், நீண்ட நேரம் பசி உணர்வின்றி இருக்க முடியும். ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் ஊறவைத்து காலையில் குடிக்கலாம் அல்லது வெந்தயத்தை வெறும் வாயில் மென்று திங்கலாம்.

  இஞ்சி :

  பல உடல்நல கோளாறுகளுக்கு அருமருந்தாக உள்ள இஞ்சி அற்புதமான செரிமான சக்திகளையும் உள்ளடக்கியுள்ளது. இதில் இருக்கும் சேர்மங்கள் பசியை கட்டுப்படுத்த உதவுகிறது. காலை உணவில் இஞ்சியை உட்கொண்ட பிறகு குறைந்தபட்சம் 3 மணிநேரம் வரை பசி இருக்காது.எனவே காலை உணவில் இஞ்சி சேர்க்கலாம் அல்லது இஞ்சி டீ பருகலாம்.  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
  Published by:Vinothini Aandisamy
  First published: