Home /News /lifestyle /

பீனட் பட்டர் உடல் எடையைக் குறைக்க உதவுமா? சாப்பிடும் போது தவிர்க்க வேண்டிய விஷயங்கள்!

பீனட் பட்டர் உடல் எடையைக் குறைக்க உதவுமா? சாப்பிடும் போது தவிர்க்க வேண்டிய விஷயங்கள்!

பீனட் பட்டர்

பீனட் பட்டர்

வேர்க்கடலை வெண்ணெய்யில் அதிக நார்ச்சத்துகள் நிறைந்துள்ளதால் ஆரோக்கியமான எடை இழப்பிற்கு உதவுகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    பீனட் பட்டர் எனப்படும் வேர்க்கடலை வெண்ணெய்யில் அதிகம் நிறைவுற்ற கொழுப்புகளே உள்ளதால் அனைவரின் டயட் லிஸ்டில் உள்ளது. ஆனால் அதே வேளையில் அதிகப்படியாகச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

    இன்றைக்கு நம்முடைய ஸ்நாக்ஸ் மற்றும் சமையலில் ஆக்கிரமித்து வரும் உணவுப் பொருள்களில் ஒன்றாக உள்ளது வேர்க்கடலை.  இதனைச் சட்னி, கடலை மிட்டாய் போன்ற பலவற்றிற்கு நாம்  பயன்படுத்தி வருகிறோம். இதில் அதிக புரத சத்துக்களும் மற்றும்  குறைந்த கொழுப்பு கொண்டிருப்பதால் உடலுக்குப் பல  நன்மைகளை அளிக்கிறது. இதே போன்று தான் வேர்க்கடலை வெண்ணெய்யையும் உணவில் சேர்த்துக்கொள்ளும் போது அதிக ஊட்டச்சத்துக்கள் நமக்குக் கிடைக்கிறது.

    ஆனால் பீனட் பட்டரில் அதிக கலோரிகள் மற்றும் கொழுப்புகள் அதிகம் உள்ளதால் எடை அதிகரிப்பதற்காகப் பலர் உட்கொள்கின்றனர். ஆனால் உடல் எடை குறைக்க விரும்புவோரும் தாராளமாக பீனட் பட்டரை எவ்வித அச்சமின்றி உணவில் சேர்த்துக்கொள்ளலாம். ஏனென்றால் இதில் அதிகம் நிறைவுற்ற கொழுப்புகள் தான் உள்ளது என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

    Also Read : தாம்பத்திய உறவுக்கு பின் கரு உருவாக எத்தனை நாட்கள் ஆகும்..? எப்போது அறிகுறிகள் ஆரம்பமாகும்..?

    பீனட் பட்டர் எடை இழப்பிற்கு எவ்வாறு உதவுகிறது?

    வேர்க்கடலை வெண்ணெய்யில் அதிக நார்ச்சத்துகள் நிறைந்துள்ளதால் ஆரோக்கியமான எடை இழப்பிற்கு உதவியாக உள்ளது. பொதுவாக நார்ச்சத்துள்ள உணவுகளை உட்கொள்ளும் போது செரிமான பிரச்சனை இருக்காது. மேலும் நீண்ட நேரம் பசியில்லாமல் இருக்க உதவியாக உள்ளது. எனவே தேவையில்லாமல் எவ்வித நொறுக்குத் தீனிகளையும் சாப்பிடுவதற்கு நாம் விரும்ப மாட்டோம். இதோடு குறைவான கலோரிகள் உள்ளதால் தேவையற்ற கொழுப்புகளை உங்களது உடலில் சேர்க்க வாய்ப்பில்லை. மேலும் இதய நோய், இரத்த அளவைக்கட்டுக்குள் வைப்பது போன்ற பல உடல் நலப்பிரச்சனைக்கும் தீர்வாக அமைகிறது. அதே வேளையில் அளவுக்கு அதிகமானபீனட் பட்டரை உங்களது உணவில் சேர்த்துக்கொள்ளக்கூடாது.

    உடல் எடையைக் குறைக்க வேர்க்கடலை வெண்ணெய் எப்படிப் பயன்படுத்த வேண்டும்?

    உங்களது உணவில் வேர்க்கடலை எண்ணெய்யை அப்படியே நேரடியாகச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். அதற்கு மாற்றாக எப்படி பயன்படுத்த வேண்டும் என இங்கே விரிவாக அறிந்து கொள்வோம். இதோ உங்களுக்கான சில டிப்ஸ்.

    * தோசைக்கல்லில் வேர்க்கடலை வெண்ணெய்யை (Peanut Butter) தடவ வேண்டும். அதன் மேல் நறுக்கிய வேர்க்கடலை மற்றும் மிளகுத்தூள் சேர்த்து கொஞ்சம் சூடாக்கிச் சாப்பிடலாம்.

    * ஒரு கிண்ணத்தில் ஓட்ஸ் எடுத்துக் கொண்டு பின்னர் சிறிதளவு பீனட் பட்டர் கலந்து சாப்பிடலாம்.

    * தயிர் மற்றும் பீனட் பட்டர் சேர்த்து பழங்களுக்கு டிப்பிங் சாஸ் (dipping sauce for fruits.) தயாரிக்கலாம்.

    * பீனட் பட்டர், எலுமிச்சை சாறு, இஞ்சி மற்றும் சோயா சாஸ் ஆகியவற்றைக் கொண்டு சாலட் டிரஸ்ஸிங் தயார் செய்யலாம்.

    * செலரி தண்டுகள் அல்லது ஆப்பிள் துண்டுகள் மீது பீனட் பட்டரை தடவிச் சாப்பிட்டால் உங்களுக்குக் கூடுதல் சுவை தரக்கூடும்.

    * பீனட் பட்டரைப் பயன்படுத்திக் குறைவான கொழுப்புள்ள ஸ்மூத்தி அல்லது மில்க் ஷேக் செய்து சாப்பிடலாம்.

    இது போன்ற உணவு முறைகள் உங்களது உடல்  ஆரோக்கியத்திற்கும், எடை குறைப்பிற்கும் உதவியாக உள்ளது.
    Published by:Janvi
    First published:

    Tags: Healthy Food, Peanut, Weight loss

    அடுத்த செய்தி