Home /News /lifestyle /

சருமம் தொய்வடைகிறதா? இளமையான தோற்றத்தைப் பெறுவதற்கான வழிமுறைகள் இதோ!

சருமம் தொய்வடைகிறதா? இளமையான தோற்றத்தைப் பெறுவதற்கான வழிமுறைகள் இதோ!

சருமம் தொய்வடையாமல் வைத்திருக்க வழிமுறைகள்

சருமம் தொய்வடையாமல் வைத்திருக்க வழிமுறைகள்

உடற்பயிற்சி, யோகா, மசாஜ் செய்தல் போன்றவற்றுடன் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை நீங்கள் உட்கொள்ளும் போது சருமம் தொய்வடையாமல் இளமையான தோற்றத்தை நீங்கள் பெற முடியும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    நம்மை அழகாகவும், இளமையாகவும் வைத்திருப்பது சருமங்கள் தான். ஆனால் வயதாக வயதாகச் சருமத்தில் உள்ள கொலாஜன் உற்பத்தியைக் குறைத்து சருமம் அதனுடைய நெகிழ்வுத் தன்மையை இழந்து விடுகிறது. இதனால் சருமம் தொய்வடைந்து வயதான தோற்றத்தைப் பெறக்கூடும். எனவே உங்களது சருமத்தை ஆரோக்கியமாகவும், பாதுகாப்பாகவும் சருமத்தை வைத்துக் கொள்வதற்கு சில வழிமுறைகளை உங்கள் வாழ்க்கையில் நீங்கள் பின்பற்ற வேண்டும். குறிப்பாக உடற்பயிற்சி, யோகா, மசாஜ் செய்தல் செய்வதன் மூலமும் உங்களது இரத்த ஓட்டத்தை அதிகரித்து உடலைப் பாதுகாப்பாக வைத்திருக்க முடியும்.

    சருமத்தைத் தொய்வின்றி இறுக்கமாக்க வைத்திருக்க உதவும் வழிமுறைகள்:

    உடற்பயிற்சி :

    உங்களது ஆரோக்கியத்தைப் பராமரிக்கவும், தொய்வில்லா சருமத்தைப் பெற வேண்டும் என்றால் வழக்கமான உடற்பயிற்சி செய்வது அவசியமான ஒன்று. இதோடு நீங்கள் செய்யக்கூடிய பல்வேறு வகையான செயல்பாடுகள் விரைவில் உங்களது சருமத்தைப் பாதுகாக்கும். எனவே தினமும் காலையில் ஏதேனும் ஒரு சில உடற்பயிற்சிகள் செய்வதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.

    மசாஜ் செய்தல்:

    உங்களது சருமத்தைப் பாதுகாப்பதற்காக நீங்கள் மசாஜ் செய்யும் போது, இரத்த ஓட்டம் சீராவதோடு ஃபைப்ரோபிளாஸ்ட் செயல்பாட்டையையும் அதிகரிக்கும். பொதுவாக ஃபைப்ரோபிளாஸ்ட்கள் எனப்படும் செல்கள், கொலாஜன் மற்றும் எலாஸ்டின் உள்ளிட்ட சருமத்தை இறுக்கமாக வைத்திருக்கும் தசை திசுக்களின் உற்பத்திக்கு உதவுகின்றன. இதனால் உங்கள் சருமம் பொலிவாக இருக்கும்.

    உணவுகள் :

    வைட்டமின்கள் சி, பி மற்றும் ஈ அதிக ஆக்ஸிஜனேற்ற உள்ளடக்கத்தைக் கொண்டுள்ளதால் சருமத்தின் பாதுகாப்பை வலுப்படுத்த உதவுகிறது. எனவே வாரத்திற்கு இரண்டு முறை வைட்டமின் ஈ எண்ணெய்யைச் சருமத்தில் அப்ளை செய்து கழுவி வந்தால் நல்ல பலன் கிடைக்கும். மேலும் வைட்டமின்கள் சி, பி நிறைந்த உணவுகளான முட்டை, மீன், தானியங்கள் மற்றும் காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

    நீரேற்றம் :

    உங்களது சருமத்திற்குத் தேவையான நீர்ச்சத்து இருந்தால் மட்டுமே தோல் இளமையாகத் தோன்றும். ஒருவேளை உங்களது சருமம் தொடர்ந்து நீரழிப்புடன் இருந்தால், வயதான தோற்றத்துடன் நீங்கள் காணப்படுவீர்கள். எனவே தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். உங்கள் சருமம் இளமையாக இருக்க உங்கள் டயட் லிஸ்டில் பழச்சாறுகள், இளநீர் போன்றவற்றைச் சேர்த்துக் கொள்ளுங்கள்.

    யோகா பயிற்சி :

    தினமும் நீங்கள் யோகாசனம் செய்யும் போது தோலின் ஆக்ஸிஜன் அளவு அதிகரிக்கக்கூடும். எனவே இளமையான தோற்றத்துடன் சருமம் இருப்பதற்கு மற்றும் ஆரோக்கியமாக இருப்பதற்கு யோகாசனத்தை மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

    இதோடு மட்டுமின்றி சருமத்தைப் பாதுகாக்க அடிக்கடி அழகு நிலையங்களுக்குச் செல்வதைத் தவிர்த்து வீட்டில் உள்ள தேன், முட்டை, ஓட்ஸ் போன்ற பல பொருள்களைப் பயன்படுத்தி பேசியல் செய்யலாம். இது உள்ள ஊட்டச்சத்துக்கள் உங்களது சருமத்தை இளமைத் தோற்றத்துடன் குறிப்பாகச் சருமம் தொய்வின்றி வைத்திருக்க பெரும் உதவியாக இருக்கும்.

    Also Read : கவனியுங்கள்..உங்கள் கிட்னிகளை பாதுகாக்க நீங்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டிய பழக்கங்கள்!

    குறிப்பாக உங்களது முகம் மற்றும் கழுத்தில் தோல் தொய்வடைவதைத் தடுப்பதற்கு சன்ஸ்கிரீன் பயன்படுத்துங்கள். இது நிச்சயம் சூரியனிலிருந்து வரும் புற ஊதா கதிர்களால் ஏற்படும் பாதிப்பைக் குறைக்க உதவுகிறது. எனவே மறக்காமல் வெளியில் செல்லும் போது சன்ஸ்கிரீன் பயன்படுத்தப் பரிந்துரைக்கின்றனர் அழகுக் கலை நிபுணர்கள்.

    எனவே இனிவரும் காலங்களில் மேற்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றி உங்களது சருமத்தைப் பாதுகாக்க வைத்திருக்க முயலுங்கள்.
    Published by:Janvi
    First published:

    Tags: Healthy Life, Natural remedies, Skin Care

    அடுத்த செய்தி