Home /News /lifestyle /

குழந்தை பிறந்த பின் உருவாகும் தொப்பையை குறைப்பது கடினமாக உள்ளதா..? உங்களுக்கான ஆலோசனைகள்...

குழந்தை பிறந்த பின் உருவாகும் தொப்பையை குறைப்பது கடினமாக உள்ளதா..? உங்களுக்கான ஆலோசனைகள்...

தொப்பை

தொப்பை

தொப்பை வயிறு இல்லாமல் முன்பு போல தட்டையான வயிறு வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் வயிற்றின் தசைகளை பலப்படுத்தும் நடவடிக்கைகள் மீது கவனம் செலுத்த வேண்டும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
பொதுவாக பெண்களின் உடல் கட்டமைப்பு கர்ப்ப காலத்திற்குப் பிறகு ஏராளமான மாற்றங்களை அடைகிறது. குறிப்பாக குழந்தைக்கு தேவையான பால் சுரக்கும் வகையில் மார்பகங்கள் பெரிதாகின்றன. கர்ப்ப காலத்தில் பெண்ணின் உடல் எடை அதிகரிக்கிறது. வயிற்றில் கொஞ்சம், கொஞ்சமாக வளரும் குழந்தைக்கு இடவசதி அளிப்பதற்கு ஏற்ப வயிற்றில் உள்ள தசைகள் மற்றும் தொடர்புடைய திசுக்கள் ஆகியவை விரிவடைந்து பெரிதாகத் தொடங்குகின்றன.

எனினும், குழந்தையை பெற்றெடுத்த பிறகு கர்பப்பையானது சுருங்கி, அதன் இயல்பு தன்மைக்கு சென்று விடுகிறது. இருப்பினும் வயிறு முன்பு இருந்ததைப் போல தட்டையாக இல்லாமல் கொஞ்சம் தொப்பையாக காட்சியளிக்க தொடங்கி விடுகிறது. பெண்களின் அழகு தோற்றத்திற்கு இது தடையாக அமைகிறது.

பொதுவாக பாலூட்டும் தாய்மார்கள் நாளொன்றுக்கு 400 முதல் 500 கலோரிகள் வரை கூடுதலாக உடலில் இருந்து இழக்க தொடங்குகிறார்கள் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். குழந்தை பிறப்பு முதல் அடுத்த சில மாதங்கள் வரையில் தாய்மார்களுக்கு மிகுதியான ஊட்டச்சத்து மற்றும் விட்டமின்கள் ஆகியவை தேவைப்படுகின்றன.அதேசமயம், கர்ப்ப கால சோர்வு மற்றும் உடற்பயிற்சியின்மை போன்ற காரணங்களால் உடல் எடை கொஞ்சம் அதிகரித்து விடுகிறது. ஆகவே இதை தவிர்க்க வேண்டும் என்றால் முறையான உடற்பயிற்சி செய்வதுடன், ஆரோக்கியமான உணவு பழக்க வழக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும்.

குறிப்பாக, தொப்பை வயிறு இல்லாமல் முன்பு போல தட்டையான வயிறு வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் வயிற்றின் தசைகளை பலப்படுத்தும் நடவடிக்கைகள் மீது கவனம் செலுத்த வேண்டும்.

குழந்தையின்மைக்கு ஆண், பெண் இருவருமே தான் காரணம் : IVF நிபுணர்கள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

குழந்தை பெற்றெடுத்த தாய்மார்கள் தங்கள் உடலில் இருந்து ஆக்ஸோடைசின் என்ற ஹார்மோனை சுரக்கச் செய்வதன் மூலமாக கர்ப்பப்பையை சுருங்கச் செய்து, தட்டையான வயிறு போன்ற காட்சியை அடைய முடியும் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். தேவைப்படும் பட்சத்தில் வயிற்றுப் பகுதிக்கு இறுக்கும் தரும் வகையிலான கர்ப்ப கால பெல்ட் ஒன்றை அணிந்து கொள்ளலாம் என்று அவர்கள் பரிந்துரை செய்கின்றனர்.உடற்பயிற்சிகளுக்கு முக்கியத்துவம்

பிரசவத்திற்கு பிறகு குழந்தையை பராமரிப்பதற்கு தான் பெண்களுக்கு நேரம் போதுமானதாக இருக்கும். நினைத்த நேரத்தில் தூங்கி எழுந்து, திடீர் திடீரென்று பசித்து அழுகின்ற குழந்தையை கவனித்துக் கொள்வது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. தாய்மார்கள் முறையாக சாப்பிட்டு தூங்கி எழுந்திருக்க முடியாது. இவ்வாறு ஓய்வின்றி பிசியாக இருக்க வேண்டிய சூழலிலும் தொப்பையை குறைக்க வேண்டும் என்றால் உடற்பயிற்சி செய்தாக வேண்டிய கட்டாயம் வந்து விடுகிறது.

பெண்களே செக்ஸ் வாழ்க்கையில் ஈர்ப்பு குறைகிறதா..? உங்களுக்கான ஆலோசனைகள்

குறிப்பாக, இடுப்பு அடிவயிறு மற்றும் பின் முதுகு ஆகிய பகுதிகளை பலப்படுத்துவதற்கான உடற்பயிற்சிகள் மீது கவனம் செலுத்த வேண்டும்.

மற்றவர்களைப் போல மிகக் கடுமையான உடற்பயிற்சிகளை தாய்மார்கள் செய்யக்கூடாது. குறிப்பாக பிரசவத்தில் இருந்து நான்கு முதல் ஆறு வாரங்கள் வரையில் மிதமான அளவிலான உடற்பயிற்சிகளை மட்டுமே செய்ய வேண்டும்.அதிலும் பாலூட்டும் தாய்மார்கள் உடற்பயிற்சி என்ற பெயரில் உடலை மிகவும் வருத்திக் கொள்ளாமல், முதலில் உடல் பாகங்களுக்கு ரிலாக்ஸ் அளிக்கும் சாதாரண பயிற்சிகளை செய்தாலே போதுமானது.

எதுவுமே முடியாவிட்டாலும் காலை மற்றும் மாலை நேரத்தில் வீட்டை ஒட்டியே நடை பயிற்சி செய்தால் கூட போதுமானது. அதேசமயம் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ளவும், உடல் பருமனை குறைக்கவும் வேண்டி உடற்பயிற்சி செய்ய விரும்பும் புதிய தாய்மார்கள் தங்களுடைய மகப்பேறு மருத்துவரை அணுகி ஆலோசனை செய்த பிறகு இதனை தொடங்குவது மிகுந்த நன்மை பயக்கும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Belly Fat Reduce, Post Pregnancy Side effects

அடுத்த செய்தி