ஆழ்ந்த தூக்கம் வேண்டுமா..? தூங்குவதற்கு முன் சூடான நீரில் குளியுங்கள்..!

உறங்கச் செல்வதற்கு ஒன்று முதல் இரண்டு மணி நேரத்திற்கு முன்னதாக வெதுவெதுப்பான நீரில் குளிப்பதால பத்தே நிமிடத்தில் தூக்கம் சொர்க்கத்தை அடையும்

news18
Updated: July 23, 2019, 3:56 PM IST
ஆழ்ந்த தூக்கம் வேண்டுமா..? தூங்குவதற்கு முன் சூடான நீரில் குளியுங்கள்..!
வெதுவெதுப்பான நீரில் குளியல்
news18
Updated: July 23, 2019, 3:56 PM IST
தூங்கச் செல்வதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன் வெது வெதுப்பான நீரில் குளித்தால் ஆழ்ந்த தூக்கம் வரும் என்று ஆய்வு ஒன்று கூறுகிறது.

டெக்சாஸ் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், 5,322 பேரை ஈடுபடுத்தியுள்ளது. ஆய்வில் மனித உடலில் 104 மற்றும் 109 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலையில் தண்ணீர் படும்போது அவர்களின் தூக்க நிலை அதிகரிப்பதாகக் கண்டறிந்துள்ளனர். அதாவது அந்த நீரானது 41 டிகிரி செல்சியத்தில் இருக்க வேண்டும். உறங்கச் செல்வதற்கு ஒன்று முதல் இரண்டு மணி நேரத்திற்கு முன்னதாக வெதுவெதுப்பான நீரில் குளிப்பதால பத்தே நிமிடத்தில் தூக்கம் வரும் என்கிறனர் ஆய்வாளர்கள்.

இதை ஸ்லீப் மெடிசின் ஜர்னலும் ஆய்வு செய்து உறுதிபடுத்தியுள்ளது.
41 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் நீர் உடலில் படுபோது ’thermoregulatory system’ என்று சொல்லக் கூடிய உடலின் வெப்ப நிலையைச் சமநிலைச் செய்யும் ஆற்றல் தூண்டிவிடப்பட்டு உடல் இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. இதனால் உடலின் ஒட்டு மொத்த பாகங்களுக்கும் இரத்தம் சீராகப் பாய்கிறது. கை கால்கள், பாதங்கள் இதமாகி; உடல் வெப்பம் சமநிலையடைந்து ஓய்வு நிலைக்கு தயாராகிறது என்று தெளிவாக விளக்குகிறது ஆய்வு.

இனி தூக்கம் வரவில்லை என்று மருத்துவரை அணுகி மாத்திரைகளை விழுங்குவதைக் காட்டிலும் , கட்டிலிலியே புரண்டு புரண்டு படுப்பதை காட்டிலும்... நேராக பாத்ரூம் சென்று சூடாக ஒரு குளியலைப் போடுங்கள். தூக்கம் கண்களை வருடும்.

Loading...
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: July 23, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...