நாய்களுடன் வாக்கிங், மளிகைப் பொருட்களை வாங்கச்செல்வது கொரோனா பரவலை அதிகரிக்குமா?

செல்லப்பிராணியின் உரிமையாளர்கள் தங்கள் செல்லப்பிராணியை வெளியில் அழைத்துச் செல்லும்போது முடிந்தவரை கவனிப்பு மற்றும் சுகாதாரத்தை பராமரிக்கவும், வீடு திரும்பிய பின் செல்லப்பிராணிகளை நன்றாக சுத்தம் செய்யவும் என பரிந்துரைத்துள்ளனர். 

நாய்களுடன் வாக்கிங், மளிகைப் பொருட்களை வாங்கச்செல்வது கொரோனா பரவலை அதிகரிக்குமா?
மாதிரி படம்
  • News18
  • Last Updated: November 19, 2020, 3:28 PM IST
  • Share this:
கொரோனா வைரஸ் ஒரு தொற்றுநோயாக அறிவிக்கப்பட்டதிலிருந்து, பல செல்லப்பிராணிகளின் உரிமையாளர்கள் ஒரு கேள்வியை தொடர்ந்து கேட்டுக்கொண்டிருக்கிறார்கள், அது நாய்களும், பூனைகளும் வைரஸை பரிமாற்றம் (Transfer) ஆக முடியுமா என்று? இதற்கான பதில் அவை நிச்சயமாக வைரஸைக் பரப்புவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும் என்பதுதான். 

வாக்கிங் செல்லும் உங்கள் செல்ல நாய் கொரோனா வைரஸை 78% கொண்டிருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக சமீபத்திய ஆய்வு ஒன்று கூறியுள்ளது. குறிப்பாக நீங்கள் வீட்டில் மளிகைப் பொருட்களைப் பெற்றால், அப்போது ஆபத்து இரட்டிப்பாகும். இதுகுறித்த ஆய்வை Granada பல்கலைக்கழகம் மற்றும் ஸ்பெயினில் உள்ள The Andalusian School of Public Health ஆகியவை இணைந்து நடத்தியது. 

தொற்றுநோயைக் குறைக்கும் அபாயத்தில் அன்றாட நடத்தை எவ்வாறு சேர்க்கப்பட்டது என்பதை பகுப்பாய்வு செய்வதன் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் சூப்பர் மார்க்கெட் டெலிவரி மற்றும் நாய்களை வாக்கிங் அழைத்து செசெல்லும் போது தொற்று அதிகரிப்பதை அவர்கள் கண்டுபிடித்தனர். நாய்கள் எளிதாக வைரஸை பரப்பும் அல்லது பொது இடங்களுக்கு செல்வதன் மூலம் அங்கும் இதை தொற்றை பரப்பும், பின்னர் அதை அவற்றின் உரிமையாளருக்கும் கூட தொற்றிவிடும். 


எந்தெந்த விலங்குகள் வைரஸை பெற்றுக்கொள்ளவும் அதனை பிறருக்கு பரப்ப முடியும் என்பது பற்றி இன்னும் சரியாக நிறுவப்படவில்லை. ஒரு சில நாய்கள் மற்றும் பூனைகளில் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தாலும், அவை நோய்வாய்ப்பட்டதாகத் தெரியவில்லை. இந்த ஆய்வில் ஈடுபட்டுள்ள ஆராய்ச்சியாளர்கள், நாய் உரிமையாளர்கள் தங்கள் செல்லப்பிராணியை வெளியில் அழைத்துச் செல்லும்போது முடிந்தவரை கவனிப்பு மற்றும் சுகாதாரத்தை பராமரிக்கவும், வீடு திரும்பிய பின் செல்லப்பிராணிகளை நன்றாக சுத்தம் செய்யவும் என பரிந்துரைத்துள்ளனர். 

இந்த ஆய்வுக்கு சுமார் 2,086 ஸ்பானிஷ் குடியிருப்பாளர்கள் கணக்கெடுக்கப்பட்டனர். அவர்களின் செயல்பாடுகளினால் நாய்கள் பாதிக்கப்பட்டுள்ளதா? என்றும் ஆபத்தான செயல்பாடுகளை நாய்கள் வெளிப்படுத்தியுள்ளதா? என்றும்  முடிவுகள் ஒப்பிடப்பட்டன. இவர்களில் சுமார் 98 (4.7%) பேர் ஒரு கட்டத்தில் நேர்மறையை சோதித்தனர் (Tested Positive). கடையில் ஷாப்பிங் செய்வதை விட மளிகைப் பொருட்களை பெறுவது 94% ஆபத்தானது என்பதை ஆய்வுசார் கவனிப்புகள் வெளிப்படுத்தின. 

Also read... குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் ஆன்டிபயாட்டிக்ஸ் ஆஸ்துமா, ஒவ்வாமை அபாயத்தை அதிகரிக்கும்.. ஆய்வு தரும் அதிர்ச்சி..அலுவலகத்தில் பணிபுரிவது (வீட்டிலிருந்து வேலை செய்வதற்கு மாறாக) ஆபத்தை 74% அதிகரித்தது. இதுகுறித்து விளக்கிய ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான பேராசிரியர் கிறிஸ்டினா சான்செஸ் கோன்சலஸ் "எங்கள் ஆராய்ச்சியின் முடிவுகள் நாய் உரிமையாளர்களிடையே தொற்றுநோய் அதிகரிக்கும் என்று எச்சரிக்கிறது" என்று கூறினார். இருப்பினும், ஆய்வின் இந்தச் சிறிய பகுதி தொற்றுக்கு காரணமல்ல என்ற உண்மை முடிவுகளை பொறுத்தவரை, இதை உலகளாவிய விதியாக எடுத்துக் கொள்ள வேண்டும். இவை அவதானிக்கும் புள்ளிவிவரங்கள் (observational statistics) மட்டுமே. 

பேராசிரியர் கோன்சலஸின் கூற்றுப்படி, மனிதர்களைப்  போல, நாய்கள் வைரஸைப் பரப்புகின்றனவா, அல்லது மக்களுக்கு வைரஸை தொற்ற ஒரு மேற்பரப்பாக செயல்பட்டதா என்று கூற போதுமான தகவல்கள் இல்லை. நாய்களின் மலம் கூட வைரஸை ட்ரான்ஸ்பர் செய்யும் என்பதை நாம் அறிந்ததே. நாய்களுக்கான வாக்கிங் மற்றும் சரியான சுகாதாரத்திற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரிக்க/ஒழுங்குப்படுத்த ஆய்வாளர்கள் பரிந்துரைத்துள்ளனர். மேலும் இந்த காரணங்களுக்காக மக்கள் பீதி அடைய வேண்டாம் என்றும் கூறியுள்ளனர்.
First published: November 19, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading