Motivational story : பாலுக்கு பதிலாக தண்ணீர் ஊற்றிய ஊழியர்கள் - கதை சொல்லி விவரித்த விவேகானந்தர்!

விவேகானந்தர்

எல்லோரும் பால் ஊற்றும் போது, தான் ஒருவன் மட்டும் தண்ணீர் ஊற்றினால் தெரியவா போகிறது என நினைத்து, எல்லோரும் தண்ணீரையே ஊற்றியுள்ளனர்.

  • Share this:
    அரசன் ஒருவன் இருந்தான். அவனுக்குப் பல பணியாளர்கள் இருந்தனர். அவர்கள் ஒவ்வொருவரும், தானே அரசனிடம் மிகுந்த ஈடுபாடு உள்ளவனென்றும், அரசனுக்காக உயிரைத் தரவும் தயாராக இருப்பதாகவும் அவர்கள் சொல்லி வந்தனர். ஒரு நாள் அரசவைக்கு துறவி ஒருவர் வந்தார். அரசன் அவரிடம் பேசிக் கொண்டிருந்தபோது, தனது பணியாளர்களின் நேர்மையைக் குறித்துப் பெருமையாகக் கூறினார்.

    ஆனால் அந்த துறவியோ அதை சோதிக்க விரும்பினார். அரசனும் அதை அனுமதித்தான். அதன்படி ஒரு சிறிய சோதனை வைத்தார் துறவி. அவர், தான் அரசனின் ஆயுளும், ஆட்சியும் பல்லாண்டுகள் நீடிக்க ஒரு யாகம் செய்யப் போவதாகவும், அதற்கு நிறைய பால் தேவைப்படுகிறது என்றும், அரசனது பணியாளர்கள் ஒவ்வொருவரும் ஒரு குடம் பால் தந்து அதற்காக வைக்கப்படும் அண்டாவில் அன்றிரவு ஊற்ற வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    அரசன் புன்னகையுடன், இதுதானா உங்கள் சோதனையா என கேட்டான். பின்னர் அவன் தனது பணியாளர்கள் அனைவரையும் அழைத்து, துறவி நடத்தவுள்ள யாகத்தைப் பற்றிக் கூறி, அவர்கள் ஒவ்வொருவரும் ஒரு குடம் பால் தர வேண்டும் எனக் கூற, அவர்கள் அனைவரும் அந்த யோசனைக்கு மனப்பூர்வமான சம்மதத்தைத் தெரிவித்தனர். அன்று இரவு அவ்வாறே ஒவ்வொருவரும் அதற்காக வைக்கப்பட்டிருந்த அண்டாவில் ஊற்றிச் சென்றனர்.

    மறுநாள் காலையில் பார்த்தபோது அண்டா நிறையத் தண்ணீர்தான் இருந்தது. இதைக் கண்டு அதிர்ந்த அரசன் பணியாளர்கள் அனைவரையும் அழைத்து விசாரித்தான். எல்லோரும் பால் ஊற்றும் போது, தான் ஒருவன் மட்டும் தண்ணீர் ஊற்றினால் தெரியவா போகிறது என நினைத்து, எல்லோரும் தண்ணீரையே ஊற்றினர் என்பது தெரியவந்தது.

    Read More : சாதிக்கத் துடிக்கும் இளைஞருக்கு மருள் நீக்கியார் கூறிய ஆலோசனை

    இந்த உதாரணக் கதையைக் கூறி உலக மக்களின் சுயநலப் போக்கைச் சுட்டிக் காட்டினார் சுவாமி விவேகானந்தர். அது போலவே நாமும் நமது பங்கு வேலையை சுயநலத்துடன் செய்து வருகிறோம். நாம் மட்டும் செய்தால் மற்றவர்களுக்கு தெரியவா போகிறது என நினைத்து தவறு செய்கிறோம்.

    Must Read : ஈகோவை விட்டொழித்து மனம் மாறிய இளைஞர்... தேடிவந்த மரியாதை!

    எனவே, நம்முள் இருக்கும் சுயநலப்போக்கையும் தூக்கியெறிந்துவிட்டு, நமது வேலைகளை நேர்மையாக செய்ய வேண்டும். நானும் செய்தேன் என்று பெயரளவிற்கு மட்டும் செய்யாமல், எப்போதும் நேர்மையாக இருக்க வேண்டும் என சுவாமி விவேகானந்தர் வலியுறுத்துகிறார்.
    Published by:Suresh V
    First published: