பாத்திரம் கழுவ பயன்படும் ஸ்க்ரப்பர் ஸ்பாஞ்ச் கிருமிகளை அழிக்கும்: ஆய்வில் கண்டுபிடிப்பு!

இது ஆண்டிபயாடிக்கால் கூட அழிக்க முடியாத கிருமிகளையும் அழிக்கும்.

news18
Updated: June 25, 2019, 10:01 PM IST
பாத்திரம் கழுவ பயன்படும் ஸ்க்ரப்பர் ஸ்பாஞ்ச் கிருமிகளை அழிக்கும்: ஆய்வில் கண்டுபிடிப்பு!
சமையலறை ஸ்பாஞ்
news18
Updated: June 25, 2019, 10:01 PM IST
அமெரிக்க ஆய்வாளர்கள் பாத்திரம் கழுவப் பயன்படும் ஸ்க்ரப்பர் ஸ்பாஞ்சில் உருவாகும் வைரஸ் சமையலறையில் உருவாகும் பாக்டீரியாவை அழிக்கும் தன்மை கொண்டது என்றும் இது ஆண்டிபயாடிக்கால் கூட அழிக்க முடியாத கிருமிகளையும் அழிக்கும் வல்லமை கொண்டது என்று கூறியுள்ளனர்.

American Society for Microbiology- ன் வருடாந்திர கூட்டமைப்பு நடந்தது. அந்தக் கூட்டத்தில்தான் இந்த ஆய்வு வெளியிடப்பட்டுள்ளது. அதில் இரண்டு ஆராய்ச்சியாளர்கள், கிச்சனில் உருவாகும் பாக்டீரியாக்களைப் பாத்திரம் கழுவும் ஸ்பாஞ்சு எதிர்வினையாற்றி அழிப்பதைக் கண்டுபிடித்துள்ளனர். அதற்கு அதில் உருவாகும் ஒரு வித வைரஸே காரணம் என்று கண்டுபிடித்துள்ளனர். இதை Xinhua என்னும் நியூஸ் ஏஜென்ஸியும் பதிவுசெய்துள்ளது.

பாத்திரம் கழுவப் பயன்படுத்தப்படும் ஸ்பாஞ்சுகளில் பல வகையான மைக்ரோ நுண்ணுயிரிகள் உருவாகின்றன. அவை மிகப்பெரிய நுண்ணுயிரியாக உருவாகின்றன. அந்த பாக்டீரியாதான் வைரஸுக்கு நல்ல உணவு என்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர். இவை சமையலறையில் உருவாகும் கிருமிகளை அழிக்கும் ஆற்றல் கொண்டவை என்று கூறியுள்ளனர்.


மேலும், இது தனி நபரைத் தாக்கிய பாக்டீரியாவையும் கொல்லுமா என்று ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்ததில், கொல்லக் கூடிய ஆற்றல் உண்டு என்பதையும் கண்டுபிடித்துள்ளனர்.
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.


Loading...


First published: June 25, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...