Home /News /lifestyle /

சிகிச்சையில் இருக்கும் குழந்தைகளுக்கு மன அழுத்தமா? வெர்ச்ஷூவல் ரியாலிட்டி கொடுக்கும் தீர்வு..

சிகிச்சையில் இருக்கும் குழந்தைகளுக்கு மன அழுத்தமா? வெர்ச்ஷூவல் ரியாலிட்டி கொடுக்கும் தீர்வு..

காட்சி படம்

காட்சி படம்

சிகிச்சையில் இருக்கும் குழந்தைகளின் பயம் மற்றும் மன அழுத்தத்தைப் போக்க வெர்ச்ஷூவல் ரியாலிட்டி உதவுவதை கண்டுபிடித்துள்ளனர்.

நரம்புகளில் குழாய் பொருத்தப்பட்டு சிகிச்சையில் இருக்கும் குழந்தைகளுக்கு இருக்கும் மன அழுத்தம் மற்றும் பயத்தை வெர்ச்ஷூவல் ரியாலிட்டி போக்குவதாக ஆய்வு மூலம் மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெரும் குழந்தைகளுக்கு நரம்புகளில் குழாய் பொருத்தப்பட்டு ஊசி மற்றும் மருந்துகள் செலுத்தப்படுகின்றன. இது குழந்தைகளின் மனதில் ஒருவிதமான கவலை மற்றும் பயத்தை ஏற்படுத்துகிறது. நாட்பட்ட சிகிச்சையில் இருக்கும் குழந்தைகளுக்கு மன அழுத்தமும் ஏற்படுகிறது. இதனை போக்குவது குறித்து அமெரிக்க மருத்துவர்கள் அடங்கிய குழுவினர், ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது, இதுபோன்ற சிகிச்சையில் இருக்கும் குழந்தைகளின் பயம் மற்றும் மன அழுத்தத்தைப் போக்க வெர்ச்ஷூவல் ரியாலிட்டி உதவுவதை கண்டுபிடித்துள்ளனர்.

லாஞ் ஏஞ்சல்ஸ் நகரில் இருக்கும் குழந்தைகள் மருத்துவமனைகளில் ஏராளமான குழந்தைகள் சிகிச்சை பெற்றுவருகின்றனர். அங்கு நாட்பட்ட சிகிச்சையில் இருக்கும் குழந்தைகள் பெரும்பாலானோர், நரம்புகளில் பொருத்தப்பட்டுள்ள வடிகுழாய்களை எண்ணி கவலை மற்றும் பயத்துடன் இருந்துள்ளனர். சிலருக்கு மன அழுத்தம் ஏற்பட்டதையும் மருத்துவர்கள் நேரடியாக பார்த்துள்ளனர். சபான் ரிசேர்ச் இன்ஸ்டியூட்டில் (Saban Research Institute) கடந்த 20 ஆண்டுகளாக பணியாற்றி வரும் மருத்துவர் மற்றும் ஆய்வாளர் ஜெஸ்ரி கோல்டு, இது குறித்து ஆய்வில் இறங்கினார்.

Also read : குழந்தைக்கு பிளாஸ்டிக் பாட்டிலில் பால் கொடுக்குறீங்களா ? அப்ப இதை படியுங்கள்..

அதில், வலிகளை எதிர்கொள்ளும் குழந்தைகளுக்கு வெர்ச்ஷூவல் ரியாலிட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்துள்ளார். அந்த ஆய்வில் பங்கேற்ற குழந்தைகள், தங்கள் வலியை உணராமல் இருந்ததை உணர்ந்த அவர், சிலர் தங்கள் உடலில் இருந்து ரத்தம் எடுப்பதுகூட தெரியாமல் இருப்பதாக தெரிவித்துள்ளார். இதன் மூலம் தன்னுடைய முயற்சிக்கு பலன் கிடைத்தாகவும் மருத்துவர் ஜெஸ்ரி கோல்டு கூறியுள்ளார். அவரின் இந்த ஆய்வு ஜமா நெட்வொர்க் ஓபன் இதழில் வெளியிட்டுள்ளார்.

ஆய்வு குறித்து அவர் பேசும்போது, "பீதி மற்றும் அலறலுடன் இருக்கும் குழந்தைகளின் நிலையை உணர்ந்து பாருங்கள். நாட்பட்ட நோய்களுக்கு உள்ளான குழந்தைகள் வலி மற்றும் துயரத்தை நாள்தோறும் எதிர்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அத்தகைய பாதிப்புகளையும், மன உளைச்சலையும் எதிர்கொள்ளாமல், பாதுகாப்புடன் இருக்கிறோம் என்பதை உணர வைக்க வேண்டும் என்பதே எங்களுடைய முதன்மையாக இலக்கு. அதில் வெர்ச்ஷூவல் ரியாலிட்டியை பயன்படுத்தும்போது, முன்னேற்றம் ஏதேனும் கிடைக்கிறதா என்பதை ஆய்வுக்குட்படுத்தினோம்.

Also read : இந்தியாவில் குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி எப்போது கிடைக்கும்?

நாங்கள் எதிர்பார்த்ததுபோலவே நல்ல முடிவுகள் கிடைத்துள்ளன. சில குழந்தைகள் முழுமையாக வலியை உணரவில்லை. பலர் குறைந்த அளவிலான வலியை மட்டும் உணர்ந்ததால். முன்பிருந்ததைவிட அவர்கள் மனதில் இருந்த கவலையும் குறைந்ததிருந்ததை பார்க்க முடிந்தது. இதன்மூலம் குழந்தைகளுக்கு கவனச் சிதறலை ஏற்படுத்தினால் அவர்கள் வலியை உணரமாட்டார்கள் என்பதை நாங்கள் உணர்ந்தோம். பல்வேறு சூழ்நிலைகளிலும் மேற்கொண்ட இந்த ஆய்வு அனைத்து நிலைகளிலும் சாதகமான முடிவுகளையே கொடுத்துள்ளது" என்றார். மேலும், மன அழுத்தமே உடலில் ஏற்படும் நரம்பு சுருக்கங்களுக்கு காரணம் என்றும் தெரிவித்தார்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: Children, Health

அடுத்த செய்தி