கொரோனா ஊரடங்கு : 'வீடியோ கேம் அடிக்‌ஷன்' அதிகரித்துள்ளதாக ஆய்வில் தகவல்..!

கேம் குவிட்டர் நிறுவனம் ஒரு மாதத்திற்கு 75,000 பயனாளர்களைக் கொண்டிருக்கிறதாம்.

கொரோனா ஊரடங்கு : 'வீடியோ கேம் அடிக்‌ஷன்' அதிகரித்துள்ளதாக ஆய்வில் தகவல்..!
கேம் குவிட்டர் நிறுவனம் ஒரு மாதத்திற்கு 75,000 பயனாளர்களைக் கொண்டிருக்கிறதாம்.
  • Share this:
ஊரடங்கு உத்தவரால் மக்கள் வீட்டில் முடங்கியுள்ள நிலையில் வீடியோ கேமிற்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ஆய்வு வெளியிடப்பட்டுள்ளது.

வீட்டில் முடங்கியுள்ள பலருக்கும் கைகொடுத்திருப்பது இந்த வீடியோ கேம்ஸ் தான். குறிப்பாக பப்ஜி பிரியர்களுக்கு இது சொர்க்ககாலம் எனலாம். எப்போதும் பப்ஜியா என வீட்டில் திட்டும் அம்மாக்கள் கூட என்னமோ பன்னுங்க வீட்டில் இருந்தால் போதும் என்று சொல்லும் நிலை வந்துவிட்டது. அம்மாக்கள் மட்டுமல்ல உலக சுகாதார அமைப்பும் கேம்ஸ் விளையாடுங்கள் என வீட்டில் இருக்க வைக்க அறிவுறுத்துகிறது.

கேம் ஆப்ஸ் நிறுவனங்களும் இதுதான் சரியான வாய்ப்பு என தள்ளுபடி, ஆஃபர்களை அள்ளிக்கொடுக்கின்றன. அதேசமயம் ஹேண்ட் வாஷ் மற்றும் வீட்டில் இருங்கள் என புரமோட் செய்தால் ரிவார்ட் பாய்ண்ட்ஸும் வழங்கப்படுகிறது.


லாக்டவுன் நேரத்தில் தண்ணீர் அதிகம் செலவாகிறதா..? சேமிக்க வழிகள் இதோ...!

கேம் குவிட்டர் நிறுவனம் ஒரு மாதத்திற்கு 75,000 பயனாளர்களைக் கொண்டிருக்கிறதாம். மற்ற நாட்களில் 100 பேர் வருவதே அதிசயம் என்கிறார் அதன் நிறுவனர் கேம் அடேர். உலக அளவில் ஆன்லைனில் பீக் டைமில் மட்டும், 24 மில்லியன் மக்கள் கேம் விளையாடுகின்றனராம். கிட்டத்தட்ட 75% அதிகரித்துள்ளதாக தகவல்.

இதனால் சூதாட்டமும் எட்டிப்பார்க்கத் துவங்கியுள்ளதாக சூதாட்டத்திற்கான தேசிய கவுன்சில் தெரிவித்துள்ளது.

உலக சுகாதார அமைச்சகமே நீண்ட நேரம் வீடியோ கேமில் செலவழிப்பது மனநலக் குறைபாடு என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் உயிரைக் காக்க வேறு வழியில்லை என்ற கட்டத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறோம் என்பதை உணர வேண்டும் என்கிறது. இதற்கு ஒரே வழி தாமாகவே மனதளவில் சுயக் கட்டுபாடு இருக்க வேண்டும்.

பார்க்க :

 

 
First published: April 8, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading