பிறந்த குழந்தைகளுக்கான வாஸ்து டிப்ஸ் - தெரிந்து கொள்ளுங்கள்!

குழந்தை

குழந்தை வருகை முதல் அவர்கள் தூங்கும் இடம் வரை என வாஸ்து பார்த்து செய்வதை பலர் வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் பிறந்த குழந்தைக்கான சில வாஸ்து டிப்ஸ்களை இங்கே பார்க்கலாம்.

  • Share this:
குழந்தையின் வருகை என்பது தம்பதிகளின் வாழ்க்கையில் பொன் நிமிடங்களில் ஒன்றாக இருக்கும். குழந்தை பிறந்ததை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் அதே வேளையில், அவர்களுக்கு தேவையான விஷயங்கள் ஒவ்வொன்றையும் மிக கவனமாக செய்வார்கள். மருத்துவரிடம் ஆலோசனை பெறுவதில் இருந்து அன்றாட கவனிப்பு வரை தங்களுடைய முழு அக்கறையையும் செலுத்துவார்கள்.

இந்து மத நம்பிக்கை அதிகம் உடைய இந்தியாவில் தெய்வீகம் வழியாகவும் குழந்தைக்கு அனுகூலம் கிடைக்க வேண்டும் என நினைப்பவர்கள் ஏராளம். அதற்காக, குழந்தை வருகை முதல் அவர்கள் தூங்கும் இடம் வரை என வாஸ்து பார்த்து செய்வதை பலர் வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் பிறந்த குழந்தைக்கான சில வாஸ்து டிப்ஸ்களை இங்கே பார்க்கலாம்.

சூரிய ஒளி

இயற்கையின் கொடையான சூரிய ஒளி குழந்தைக்கு படுமாறு அறை இருக்க வேண்டும். குறிப்பாக, காலை நேர சூரிய ஒளி குழந்தையின் உடலுக்கு தேவையான ஒன்று. மேலும், குழந்தையின் அறையில் இருக்கும் தேவையற்ற கிருமிகளை அழிக்கும் சக்தி சூரிய ஒளிக்கு உண்டு. சூரிய ஒளியில் இருக்கும் பேராற்றல் அன்றாடம் குழந்தைக்கு கிடைக்கும்போது நோய் எதிர்ப்பு சக்தி உள்ளிட்ட உடல் ஆரோக்கியம் மேம்படுவது மட்டுமல்லாது, தெய்வத்தின் அனுகூலமும் கிட்டும். மேலும், காற்றோட்டம் இல்லாத அறைகளில் இருக்கும்போது குழந்தைகளின் உடல் நலனில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. சூரிய ஒளியால் குழந்தை விரைவாக கண்களை விழிக்கும். வைட்டமின் டி சத்து கிடைக்கும்.

குழந்தையின் படுக்கை

குழந்தையின் படுக்கை கண்டிப்பாக வட - கிழக்கு பகுதியில் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். வடக்கு, கிழக்கு மற்றும் வட கிழக்கு ஆகிய மூன்று திசைகளில் குழந்தைகளை படுக்க வைக்கலாம். வட கிழக்கு என்பது கூடுதலான நன்மையை கொடுக்கும் பகுதியாக வாஸ்து முறையில் கூறப்படுகிறது.

குழந்தை தொட்டில்

குழந்தைகளுக்கு அமைக்கப்படும் தொட்டில் வாஸ்து முறைப்படி தெற்கு - மேற்கு திசைகளில் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். சுவற்றில் இருந்து 2 முதல் 3 அடிகள் இடைவெளி விட்டிருக்க வேண்டும். மேலும், குழந்தையை தொட்டிலில் படுக்க வைக்கும்போது அவர்களின் தலையானது மேற்கு நோக்கி அல்லது தெற்கு நோக்கி இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். தாலாட்டு பாடி குழந்தையை உறங்க வைக்கும்போது சுவற்றில் தொட்டில் மோதிவிடாத மாதிரி கவனமாக இருக்க வேண்டும்.

அமைதியான தூக்கம்

பெரும்பாலும் பிறந்த குழந்தைகள் அதிகபட்சம் 17 மணி நேரம் வரை தூங்க வைக்கலாம். ஆனால் அவர்களுக்கு நிம்மதியான தூக்கம் வேண்டும் என்றால் ஏற்கனவே கூறியதுபோல் தெற்கு அல்லது மேற்கு நோக்கி தலையை வைத்து தூங்க வைக்க வேண்டும். ஆரோக்கியமான சுற்றுப்புறச் சூழல் இருக்க வேண்டியது அவசியம். சத்தம் நிறைந்த பகுதிகளில் குழந்தைகள் நிம்மதியாக தூங்குவது கடினம்.

வீட்டின் அமைப்பு

மேற்கு மற்றும் வடக்கு நோக்கி அமைந்திருக்கும் வீடுகளில் காற்றோட்டம் நிறைந்து இருக்கும். அந்தமாதிரியான வீடுகளை தேர்தெடுத்து வசிக்கும்போது குழந்நைகளின் சுவாசம் நன்றாக இருக்கும். சுவாசிப்பதில் அவர்களுக்கு சிரமம் இருக்காது. மேலும், அவர்களின் மனதும் மகிழ்ச்சியாக இருக்கும்.

உப்பு

குழந்தைகள் இருக்கும் அறையில்  கல் உப்பை வைக்க வேண்டும். இதனால், அந்த அறையில் எதிர்மறையான சக்திகள் இருக்காது அல்லது தங்காது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், உப்பை நீண்ட நாட்களுக்கு வைத்திருக்க கூடாது. குறிப்பிட்ட கால இடைவெளியில் உப்பை மாற்றிவிட வேண்டும்.

பொம்மை

குழந்தைகள் இருக்கும் அறைகள் அடர் நிறங்கள் மற்றும் பொம்மைகள் இருத்தல் கூடாது. மிகவும் இலகுவான, Soft - ஆன கலர் இருக்க வேண்டும். பொம்மைகளும் இலகுவான, கலைநயம் மிக்க பொம்மைகளாக இருத்தல் வேண்டும். ஒளி அமைப்பும் கண்களை கூசும் வகையில் இருத்தல் கூடாது.

மன ஆரோக்கியம்

வளரும் குழந்தைகளுக்கு மன ஆரோக்கியம் மிகவும் முக்கியம் என்பதால், குழந்தைகள் இருக்கும் அறைகளில் தன்னம்பிக்கை கொடுக்கக்கூடிய புகைப்படங்கள், தெய்வீக தன்மை வாய்ந்த அல்லது அமைதியை கொடுக்கும் புகைப்படங்கள் சுற்றியிருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். சூரிய காந்தி பூ மற்றும் இலை புகைப்படங்கள் குழந்தைகளின் மனோதிடத்தை வளர்க்கும் என ஆய்வுகள் கூறுகின்றன.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published: