பெயிண்டிங், அழகான குழந்தைகளின் புகைப்படங்கள், வால்போஸ்டர்கள், ஆன்டிக் பொருட்கள், புத்தர் சிலை என வீட்டை அலங்கரிக்க பலவிதமான பொருட்களை பயன்படுத்துவோம். குறிப்பாக, படுக்கறையின் அழகை அதிகரிக்க பிரத்யேகமான பொருட்களை சந்தையில் இருந்து வாங்கி நாம் அழகு படுத்துவோம். அப்படி வைக்கும் சில பொருட்கள் வாஸ்துபடி, நமக்கு அசுப பலன்களை கொடுக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா?.
ஒரு சில தம்பதிகள் எப்போ பார்த்தாலும் சண்டை போட்டுக் கொண்டே இருப்பார்கள். எலியும் பூனையுமாக செயல்படுவார்கள். சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் கூட வாக்குவாதத்தில் ஈடுபடுவார்கள். இதற்கு காரணம் நீங்கள் உங்கள் படுக்கை அறையில் வைத்திருக்கும் பொருட்களாக கூட இருக்கலாம்.
அறையை அழகுபடுத்துவதற்காக நீங்கள் வைக்கும் பொருள், உங்கள் உறவில் விரிசலை ஏற்படுத்தலாம். கணவன், மனைவி அன்யோன்யம் அதிகரிக்கவும், சண்டைகள் வராமல் தவிர்ப்பதற்கும் இந்த வாஸ்து குறிப்புகளை செய்யவும்.
அறையில் மாட்டும் ஓவியத்தை கவனமாக தேர்வு செய்யுங்கள்
படுக்கையறையில் மாட்டப்படும் கலை உணர்வு நிரம்பிய ஓவியங்களால் பெரும்பாலும் பண தட்டுப்பாடு மற்றும் அதனால் கணவன் மனைவிக்குள் தீவிரமான பிரசனைகள் ஏற்படுகின்றன.
பொதுவாக ஓவியங்களை தேர்ந்தெடுப்பது என்பது தனி ரசனைதான். ஆனால் ஒரு சில ஓவியங்கள் நம் வாழ்க்கையை எதிர்மறையாக புரட்டி போட்டுவிடும் ஆபத்து கொண்டவை. எவ்வளவு அழகாக வரையப்பட்டாலும் ஒரு சில ஓவியங்களால் வாழ்க்கையில் பிரச்னை வரும் என்பதை, அதை அனுபவித்தவர்களுக்கு மட்டும் தான் புரிந்து கொள்ள முடியும்.
எதிர்மறை ஆற்றலை உண்டாக்க கூடிய ஓவியங்களை படுக்கை அறையில் எப்பொழுதுமே வைக்கக்கூடாது. இது கணவன், மனைவி உறவில் கூட விரிசலை ஏற்படுத்திவிடும்.
தவிர்க்க வேண்டிய ஓவியங்களை பொறுத்தவரை, மன்னர்கள் மற்றும் போர் சம்பந்தப்பட்ட எந்த ஓவியத்தையுமே வீட்டில் வைக்கக்கூடாது. ஓவியம் எவ்வளவு நேர்த்தியாக வரையப்பட்டிருந்ததால் கூட மன்னர்கள் போர் செய்வது, மற்றும் மக்கள் இறந்து கிடப்பது உள்ளிட்ட போர் மற்றும் போராட்டம் சம்பந்தப்பட்ட எந்த விதமான ஓவியங்களையுமே படுக்கை அறையில் வைக்கக்கூடாது.
அழும் குழந்தைகள் படங்கள் தவிர்க்க வேண்டும்
குழந்தைகள் படங்களை வாங்கி மாட்டும் பழக்கம் பலருக்கும் இருக்கிறது. இது உண்மையிலேயே படுக்கை அறையில் ஒரு அழகான, நிம்மதியான தோற்றத்தையும், உணர்வையும் தரும். குழந்தைகள் படம் தானே, எப்படி இருந்தாலும் குழந்தைகள் அழகாக இருப்பார்கள் என்று ஒரு சிலர் குழந்தைகள் அழும் படத்தை வாங்கி மாட்டுவார்கள். குழந்தைகள் அழுவது போன்ற படங்களையும், ஓவியங்களையும் வீட்டில் வைக்கவே கூடாது.
வேட்டை சம்பந்தமான படங்கள், பொருட்கள்
வேட்டைக்காரர்கள் இறையை வேட்டையாடுவது போல, இறையை தேடி ஓடுவது போல இருக்கும் புகைப்படங்கள் அல்லது ஓவியத்தை, போஸ்டர்களை அல்லது சிலைகளை படுக்கையறையில் வைக்கக்கூடாது. இது கணவன் மனைவி இருவருக்குள் பிரச்சனைகளை மட்டுமே ஏற்படுத்தும்.
உடலுறவு சம்மந்தமான புகைப்படங்கள்
திருமணத்தில் மணமகன் பல பெண்களுடன் நிற்கும்படியான வேடிக்கையாக ஒருசில புகைப்படங்கள் எடுப்பார்கள். இதை புகைப்படமாக படுக்கை அறையில் அலங்கரிக்கும் பழக்கம் பலருக்கு இருக்கிறது.
கணவரின் புகைப்படமோ அல்லது வேறு எந்த ஆணின் புகைப்படமும் பல பெண்களுடன் இருப்பது போல அல்லது மணப்பெண் பல ஆண்களுடன் நிற்கும் படியான புகைப்படங்களை அல்லது ஓவியங்களை படுக்கையறையில் வைக்கக்கூடாது. இது அவர்களின் நெருக்கத்தை கொஞ்சம் கொஞ்சமாக பாதித்து அன்னியோனத்தைக் குறைத்துவிடும்.
முகமூடி
மேலே குறிப்பிட்டவை எல்லாம் குறிப்பிட்ட ரசனை இருப்பவர்கள் தேர்வு செய்வது. ஆனால் பொதுவாகவே அழகான தோற்றம் இருக்கிறது என்ற அடிப்படையில் பலரும் இரண்டு முகமூடிக் கொண்ட ஓவியங்கள், மரத்தால் ஆன இரண்டு முகங்கள், வால் போஸ்டர்கள், சுவர்களில் தொங்க விடும் அலங்காரப் பெருட்கள் என்று இரண்டு முகமூடி / முகம் இருக்கும் பொருட்கள் பலவற்றை வாங்கி அலங்கரிக்கிறார்கள்.
ஓவியம் மட்டுமல்ல, பல வண்ண திட்டுகளால் நிறைந்திருக்கும் ஓவியத்தையும், இரண்டு முகங்கள் கொண்ட முகமூடி போன்ற அலங்கார பொருளையும் வாங்கி வைக்கிறார்கள். முகமூடி என்பது பொய்யான முகம் என்பதை குறிக்கும், எனவே தம்பதிகள் யாராவது ஒருவர் மற்றவரிடம் உண்மையாக இல்லாத ஒரு சூழல் ஏற்பட்டு உறவில் பிரச்னையை ஏற்படுத்தும்.
அதேபோல மாடர்ன் ஆர்ட் என்று கூறப்படும் முதல் பார்வையில் எதுவுமே புரியாத குழப்பமாக இருக்கும் வகையான ஓவியத்தை அழகுக்காக வரவேற்பறையில் மாட்டலாம், ஆனால் பெட்ரூமில் தவிர்க்க வேண்டும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Astrology, Vastu, Vastu tips