முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / உள்ளத்தில் உதித்த காதலை உங்களுக்கு விருப்பமானவரிடம் சொல்ல சில டிப்ஸ்..!

உள்ளத்தில் உதித்த காதலை உங்களுக்கு விருப்பமானவரிடம் சொல்ல சில டிப்ஸ்..!

Proposing ideas

Proposing ideas

பேனரில் வைத்து காதல் சொல்வது கொஞ்சம் டிராமாட்டிக்காக தெரியலாம். ஆனால் இதில் ஒரு சிறிய டிவிஸ்ட் இருக்கிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

காதலர் தினக் கொண்டாட்டத்தின் இரண்டாவது நாள் பிரோபோசல் டே கூறப்படுகிறது. பிரபோசல் டே என்பது காதலை வெளிப்படுத்தும் தினம் ஆகும். இது ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 8ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. காதலிக்கும் ஆண் அல்லது பெண்ணிடம் எப்படியாவது காதலை தெரிவிக்க வேண்டும் என்ற துடிப்பு இருக்கும். குறிப்பாக, ஆண்கள் தங்கள் காதலியிடம் காதலை சொல்லிவிட வேண்டும் என்று பல முயற்சிகளை மேற்கொள்வார்கள். இந்த ஆண்டு புரபோசல் தினத்தன்று, நீங்கள் காதலிக்கும் பெண்களிடம் எவ்வாறு காதலை சொல்வது என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

பொதுவாகவே நேசிக்கும் பெண்ணிடம் காதலை சொல்ல முடிவெடுக்கும் போது அவருக்கு பிடித்த இடத்தில், ரம்மியமான ஒரு சூழலில் தான் நீங்கள் காதலை தெரிவிக்க வேண்டும். கேண்டில் லைட் டின்னர், அல்லது மாலை நேரத்தில் கடற்கரை அல்லது உங்கள் காதலிக்கு பிடித்த இடம் ஆகியவற்றை தேர்வு செய்ய வேண்டும். இதில் குறிப்பாக உங்கள் காதலிக்கு எவை எல்லாம் பிடிக்குமோ அவற்றை மனதில் வைத்துக் கொண்டு நீங்கள் திட்டமிடுவது மிக மிக முக்கியம்.

நீங்கள் நீங்களாக இருங்கள் : 

யாரை காதலித்தாலும் சரி நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ, அதை உங்கள் காதலி அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும். அப்போதுதான் காதல் நீடிக்கும், மகிழ்ச்சியாக இருக்க முடியும். எனவே இயல்பாக நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ அதேபோல இருந்து, நேரடியாக உங்கள் காதலை தெரிவித்துவிடலாம். சுற்றி வளைக்காமல், சொல்லி விடுங்கள். உங்கள் காதலியை இம்ப்ரஸ் செய்ய வேண்டும் என்று உங்களை நீங்கள் மாற்றிக் கொள்ள வேண்டும் என்று திட்டமிட்டால் தோல்வியில் முடியலாம்.

காதலி முன்பு மண்டியிட்டு காதலை சொல்லுங்கள் :

இது மிக மிக பழைய ஸ்டைல் என்றாலும் பெரும்பாலான சமயத்தில், வொர்க் அவுட் ஆகி விடும். காதலியை நிற்க வைத்து, அவருக்கு முன்பு மண்டியிட்டு நீங்கள் வாங்கியிருக்கும் பரிசு பொருளை நீட்டி உங்களை காதலியிடம் காதலை தெரிவித்து விடுங்கள், நிச்சயமாக ஏற்றுக்கொள்வார்! இதுபோல தைரியமாக இருக்கும் ஆண்களை பெண்கள் மிகவும் விரும்புவார்கள். இவ்வாறு காதலை சொல்வதற்கு ஒரு ஒற்றை-ரோஜா போதும்.

உங்கள் காதலியை ஸ்பெஷலாக உணரச் செய்யுங்கள் : 

இதேபோன்ற ஸ்பெஷல் தருணங்களில் உங்கள் காதலியை இன்னும் கொஞ்சம் ஸ்பெஷலாக உணர செய்வதற்கு அவர்கள் விரும்பும் விஷயத்தை நீங்கள் செய்து அசத்துங்கள். காதலிக்கு எது பிடிக்குமோ அதை தெரிந்து கொண்டு அவரை ஆச்சரியத்துக்கு உள்ளாக்கலாம். அவருக்கு பிடித்த இடத்திற்கு அழைத்துச் சென்று சர்ப்பரைஸ் செய்யலாம் அல்லது உங்கள் காதலிக்கு பிடித்த பாடல்களை ஒலிக்க விடலாம்; அவருடைய நீண்ட நாள் ஆசைகளை தெரிந்து கொண்டு அதை நிறைவேற்றலாம். இப்படி ஏதாவது ஒன்று செய்த பிறகு உங்கள் காதலை தெரிவிக்கலாம்.

விண்ணை முட்டும் அளவுக்கு காஸ்ட்லியான புரபோசல் :

உங்கள் காதலுக்காக செலவு செய்ய முடிந்தால் ஒரு ஏர் பலூன் அல்லது உங்கள் காதல் வானத்தில் தெரியும் படி ஏதேனும் செய்யலாம்.

நீங்கள் முதலில் சந்தித்த இடத்துக்கு அழைத்துச் செல்லுங்கள் : 

எந்த உறவாக இருந்தாலும் முதல் சந்திப்பு மறக்கவே முடியாது. உங்கள் காதலை சொல்வதற்கு இதைவிட சிறந்த இடம் இருக்காது. எனவே நீங்கள் முதன் முதலில் எங்கு சந்தித்தீர்களோ அந்த இடத்திற்கு அழைத்துச் செல்லுங்கள்.

சூர்ய அஸ்தமனம் ஆகும் நேரத்தில் கடற்கரைக்கு அழைத்துச் செல்லுங்கள் : 

பொதுவாக காதலை சொல்வதற்கு ஏற்ற நேரம் மாலை நேரம் தான். சூரிய அஸ்தமனமாகி நிலவு தோன்றும் நேரத்தில் கடற்கரைக்கு அழைத்துச் சென்று உங்கள் காதலை வெளிப்படுத்துங்கள். இந்த ரம்யமான சூழ்நிலையில் உங்கள் காதலி உங்களுக்கு எஸ் சொல்வார்.

சாகச பிரியராக இருந்தால் மலையுச்சியில் புரபோஸ் செய்யுங்கள் : 

உங்களுக்கு ஏதாவது சாகசம் செய்ய விருப்பம் இருந்தால், உங்கள் காதலியை ஏதாவது ஒரு மலைப்பகுதிக்கு ட்ரக்கிங் அழைத்து சென்று மலை உச்சியில் இருந்து சூரியன் உதயமாகும்போது பிரபோஸ் செய்யுங்கள். டிராமாட்டிக்காக இருந்தாலும் இதை பல பெண்கள் ரசிப்பார்கள்.

First published:

Tags: Love proposal, Valentine Gifts, Valentine Week, Valentine's day