ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

Valentines Day 2022 : காதலர்களுக்கு மட்டும்தானா... சிங்கிள் பசங்களுக்கும் ஃபீலிங்ஸ் இருக்கு... ஹிட் கொடுத்த பாடல்களின் தொகுப்பு

Valentines Day 2022 : காதலர்களுக்கு மட்டும்தானா... சிங்கிள் பசங்களுக்கும் ஃபீலிங்ஸ் இருக்கு... ஹிட் கொடுத்த பாடல்களின் தொகுப்பு

சிங்கிள்ஸ் ஃபிலிங்ஸை வெளிப்படுத்திய பாடல்கள்

சிங்கிள்ஸ் ஃபிலிங்ஸை வெளிப்படுத்திய பாடல்கள்

Valentines Day 2022 : பாண்டிய ராஜன் அன்றே காதலை எதிர்த்து இந்தப் பாடலை பாடியிருப்பார். அதுவும் இளையராஜா இசையில் இளையராஜாவே பாடியதும் இந்தப் பாடலின் கூடுதல் சிறப்பு.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  காதலர்கள் மட்டும்தான் காதல் பாடகளைப் பாடி கொண்டாட வேண்டுமா? சிங்கில்ஸ்களும் பாட்டுப் பாடி காதலர் தினத்தைக் கொண்டாடுவார்கள். எப்படி என்கிறீர்களா? இப்படிதான்.

  வேணா மச்சான் வேணா இந்தப் பொண்ணுங்க காதலு - ஒரு கல் ஒரு கண்ணாடி : இந்தப் பாடல் வந்த சமயத்தில் சிங்கிள்ஸ்களுக்கெல்லாம் உற்சாகம். எங்கு பார்த்தாலும் இந்த பாடல் வரிகள்தான். அம்மா பார்க்கும் பெண்ணை திருமணம் செய்து கொள் , நீயாகவே காதலியை தேடாதே என காதலை எதிர்த்து சந்தானம் பாடும் பாடல் இது. மேலும் காதலை விடவும் நட்பு தான் என்றும் துணை நிற்கும் என வரும் இந்த வரிகள்தான் இந்தப் பாடலை வரவேற்க வைத்தது.

  ' isDesktop="true" id="692373" youtubeid="Q_RiJmvmcyQ" category="relationship">

  ஒத்தக்கட ஒத்தக்கட மச்சான் - பாண்டிய நாடு : விஷால் ஹீரோவாக நடித்திருக்கும் இந்தப் படத்திலும் லக்‌ஷ்மி மேனன் மீதான காதலை வேண்டாம் எனக் கூறும் நண்பர்கள் கூட்டம் தான் இந்தப் பாடலைப் பாடுவார்கள். விக்ராந்த் தான் இந்தப் பாடலில் நடித்திருப்பார். காதல் வந்தால் தாடி வளர்க்கனும், காதல் ஜெயித்தால் கல்யாணம் இல்லையேல் மரணம் என்கிற வரிகள்தான் இந்தப் பாடலுக்கு வலு சேர்த்திருக்கும்.

  ' isDesktop="true" id="692373" youtubeid="H815xo9MH9I" category="relationship">

  வர வரக் காதல் கசக்குதய்யா - ஆண் பாவம் : பாண்டிய ராஜன் அன்றே காதலை எதிர்த்து இந்தப் பாடலை பாடியிருப்பார். அதுவும் இளையராஜா இசையில் இளையராஜாவே பாடியதும் இந்தப் பாடலின் கூடுதல் சிறப்பு. இதில் காதலித்த யாரும் இன்று உருப்படியான வாழ்க்கை வாழவில்லை. அதனால் நேரத்தை வீணடிக்காமல் வாழ்க்கையில் முன்னேர முயற்சி செய்யுங்கள் என்ற கருத்துக்களே இந்தப் பாடலில் ஓங்கி ஒலிக்கும்.

  ' isDesktop="true" id="692373" youtubeid="o4WthgYpC78" category="relationship">

  ஊதுங்கடா சங்கு - வேலையில்லா பட்டதாரி: இந்தப் பாடல் தனுஷ் தன் வாழ்க்கை மீதான வெறுப்பில் பாடக் கூடிய பாடல். அதில் Single i'am young என்கிற வார்த்தையும் அதற்கு ஈடான இசையுமே இந்தப் பாடலை வெற்றி பெற வைத்தது.

  ' isDesktop="true" id="692373" youtubeid="RCXzH27eOIA" category="relationship">

  ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம் - கழுகு:

  அந்தப் பாடலில் அவசரக் காதல் தான் இருக்கிறது. உண்மைக் காதல் எங்கோ ஓர் இடத்தில்தான் இருக்கிறது என்கிற வரிகள் இதில் இடம் பெறும். இந்தப் பாடலும் சிங்கிள்ஸ்களின் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

  ' isDesktop="true" id="692373" youtubeid="VDZkBusrvgg" category="relationship">

  ஆடாத ஆட்டமெல்லாம் - மௌனம் பேசியதே:

  இந்தப் பாடல் வாழ்கைத் தத்துவத்தை சொல்லும் பாடல். காதலித்து நேரத்தை வீணடிப்பதைவிட வாழ்கையின் ஆழத்தை அறிந்து வாழ்ந்து பாருங்கள். அதுவே வண்ணமயமானது என்பன போன்ற வரிகள்தான் அதிகமாக ஒலிக்கும்.

  ' isDesktop="true" id="692373" youtubeid="FaeIznZabZ4" category="relationship">

  சிங்கிள் பசங்க - நட்பே துணை: தற்போது ஹிப் ஆப் தமிழாவின் நட்பே துணை படத்தில் சிங்கிள் பசங்க என்கிற பாடல் வெளியாகி சிங்கிள்ஸ்களிடையே நல்ல ஆதரவைப் பெற்றுள்ளது.

  ' isDesktop="true" id="692373" youtubeid="q9X_3gfZ9lY" category="relationship">

  இதில் காதலி இல்லாமல் சிங்கிளாக இருந்து தவிக்கும் இளைஞர்களின் கதறலை சொலும் பாடல்.

  Published by:Sankaravadivoo G
  First published:

  Tags: Lovers day, Valentines day