Work from home : நாள் முழுவதும் அடுத்தடுத்த மீட்டிங் உங்கள் மனநிலையை பாதிக்கிறதா..? இந்த 7 வழிகளைப் பின்பற்றுங்கள்..!

தொடந்து ஆன்லைன் மீட்டிங், சாட்டிங், மெயில் செக் என தொழில் நுட்பங்களுடனான உறவு தற்போது அதிகரித்திருக்கலாம்.

Work from home : நாள் முழுவதும் அடுத்தடுத்த மீட்டிங் உங்கள் மனநிலையை பாதிக்கிறதா..? இந்த 7 வழிகளைப் பின்பற்றுங்கள்..!
வீட்டிலிருந்து அலுவலகப் பணி
  • Share this:
கொரோனா அச்சுறுத்தலால் அதன் பரவலைத் தடுக்க தனியார் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்தே பணியாற்ற அறிவுறுத்தியுள்ளது. வீட்டில் அலுவலக வேலை என்பது அத்தனை இன்பகரமானதில்லை என்பதை தற்போது நீங்கள் உணர்ந்திருக்கக் கூடும்.

தொடந்து ஆன்லைன் மீட்டிங், சாட்டிங், மெயில் செக் என தொழில் நுட்பங்களுடனான உறவு தற்போது அதிகரித்திருக்கலாம். இந்த நிலை உங்களை மனதளவில் கடுமையாக பாதித்திருக்கக் கூடும். இதை கட்டுப்படுத்தி மனதை ஆசுவாசப்படுத்த இந்த 7 வழிகளை பின்பற்றுங்கள்.

அனைத்து மீட்டிங்குகளையும் ஏற்காதீர்கள். முக்கியமான மீட்டிங்கிற்கு மட்டும் பங்கு பெறுங்கள். தேவையற்ற மீட்டிங்கை தவிர்ப்பதே பாதி டென்ஷனை குறைக்கும்.




மீட்டிங்கில் கேட்கப்படும் கேள்விகளுக்கு நீண்ட நேரம் பேச்சை இழுக்காமல் சுருக்கமாக முடித்துவிடுங்கள். எதற்கான மீட்டிங் என்பதை தெரிந்துகொண்டு முன் கூட்டியே அதற்கு தயாராகுங்கள். குறிப்புகளை எழுதி வைத்துக்கொள்ளுங்கள். இதனால் கடைசி நேர டென்ஷனைத் தவிர்க்கலாம்.

எப்போதெல்லாம் மீட்டிங் உள்ளது என்கிற நேரத்தை குறித்துக்கொண்டு அதற்கு இடைப்பட்ட நேரம் எவ்வளவு உள்ளது என்பதை கணக்கிட்டு அதில் மற்ற அலுவலக வேலைகளை செய்துகொள்ளுங்கள். நேரம் கிடைத்தால் ரிலாக்ஸாக ஓய்வு எடுங்கள்.மன அமைத்திக்கு 30 நிமிடங்களாவது தினமும் ஓய்வு எடுங்கள். மனதை ஒருங்கினைக்க உதவும்.

கொரோனா அச்சுறுத்தல்: ஹோட்டலில் ஆர்டர் செய்து சாப்பிடுவது சரியா..? கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?

உடற்பயிற்சியுடன் நாளை துவங்குங்கள். இது மூளையின் சுறுசுறுப்பிற்கு உதவலாம்.

ஒவ்வொரு ஒரு மணி நேரத்திற்கும் 10 நிமிடங்களாவது ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள். நீண்ட நேரம் அமர்ந்துகொண்டே இருக்காதீர்கள்.

ஆரோக்கிய உணவு , தண்ணீர் குடித்தல் இவற்றை மட்டும் மறந்துவிடாதீர்கள். நொறுக்குத் தீனிகளை தவிர்ப்பது நல்லது.

வீட்டிலேயே இருப்பது எரிச்சலை உண்டாக்குகிறதா..? ஆலியா பட் தரும் இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க..!

பார்க்க :

 

 
First published: April 6, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading